புதன், 3 பிப்ரவரி, 2016

கிராம மக்களுடன் சாப்பிட்ட ராகுல்


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆந்திரபிரதேச மாநிலம்
ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்ட்லா பள்ளிக்கு சென்றார். காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தனர் என நினைவுகூர்ந்தார்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ரோஹித் வெமுலா...பிறப்பு ஏன் மர்மமாகியது? மனிதகுலமே வெட்கப்படவேண்டிய நேரம் இது...

ரோஹித்தின் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று இதைப் பதிவேற்றுவது
தற்செயல் நிகழ்வுதான் எனினும், தன் பிறப்பே மரணத்தையொத்த விபத்து என்று ஏன் சொன்னார் ரோஹித் என்பதற்கான சான்று இப்பதிவு. ரோஹித் பிறப்பதற்கும் முன்பே தொடங்கிவிட்டது அவரின் துயரம் என்றுதான் கூறவேண்டும். எதை எழுதினாலும் மொழிபெயர்த்தாலும் அதை பகிருங்கள் என்று கூறி இதுவரை முகநூலில் வேண்டுகோள் வைத்ததில்லை. முதன்முறையாகக் கேட்கிறேன். நண்பர்களே! இப்பதிவு அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலித் வாழ்க்கையின் மிகப்பெருந்துயரத்தைத் தாங்கிய ரோஹித்தின், அவரது தாய் ராதிகாவின், அவரது சகோதரர் ராஜாவின் இக்கதை இந்தியாவில் உள்ள, உலகில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இதிலுள்ள தகவல்களைத் திரட்ட ஒரு செய்தியாளராக எத்தனை சிரமங்கள் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை எழுதிய சுதிப்டோ மோண்டலுக்கு நன்றியும் சிரந்தாழ்ந்த வணக்கங்களும்.
தோழமையுடன் கவின்மலர்-

கிருஷ்ணகிரி ;14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம்..வெளியே வந்து மீண்டும் 17 வயதில் பாலியல் பலாத்காரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த சிறுவன் ஏற்னவே தனது 14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திக் கைதாகி சிறுவர் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்தவன். Teenager commits second rape in 3 years 3 ஆண்டு தண்டனை (சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனையே அவ்வளவுதான் - கொலையே செய்தாலும் கூட) முடிந்து திரும்பி வந்த அவன் தற்போது 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மீண்டும் சிக்கியுள்ளான். இந்த சம்பவம் சூளகிரியை அதிர வைத்துள்ளது. திங்கள்கிழமை மாலை இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. இந்த அக்கிரமத்துக்கு ஆளான சிறுமி, குண்டு குருக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஆவார்.  பாலியல் குற்றத்திற்கு உரிய தண்டனை  வயது எல்லையை 14 ஆக குறைக்கவேண்டும்

சு.சாமி :திமுக-தேமுதிக-பாஜக கூட்டணி உருவாகும்: மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்...என்னா அக்கறை?

"Subramanian Swamy" : I am hopeful the MK will decline to be CM candidate and make Stalin leader. Then hope BJP align Stalin and Vijaykanth in a new alliance
திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் உருவாகும் என எதிர்பார்க்கிறேன் என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், முதல் அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை திமுக தலைவர் கலைஞர் அறிவிப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.திமுக யாரோடு சேரவேண்டும் திமுகவில் யார் யார் முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்றெல்லாம்இந்த  பார்பன பாம்பு பாடம்  நடத்தவேண்டும் என்று யார் அழுதா? பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஸ்டாலினுக்கு இனிப்பு காட்டி திமுகாவுக்கு நஞ்சை ஊட்டும் ஒரு வஞ்சக முயற்சிதான் இது.

கருவில் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்படும்..மேனகா காந்தி

ஜெய்பூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின பரிசோதனை மீதான தடை நீக்கப்படக்கூடும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு கொண்டார். Ban may go, sex test on foetus could be mandatory: Maneka Gandhi நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின பரிசோதனை மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது. மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது கட்டாயம் ஆக்கப்படும். அப்படி குழந்தை ஆணா, பெண்ணா என்பது கண்டறிந்து பதிவு செய்யப்படும். கருவை கலைத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும்.

விஜயகாந்தின் மொதலாளி சுப்பிரமணியம் சாமி.. அந்த துரை சொல்றதை.....

விஜயகாந்தின் வாக்கு வங்கி மிகவும் சரிந்தே போய்விட்டது. தேமுதிகவின்
இன்றைய வீழ்ச்சிக்கு வழிகோலியது விஜயகாந்தும் பிறேமலதாவும்தான். ஜெயலலிதாவை போல் இனி ஒருவர் அரசியலில் வருவது முடியாத காரியம்.

விஜயகாந்த் தன்னை ஒரு எம்ஜியராகவும் எண்ணி எம்பி எம்பி குதிக்க பிறேமலதாவோ தன்னை ஒரு வருங்கால ஜெயலலிதாவாக கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டார்,
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் வரலாற்று சோகம்.
அது புரியாமல் இவர்கள் போடும் கூத்துதான் தேமுதிகவின் அரசியல்.

இவர்களின்  தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தேமுதிகவின்  அரசியல் வெறுமையை தெளிவாக காட்டுகிறது.
சுப்பிரமணியம் சாமி அமித்ஷா போன்றோரின் அட்டவணைக்கு ஏற்ப அரசியல் நடத்தும் பாமரத்தனம் இவர்களிடம் தெரிகிறது.

சுப்பிரமணியம் சாமிக்கு எப்படியும் திமுகவை ஒழிக்கவேண்டும். கலைஞரை கேவலப்படுத்த வேண்டும் . இந்த  நோக்கங்களை இந்த தராதரம் அற்றவர்கள் மூலம் செய்துவிடலாம் கனவு காண்கிறார்.

விஜயகாந்த் திமுகவோடு பேரம் பேசுவது தனது கியாதி எவ்வளவு என்று தானே தெரிந்து கொள்ளவும் பாஜகவிடம் தனது ரேட்டை ஊட்டி காட்டவும்தான்.

மகாராஷ்டிராவில் 14 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி,

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும்அப்போது கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. இருப்பினும் குளிக்கும் உற்சாகத்தில் ஒவ்வொருவராக கடலுக்குள் சென்றனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலில் குளித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் 4 பேரை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.
அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

ஆ.ராசா: மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தே முடிவுகளை எடுத்தேன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு....

ஆ.ராசா ஒரு பைசா கூட ஆதாயம் பெறவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும், ‘புதிய தொலைத்தொடர்பு கொள்கை-1999‘ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்க வேண்டும். அந்த கொள்கையின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? மன்மோகன்சிங் அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது, 122 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதில், அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் மீது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, 122 உரிமங்களையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததுடன், ஏல முறையில் அவற்றை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டது.

சரிதா நாயர்: அரசியல் வாதிகள் என்னை உடல், மன ரீதியாக பயன்படுத்தினார்கள்

திருவனந்தபுரம்: பல அரசியல்வாதிகள் தன்னை உடல் ரீதியாகவும், மன
ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாக சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வரும் கமிஷன் முன்பு தொழில் அதிபர் சரிதா நாயர் திங்கட்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் அரசியல் தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு அதை நிரூபிக்கும் வகையில் 3 சி.டி.க்களையும் அளித்தார். Politicians 'used' me, says Kerala solar scam accused Saritha Nair விசாரணை கமிஷன் முன்பு அவர் கூறுகையில், இன்று நான் ஆடியோ மற்றும் வீடியோ சி.டி.க்களை அளித்துள்ளேன். அவற்றில் காங்கிரஸ் தலைவர் தம்பனூர் ரவி, எம்.எல்.ஏ. பென்னி பெஹனன், முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலிம் ராஜ், தொழில் அதிபர் ஆபிரகாம் கல்லிமன்னல் ஆகியோருடனான உரையாடல் உள்ளது.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...சாட்டை எடுத்த நமிதா இவங்கதான்!

vikatan.com சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..!
 
’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

புதுச்சேரியில் பிரியங்கா காந்தி மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்தார்

புதுச்சேரி: மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க புதுவைக்கு
வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி மகளின் கூடைப் பந்து விளையாட்டை பார்க்க பிரியங்கா காந்தி இன்று புதுவை வந்துள்ளார். அகில இந்திய இளையோர் கூடைப்பந்து போட்டி நாளை புதுவையில் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 25 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் டெல்லி அணி சார்பில் பிரியங்கா காந்தி மகள் மரியா பங்கேற்று விளையாட உள்ளார்

திமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்த விஜய்.....

சென்னை,பிப்.01 (டி.என்.எஸ்) விரைவில் வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், திமுக-வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டபை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் அறிவித்தார். மேலும் அவருடைய ரசிகர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட செய்ததுடன், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், அதிமுக ஆட்சியைப் பிடித்தப் பிறகு விஜய் நடித்த படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்தபோது, எந்தவிதம் உதவியையும் செய்யவில்லை.

யோகா குரு விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !

ஹாட்’ யோகா குரு விக்ரம் சவுத்ரி இந்திய வேதக் கலாச்சாரத்தை உலக அறியச் செய்யும் பொருட்டு பாலியல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
விக்ரம் சவுத்ரி
2013-ல் இவரது யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த ஆறு மாணவிகள் தாங்கள் சவுத்ரியால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு ‘ஹாட்’ யோகா குரு குற்றவாளி என தீர்ப்பளித்து 6.25 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.  மனிதர்கள் தோன்றமுதலே பிராணிகள் இதே யோகாசனம் போன்ற இயல்பான உடல் மன ஒழுங்கு முறைகளை பிராணிகள் இயற்கையாகவே செய்துவருகின்றன. இன்றும் கூட எனது வீட்டு நாய் விதம்விதமான போஸ்களில் சிலவேளை சில சுயபயிற்சிகளை செய்கிறது இது மிகவும் இயல்பானது , வழமை போல் பார்பனீயம் இதையும் எதோ தங்கள் கண்டுபிடிப்பு என்பது வேடிக்கை. எதன்மீதும் சம்ஸ்கிருத லேபில் ஓட்டும் வேலைதான் இதுவன்றி வேறொன்றும் இல்லை

மிடாஸ் முன்னாள் இயக்குனர் சோ ராமசாமி வேறு எப்படிப் பேசுவார்?

திமுக தலைவர் கலைஞர் 01.02.2016 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி :- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று “துக்ளக்” “சோ” பேசியது பற்றி?கலைஞர் :- மதுவகைகள் தயாரிக்கும் “மிடாஸ்” நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வேறு எப்படிப் பேசுவார்?
கேள்வி :- திருமலை நாயக்கர் பிறந்த  தினத்தையொட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று மதுரையில் அரசு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- கடந்த ஐந்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை ஆண்டுகளாக ஏன் இந்த அறிவிப்பு வரவில்லை? இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்றதும் இந்த அறிவிப்பைச் செய்கிறாரோ?

2-ஜி: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் துவங்கின

 இரண்டாம் தலைமுறை அலைகற்றை (2-ஜி) ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலான இறுதி வாதங்கள் இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளன. டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் சிபிஐ தரப்பிலான இறுதி வாதம் முடிவடைந்துள்ள சூழலில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக இன்று டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கில் ஆஜராகினர்.

கடன்...1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் ஆபத்து...விற்பனை வீழ்ச்சி.

விற்பனை வீழ்ச்சி, விலை உயர்வு போன்ற காரணங்களால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடன் சுமை நெருக்கடியால் 'பில்டர்'கள் தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், புதிய குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வீடு வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பிற தொழில்கள், நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் இதர சேவை துறைகளில் பணி புரிய வருவோர், சென்னையில் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், புதிய கட்டுமான திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு, 8,000 கட்டுமான திட்டங்களுக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 900 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர். மகள் லக்ஷ்மி புகார்...300 கோடி மோசடி பத்மநாபன்,தமிழ் கைது

கூடுவாஞ்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் வீடுகளை கட்டித்
தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். மேலும் அதற்கான வீட்டுக் கடன் தொகையையும் தனியார் நிறுவனத்திடம் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் முதல் குறிப்பிட்ட தொகையை கட்டுமான நிறுவனத்திடம் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு சாவியை அவர்கள் வழங்க வேண்டும். ஆனால், யாருக்கும் வீட்டு சாவியை கொடுக்க வில்லை. இதையடுத்து பணம் கட்டியவர்கள் வீடு கட்டப்படுவதாக கூறிய நுங்கம்பாக்கம் கிராமத்திற்கு சென்று பார்த்ததனர். அங்கு காலி மனையாக இடம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்தபோது, ‘மனையிடத்தில் கட்டுமான அனுமதி பெறாமல் உள்ளது, பொது மக்கள் யாரும் வாங்க வேண்டாம்‘ என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது தெரிந்தது

மதிமுகவில் மூன்று கோஷ்டிகள்...அம்மாவா? அய்யாவா? அரசியலை விட்டே ஓட்டமா?

மதிமுகவில்  திமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் அதிமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் சத்தம் போடாமல் பிய்த்துகொண்டு போக முயற்சிப்பதாக தெரிகிறது. வைகோவின் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் சுடுமணலில் யாத்திரை செய்ய முடியாது  என்ற முடிவுக்கு பலரும் வந்து விட்டார்கள் . வைகோ ஜெயலலிதாவிடம் இருந்து எதை உறுதியாக பெறுவார் என்பதில் ஒரு நிச்சயம் இல்லாத நிலையில் அவரை நம்பி இனியும் அரசியல் நடத்த முடியுமா என்ற எண்ணத்தில் பலர் அரசியலை விட்டே ஒதுங்கும் முடிவுக்கும் கூட வந்து விட்டனர் என்று தெரிகிறது .ம.தி.மு.க. மகளிரணியை சேர்ந்த 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர் வடசென்னை ம.தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ராதிகா சந்திரகுமார் தலைமையில் 100 பேர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பெண்களிடம் வாங்கி கட்டிய ஆண்கள்.....நீயா நானா?


நான் கர்ச்சீப்பை கட்டிக்கொள்கிறேன், அல்லது வேறு எதை வேண்டும் என்றாலும் கட்டுகிறேன். அதெல்லாம் வேற யார் பிசினசும் கிடையாது. ஒரு பொண்ணா இருந்து நான் எனக்கு பிடிச்ச முடிவை எடுப்பேன். நாங்க பப்புக்கு போனா உங்களுக்கு (ஆண்களுக்கு) என்ன பிரச்சினை? என் சேலைக்கும் இடுப்புக்கு நடுவேயான, 6 செமீ இடைவெளி கலாசாரம். ஆனால், சட்டை-பேண்ட் நடுவேயுள்ள 1 இஞ்ச் ஆபாசமா? நாங்க (பெண்கள்) தண்ணியடிச்சா உங்களுக்கு என்ன? உங்களுக்கு சரக்கு பற்றாக்குறையாகிவிடுமா?என்று கேட்டார். இதைப் பார்த்து கொதித்துப் போன ஆண்கள் சகட்டு மேனிக்கு பதிவிட்டனர். எந்த மாதிரி ஆடை அணியவேண்டும் என்பது தொடங்கி அட்வைஸ் மழையை ஓசியாக கொடுத்து வருகின்றனர்.
சென்னை: பெண்ணின் நடை எப்படி இருக்கவேண்டும் என்று கூட இன்றைக்கு ஆண்கள் தீர்மானிக்கின்றனர். பெண்கள் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிக்க ஆண்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது என்று தெரியவில்லை. கடந்த ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா விவாதம் பார்த்த பிறகு பெண்களுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் பதிவிடுகின்றனர் ஆண்கள்.

பதன்கோட் தாக்குதலால் உறவு போச்சு: பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலை

இஸ்லாமாபாத்: ''பதன்கோட் தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான, வெளியுறவு துறை செயலர்களின் பேச்சு தடைபட்டுள்ளது,'' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாக்., இடையிலான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை பாதிக்கும் விதமாக, பதன்கோட் தாக்குதல் அமைந்து விட்டது' என, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், ஏழு பேர் வீர மரணம் அடைந்தனர்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.'இந்த தாக்குதலுக்கு காரணமாக, ஜெய்ஸ் - இ - முகமது தலைவன் மசூத் அன்சார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால்தான், பேச்சு தொடரும்' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? அருள்மொழி சாட்டை....

சென்னை: பத்ம விருதுகளை அடுத்தடுத்து கொடுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடிகர் ரஜினிகாந்த் சாதித்துவிட்டார் என்று திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆதாயத்துக்குதான் மத்திய பாஜக அரசு இந்த விருதை கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது: ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல. கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும்.

நாடார் மகாஜன மாநாடு தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் பங்கேற்பு

நாடார் மகாஜன சங்க மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் - சரத்குமார் பங்கேற்பு
கோவில்பட்டியில் நாடார் மகாஜன சங்க மாநாடு இன்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது nakkheeran.in

அதிமுகவின் அன்பான மக்கள் நல கூட்டணி.....?

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை அமைக்கிற கூட்டணியாக இருக்கும் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அது தமிழக அரசியலில் சாத்தியமும் இல்லை. ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இறுதியிலும் நாம் உணரக் கூடிய ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இந்த முறையும் இருக்கிறது. ஆனால் மக்களின் இந்த மனநிலையை வாக்காக மாற்றுவதற்கான சாதுரியமும் சாணக்கியத்தனமும் பணச் செல்வாக்கும் மக்கள் நலக் கூட்டணியிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளின் ரூபாய் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அந்த விலைவாசியோடு போட்டி போடும் வலிமை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே உண்டு என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பை பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐஎஸ் தலைவர் பயிற்சி

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 'ISIS leader Abu Bakr al-Baghdadi training Mumbai girls for suicide bombings through online classes' விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்தியா வழங்கிய 40 பேருந்துகளை காணல்லியா?...தொண்டமான், சிவலிங்கம்..மலையக தலைவர்கள் கைவரிசை

40 பேருந்துகளை ஏப்பம் விட்டார் ஆறுமுகம் தொண்டமான்? பேருந்துகளை
ஏப்பம் விடவில்லை - இ.தொ.கா விளக்கம்: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பேருந்துகளை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 40பேருந்துகள் வழங்கப்பட்டன.