ராதா மனோகர் : வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட்!
இலங்கைக்கு வந்து போகவும் நிரந்தரமாக தங்கவும் தொழில்களை அல்லது வியாபாரங்களை செய்யவதற்கும் உரிய வதிவிட அட்டை!
இது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கைகள் விடுத்து கொண்டே வந்துள்ளார்கள்
எனக்கு தெரிந்த சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்
இவர்களின் இந்த முயற்சிக்கு அரசு தரப்பிலும் இதர அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
விரைவில் இது அமுலுக்கு வரும் என்றும் தெரிகிறது!
நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு டக்ளஸ் தேவானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!
இது வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் செயலாகும்.
இவரின் இந்த வாக்குரிமை கோரிக்கையானது வெளிநாட்டு இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் வழங்கலை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. .
அதுவும் தோழர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து இந்த முறியடிப்பு கோரிக்கை வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
முதலில் புலம்பெயர் நாடுகளில் பெரும் பாலும் புலி ஆதரவாளர்களே இருப்பதாக அரசு நம்புகிறது,இது ஒன்றும் ரகசியம் அல்ல
இதில் ஓரளவு உண்மையும் உள்ளது
இவர்களுக்கு வாக்குரிமை கிடைத்தால் இலங்கை அரசியலில் தங்கள் கைவரிசையை நிச்சயம் காட்டுவார்கள்
இந்த பயம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தாராளமாக இருக்கும்
கடந்த கால வரலாறு அப்படி இருக்கிறது
திரு டக்ளஸ் தேவானந்தாவின் இந்த கோரிக்கையை பார்த்த பெரும்பான்மை இனத்தவர்கள் .
பார்த்தீர்களா நாங்கள் இந்த ரெசிடெண்ட் கார்ட் விவகாரத்தை பற்றி சிந்திக்க முதலே இவர்கள் வாக்குரிமை கேட்கிறார்கள்
இந்நிலையில் நாம் ரெசிடெண்ட் கார்ட் கொடுத்தால் பின்பு இவர்கள் அதற்கும் வாக்குரிமை வேண்டும் என்று கேட்பார்கள்
என்று நிச்சயம் கருதுவார்கள் அல்லவா?
இந்த வெளிநாடு வாழ் மக்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் விடயத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா ஏன் கருதி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்
எந்த காரணம் கொண்டும் வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது
ஏற்கனவே அந்தந்த நாடுகளில் அவர்களுக்கு வாக்குரிமை உண்டு
எம்பிக்களாக மந்திரிகளாக கூட அவர்கள் உள்ளார்கள்
அப்படி அவர்களுக்கு இலங்கை வாக்குரிமை தேவை என்று யாரவது கேட்டர்களா?
இல்லையே?
இதன் பின்னணியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அல்லது இந்திய அரசு இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுகிறது
இலங்கையில் எந்த நல்ல விடயமும் நடந்து விடக்கூடாது என்பதில் இந்த இரு சக்திகளும் எப்போதும் முனைப்போடு செயல்படுவது ஒன்றும் பரசியம் அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக