![]() |
.tamilmirror.lk : 24 வயது பல்கலைக்கழக மாணவி கொலை:“சப்ரைஸ் கொடுத்தேன்” காதலன் வாக்குமூலம்
விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்யப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.





