minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்?
விஜய்யின் வாக்குகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விவரித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டியில்,
விஜய் ஃபேக்டர் ஒரு மிஸ்டரி. அதுக்குப் பின்னால இருக்கிற அந்த ஃபோர்ஸினுடைய மூலம் தெரியல. வர்ற கூட்டத்தைப் பார்த்தா நமக்கு ஆச்சரியமா இருக்கு.
இந்த கூட்டம் வந்து எதுக்காக வருது, ஏன் வந்து அந்த கூட்டம் வந்து இவ்வளவு ஃபெரோஷியஸா இருக்குது, ஆவேசமா ஆக்ரோஷமா அவர் பின்னால வந்து வர்ற கூட்டம். ஒரு கட்டத்துல சொன்னாங்க இளைஞர்கள், வந்து ஒரு ரொம்ப இம்மெச்சூர்டு, ஸ்டூடண்ட்ஸ், யூத், கேர்ள்ஸ்னு. பட் உள்ள போனா கொஞ்சம் நடுவயதினரும் குழந்தைகளை கையில வச்சுக்கிட்டு ரோட்டுல நிக்கிறது, குழந்தைகளுடன் நடுவயது பெண்கள் ரொம்ப உற்சாகமா வந்து நிக்கிறது, இதெல்லாம் வந்து நமக்கு வந்து ஒரு புதிய ஃபினாமினன். நம்ம முதல்ல ஆரம்பத்துல நம்ம எஸ்டிமேட் பண்ண மாதிரி இல்லை. அது நிறைய பேர் ஒத்துக்கிட்டாங்க.
ஒரு சின்ன கிராமம், ஒரு பேர் அந்தப் பேரை நான் சொல்ல விரும்பல, அந்த கிராமத்துல போலிங் ஏஜெண்ட்டா பெண்கள் போய் உட்கார்ந்திருக்காங்க. சோ இது ஒரு புதிய ஃபினாமினன். இதனுடைய ஒட்டுமொத்த டெலிவரி என்ன? இதனால எவ்வளவு தூரம் வாக்குகள் பிரியுது, எவ்வளவு வாக்குகளை விஜய் வாங்குறார், அதுதான் வந்து தட் இஸ் எ மில்லியன் டாலர் கொஸ்டின். உங்களுக்கு அந்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் தமிழ்நாட்டினுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு இருக்கும், பொலிட்டிக்கல் ஸ்ட்ரேட்டஜிஸை வொர்க் அவுட் பண்றது எல்லாம் அந்த பேசிஸ்லதான் இருக்கும் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேட்டி முழுமையாக..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக