![]() |
Dailyhunt : "மே 4-ல் ஒரு மெகா ட்விஸ்ட். ஆஸ்திரேலியா டிக்கெட் கன்பார்ம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான். அதிர்ச்சியில் அரசியல் களம்".!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85.15% என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் இளைப்பாறுவதற்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாகத் தனது திரைப்படப் பணிகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தேர்தல் முடிந்தும் இன்னும் பயணத்தைத் தொடங்காமல் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கள நிலவரம் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. இதுவரை விடுமுறைக்குச் செல்லாத விஜய், மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தப் பயணம் முற்றிலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளில் தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், விஜய் தனது ஆஸ்திரேலியப் பயணத்தை ரத்து செய்துவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டால் மட்டுமே அவர் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவிற்குப் பறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தவெக-வின் முதல் தேர்தல் களம் என்பதால், அதன் முடிவுகள் விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட பயணத் திட்டங்களைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக