செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தங்கம் விலை அண்மையில் குறையும் வாய்ப்பில்லை ... Karthikeyan Fastura

Karthikeyan Fastura : 2018 ஏப்ரலில் 2.27 ட்ரில்லியன் அளவிற்கு சந்தை மதிப்பு கொண்ட NSE Stock Exchange, இந்த வருடம் மார்ச் 31ந்தேதியில் 1.463 ட்ரில்லியன்க்கு குறைந்துள்ளது. 800 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 60 லட்சம் கோடிகள்) அளவிற்கு இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த வேகத்தில் சரிந்தால் இன்னும் ஓராண்டு காலத்தில் ட்ரில்லியன் டாலர் பங்குசந்தை என்ற அடையாளத்தை இழக்ககூடும். இரண்டாண்டுகளில் இந்த 60 லட்சம் கோடிகள் எங்கே போனது என்றால் அது தன் மதிப்பை இழந்திருக்கிறது. FII எடுத்துக்கொண்டு விலகியது 10% தான் இருக்கும். மீதி 90% என்பது சந்தையின் மதிப்பு இழந்துள்ளது அவ்வளவே.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிலத்தை 1 கோடி ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். திடிரென்று அந்த நிலத்தின் அருகே உயிருக்கு ஆபத்தான ஒரு தொழில்சாலை வருகிறது. அங்கே யாரும் நிலம் வாங்க தயாராக இல்லை. இப்போது நீங்கள் அந்த நிலத்தை 50 லட்சத்திற்கு விற்க முடிவு செய்கிறீர்கள். மீதி 50 லட்சம் எங்கே போனது? மதிப்பு குறைந்து போனது அவ்வளவே.

மாறன் தேவைப்படும் நேரம் இது: வைகோ பேச்சு

தினகரன் : சென்னை: மத்தியில் புதிய கல்விக் கொள்கையை திணிக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்றனர். இந்த நேரத்தில் முரசொலி மாறன் தேவைப்படுகிறார். அவரின் மாநில சுயாட்சி தேவைப்படுகிறது என வைகோ புகழாரம் சூட்டினார். மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி, காணொலி மூலம் பேசியதாவது: முரசொலி மாறனை பொறுத்தவரை எந்த காலத்திலும் கடிந்து கொண்டதில்லை. கொஞ்சம் கூட முகதாட்சண்யம் இல்லாமல் அவர் பேசி விடுவார் என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஒரு நாளும் என்னை கடிந்து கொண்டதில்லை. எல்லா நாட்களிலும் அவரிடம் ஆலோசனை பெற்று தான் நாடாளுமன்றத்துக்கு பேச செல்வேன். ஒவ்வொரு கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும் போது எனக்கு அவ்வளவு ஊக்கமும், ஆக்கமும் தந்தார்.

எஸ்.பி. பாலசுபிராமணியம் நெருக்கடியான நிலையில் தொடர்கிறார்: மருத்துவமனை அறிக்கை

hindutamil.in : எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார் என்று
மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பாதிப்பால் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நெருக்கடியான நிலையில் தொடர்கிறார். அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

சொதப்பும் ஐ-பேக்... கொதிக்கும் திமுக... இதுவரை பிரசாந்த் கிஷோர் டீம் செய்தது என்ன..?

 Arsath Kan-tamil.oneindia.com : சென்னை: திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன செயல்பாடுகள் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய டீமில் பாதிபேர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதால், அனுபவமற்ற புதிய நபர்களை கொண்டு திணறி வருகிறார் பி.கே. சமூக வலைதளங்களில் திமுக மீதான விமர்சனங்களுக்கு ஐ-பேக் குழுவில் இருந்து சரியான பதிலடி கொடுப்பதில்லை என்பது கட்சி சீனியர்களின் கருத்தாக உள்ளது.        கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்.. டிக்டாக்கை அடுத்து அலிபாபாவிற்கும் அதிரடி செக்! தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் வகுப்பதில் ஸ்பெலிஸ்ட் என பெயரெடுத்த பிரசாந்த் கிஷோரை அறியாத தலைவர்களே இந்தியாவில் இருக்கமுடியாது.           தங்கள் கட்சியின் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் கொண்டு வர இவரிடம் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையிலேயே பயணப்பட விரும்புபவர். தமிழகத்தில் இருந்து கூட மக்கள் நீதி மய்யம், அதிமுக சார்பில் கடந்தாண்டு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு - ஐகோர்ட்டு அறிவிப்பு

மாலைமலர் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியதை எதிர்த்தும், ஆதரித்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை இன்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு - ஐகோர்ட்டு அறிவிப்பு சென்னை ஐகோர்ட் சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலை


ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மின்னம்பலம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது.  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள், “நாட்டில் இயல்புநிலை திரும்பிய பின்னரே ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தினர். இதுபோலவே தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.    இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவில், “கொரோனா நேரத்திலும் கூட வாழ்க்கை முன்னேறிச் சென்றுகொண்டுதான் உள்ளது. அதுபோல நாமும் முன்னேறிச் சென்றுகொண்டுதான் இருக்க வேண்டும்” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

லட்டியால் வெளுத்த போலீஸ் 83 வயது முதியவருக்கு எலும்பு முறிவு! மகனுக்கு கண் பார்வை போச்சு! எடப்பாடியின் காக்கிகள்!

ariyampalayam

நக்கீஎரன் : சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் வலது கை எலும்பை முறித்துள்ளனர், காவல்துறையினர். அவருடைய மகனை தாக்கியதில் கண் பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60

ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது.   

H-1B visa : இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அளித்த உறுதி

tamil.oneindia.com - VelmuruganP : வாஷிங்டன்: தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தவர் தான் ஜோ பைடன்.

இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக ஜோ பைடன் பல்வேறு சலுகைகளை அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

 சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

மின்னம்பலம் : சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன் பின் ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே 7ஆம் தேதி சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள 4,550 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. திறந்த முதல் நாளிலேயே 170 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இதைத் தொடர்ந்தும், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், சனிக்கிழமைகளில் 150 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் . அப்புறம் ஏன் இந்த பாஸ் நடைமுறை?

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: வழங்கும் முறை  தமிழகத்தில் அமலுக்கு வந்தது

தினத்தந்தி : சென்னை, ; தமிழகத்தில் விண்ணப்பிக்கும்  அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது.

M.S Dhoni தோனி ஜார்கான்ட் மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்ய மறுத்ததால் பழிவாங்கப்பட்டார்

எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது தான். 

இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது.        2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.        ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது.      ஆளும் கட்சியான பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது.       அந்த நேரத்தில் பாஜக'விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். ஆம்! இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது.  பாஜக உடனடியாக அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் MS.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

Facebook முகநூல் - பாஜக ஆர் எஸ் எஸ் திருட்டு தொடர்பு அம்பலம் ..

Raja Sridhar : : · அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு முகநூல் இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக
இருக்கிறது. தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூளில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது. அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு

முகநூல்  இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூளில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது.

விரதம் பூஜை அபிசேகம் வேண்டுதல் சாபவிமோசனம் புராணங்கள் எல்லாம் கோயில் பூசகர்களாலும் பார்ப்பனர்களாலும் புனையப்பட்ட பொய்கள் . .. யாழ்ப்பாணம் திரு ந.ச. கந்தையாபிள்ளை

Dhinakaran Chelliah

: விரதமோ விரதம் சமீபத்திய பதிவு ஒன்றில் மச்ச புராணத்தின் ஆங்கிலப் பதிப்பின், எழுபதாவது அத்தியாயத்தை அப்படியே தந்திருந்தேன். அதைத் தமிழில் எழுதுவதற்கு விருப்பமில்லை,  அந்த அளவிற்கு ஆபாசமாய் இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அந்த அத்தியாயத்தின் தமிழாக்கப் பகுதியை யாழ்பாணத்து நவாலியூர் திரு.ந.சி.கந்தையாபிள்ளை  அவர்கள் எழுதிய “ஆரிய வேதங்கள்” எனும் நூலில் வாசிக்க நேர்ந்தது.    இந்த நூல் 1947 ல் ஆண்டு பதிப்பு ஆகும். அதாவது, பிரம்மாவிற்கும் சிவனுக்கும் சம்பாஷணை நடக்கிறது. பிரம்மா, சாதாரண மானுடப் பெண்மனிகளின் நடத்தையும் அவர்களது கடமைகளைப் விவரிக்கும்படி சிவனிடம் கேட்கிறார் அதற்கு சிவபெருமான்,மேற்சொன்ன யுகங்களில் கிருஷ்ணனுக்கு 16000 மனைவிகள் உண்டு. இவர்கள் தேவலோக கன்னிகைகள். ஒரு சமயம் நாரத முனிவரை வணங்காத பாவத்தினால் அவரது சாபத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். தேவ கன்னிகளாக இருந்த இந்தப் பெண்கள் சாதரண மானுடப் பெண்களாக பிறப்பெடுக்கிறார்கள்.

தமிழக பஜாக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் ....

tamil.indianexpress.com : வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,பாஜக
வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். முன்னதாக, சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வி.பி துரைசாமி,”சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், தமிழக அரசியல் களம் திமுக vs பாஜக என உருவெடுத்துள்ளது. நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்  . 

இந்நிலையில், தமிழக பாஜாகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய  எல்.முருகன், ” அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சியே, தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும்  நிலை உருவாகும்” என மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் : என்னை கறுப்பு இன பெண்ணாகவே பார்க்கும் .. எனவே தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக ..

BBC :கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள் . 16 ஆகஸ்ட் 2020 கமலா ஹாரிஸின் ஒரேயொரு பலவீனம் இதுதான் - தாய்மாமா பகிரும் புதிய தகவல்கள்" அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான செனட்டர் கமலா ஹாரிஸ், தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடந்ததையும், தனக்கு இட்லியை பிடிக்க வைக்க தனது தாய் எடுத்த முயற்சிகளையும் நினைவுகூர்ந்து பேசினார் .துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக இந்திய அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது இந்தியப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.

இந்தியர்களுக்கு சுதந்திர வாழ்த்து தெரிவித்த அவர், "இன்று ஆகஸ்ட் 15. தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் துணை அதிபர் வேட்பாளராக நான் உங்கள் முன் நிற்கிறேன்" என அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "என் அம்மாவிற்கு 19 வயதாக இருக்கும்போது கலிஃபோர்னியா வந்திறங்கினார். அப்போது அவரிடம் எதுவுமில்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவரிடம் இருந்தது.

சவுக்கு சங்கர் : எதை கொண்டாடுவது ?

Savukku · 15/08/2020 : எந்த சுதந்திரத்துக்காக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்களோ, சிறைப்பட்டார்களோ, சித்திரவதைகளை எதிர்கொண்டார்களோ, சொத்துக்களை இழந்தார்களோ, துப்பாக்கிக் குண்டுகளை ஏந்தினார்களோ, தடியடி பட்டார்களோ அந்த சுதந்திரம் பாசிச சக்திகளால் பறிக்கப்படுவதை கொண்டாடவா ?    

நாடு விடுதலையடைந்தபின் பல நாடுகளின் உதவியோடு  இந்தியாவில் உருவாக்கப்பட்ட, இந்தியாவை பின்னாளில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் அக்கு அக்காக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவே அதைக் கொண்டாடவா ?    ஒரு நாளில் இரு நாடுகள் உருவாகும் நேரத்தில், ஒரு நாடு மதத்தின் அடிப்படையில் உருவானபோது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  அந்த முடிவு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு,  இந்தியாவும் மதவெறி நாடாக மாறியதை கொண்டாடவா ?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வாக்குவங்கி எத்தனை சதவிகிதம்? திமுக நடத்திய ஆய்வு முடிவு!

மின்னம்பலம் : தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே தொடருமா அல்லது அதில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து, அரசியல் நகர்வுகளை ஒட்டி கணிப்புகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பதை      தனது கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கும் பாஜக அதை பல மாநிலங்களில் செயல்படுத்தவும் முனைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய அளவில் காங்கிரஸ் இன்னும் ‘கொஞ்சம் பலத்தோடு’ இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கருதுகிறது பாஜக. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்கி வைக்க வேண்டும் என திமுகவுக்கு பாஜக அழுத்தம் தருவதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் வருகின்றன.     

ஆனால் இப்போது வரை தமிழகத்தில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியது, கூட்டணி என்று அறிவித்துவிட்டு காங்கிரஸுக்கான இடங்களிலும் திமுகவே போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த அறிக்கைப் பிரச்சினை டெல்லி வரை எதிரொலித்தது. சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் டெல்லியில் இருந்துகொண்டே திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு புறக்கணித்தார். இதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணி மேலும் ஒரு ரிஸ்க்கை சந்தித்தது.

பெண்களின் திருமண வயதை மாற்றியமைக்கப்படுகிறது . 21 வயதாக உயர்த்த ஆலோசனை .

மின்னம்பலம் : பெண்களின் திருமண வயதை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74ஆவது சுதந்திர தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாபெண்களின் திருமண வயது மாறுகிறது!க தெரிவித்தார்.

தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ள நிலையில், “பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர்களின் திருமண வயதை 21 ஆக மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த முடிவு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களின், உயர் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் வாய்ப்புகளை உயர்த்தவும், தாய்வழி இறப்பு விகிதத்தை குறைக்கவும், பெண்களுக்கு ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ... உலக அளவில் இந்திய முதலிடம்

tamil.oneindia.com  vishnu-priya உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது! 

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.      இதுவரை கொரோனாவிலிருந்து 1.4 கோடி பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 55 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53, 523 ஆகும்.

இதுவரை 1.72 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். பிரேசிலில் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 38,937 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அங்கோடா லொக்கா: கடல் கடந்த போதைக் கழுகின் கதை!

மின்னம்பலம் : கோவையில் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்துபோன பிரதீப் சிங் என்பவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழக போலீஸாருக்கு, அந்த உடலுக்குப் பின்னால் ஒரு கடல் கடந்த கதை இருப்பதும், அந்த கதை குற்றங்கள் நிறைந்த கதை என்பதும் தெரியவந்தது.அங்கோடா லொக்கா: கடல் கடந்த போதைக் கழுகின் கதை!

அங்கொடோ லொக்கா என்ற இலங்கை போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதாதான் இங்கே கோவையில் பிரதீப் சிங் என்ற வேறு ஒரு பெயருக்குள் புகுந்து போலி ஆதார் கார்டு வரை எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

கடந்த ஜூலை முதல் கோவை விமான நிலையத்தில் இருந்து இரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அமைதியான ஏரியாவான கோய

முத்தூர் பாலாஜி நகர் இப்போது பரபரப்பு நகராகியிருக்கிறது. அங்கோடா லோக்கா அல்லது பிரதீப் சிங் அல்லது மத்துமகே லசந்தா சந்தனா பெரேரா என்ற பெயர்களுக்கு சொந்தமான அந்த நபர் அந்த பகுதியில் உள்ள தோசைக் கடைக்கு அருகேதான் வசித்திருக்கிறார்.    

"48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை... சீராக உள்ளது .. மருத்துவர் சொல்வது என்ன?"

மின்னம்பலம்  ; பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த இரு நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வ ருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, மருத்துவ உதவி வழங்க அரசு தயாராக இருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நேரில் சென்று பார்த்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாடகர் எஸ்பிபி பூரண நலம் பெற வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். எனவே மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தோம். எஸ்பிபிக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

"சார் அசிங்கப் படுத்தீட்டாங்க" -ஓ.பி.எஸ். தரப்பு குமுறல்!

nakkheeran.in - ஜீவாதங்கவேல் : o panneerselvam - edappadi palanisamy

                           தமிழக அரசியலில் ஆளும் கட்சியான அதிமுகவில் யார் தொடர்ந்து பதவியில் இருந்து வருவது என்கின்ற பதவிப் போட்டி தொடங்கிவிட்டது அதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியா? அல்லது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வமா? என்கிற பதவிப் போட்டி கடந்த இரு வாரமாக நடந்து வருகிறது.  

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிலும் சீனியர் அமைச்சர்கள் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்கள். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிப்பதில் எடப்பாடி தரப்பு மிகவும் பலமாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என கூறியிருக்கிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளது

இதன் பின்னணியில் ஓ பன்னீர்செல்வம் முத்தரப்பு கூறுவது என்னவென்றால், 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருக்கும்போது அவரை ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தன்னை மிகப்பெரிய ஆளுமையாக நடத்தியுள்ளார். விழா நடக்கும்போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அந்த இடத்தில் இருந்தபோது தனியாக நிற்கச் சொல்லி சார் அவமானப்படுத்தி விட்டார்கள் என ஓபிஎஸ் தரப்பு வெளிப்படையாகவே கூறியுள்ளது.

BBC : தேர்தலுக்கு முன்னர் சீன தூதரக அதிகாரிகள், இலங்கையின் அரசியல் தலைவர்களுடன்....

ஸ்ரீலங்கா பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு குடும்ப அதிகாரத்தை பலப்படுத்திய பின்னர் புதுடெல்லியின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.     இந்த தகவலை இந்திய செய்தித்தாளான எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜபக்சர்கள் பாரம்பரியமாக சீனர்களுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், பிரதமரின இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டபயா, 2019 ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதுவரை நடவடிக்கையும் எடுப்பதைத் தவிர்த்துவிட்டார்.

இருப்பினும், அனைத்து கண்களும் இப்போது மூத்த ராஜபக்ஷவின் மீது உள்ளதாக எக்கானமிக் டைம்ஸ் கூறியுள்ளது. ஏற்கனவே அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெய்ஜிங்குடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டார் என்பதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை இந்தியா கவனித்து வருவதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? எம் எல் எம் கம்பனியின் இரு முதலாளிகளும் இருவேறு பாதையில்?

    Jeyapal - Samayam Tamil : அமைச்சர்கள் சுமார் 10 பேர் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஓபி எஸ் ஈ பி எஸ் :     அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அமைச்சர்கள் பத்து பேர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அமைச்சர்கள் பத்து பேர் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்றுவருகின்றன. ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பது விடை தெரியாத முக்கிய கேள்வியாக உள்ளது.

கோர்கோ சாட்டர்ஜியின் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாடு குரல்கொடுக்கவேண்டும் ஆழி செந்தில்நாதன் கோரிக்கை!

Aazhi Senthil Nathan : · கோர்கோ சாட்டர்ஜியின் உயிருக்கு ஆபத்து.
அவரைக் காப்பாற்ற தமிழ்நாடு குரல் கொடுக்க வேண்டும்! அனைத்து தோழர்களுக்கும். தனிப்பட்டமுறையிலும் இந்தியாவிலுள்ள மொழியுரிமையாளர்களின் சார்பிலும் என்னுடைய அதியவசர கோரிக்கை. நமது வங்க நண்பர் டாக்டர் கோர்கோ சாட்டர்ஜி அசாம் பாஜக போலீசால் சித்ரவதைக்கு உள்ளாகவோ அல்லது கொல்லப்படவோகூடிய நிலையில் இருக்கிறார். அவரை உடனே காப்பாற்றவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். பின்வரும் கடிதத்தை அவர் இப்போது வெளியிட்டிருக்கிறார். அதன் தமிழாக்கத்தை விரைவில் கொண்டுவருகிறோம். ஆனால் அதற்காக காத்திராமல் நமது நண்பர்கள் அனைவரும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிடமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அசாம் தொடர்பாக கோர்கோ கூறிய ஒரு கருத்தை முன்வைத்து அசாமிலும் வங்காளத்திலும் உள்ள பாஜகவினர் அவர் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.