tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: கோடை வெயில் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கலப்படம் குறித்த கவலையும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலப்படம் என்பது மெல்ல கொல்லும் விஷம். எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களில் தொடர் சோதனைகளை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்கள் அல்லது கலப்படத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எப்படி கலப்படத்தை கண்டுபிடிப்பது?
ஐஸ்கிரீமில் மென்மைத்தன்மை மற்றும் வெண்மை நிறத்தைக் கூட்ட சில நேரங்களில் வாஷிங் பவுடர் சேர்க்கப்படுகிறது. இதை கண்டுபிடிக்க, ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மீது சில துளிகள் எலுமிச்சை சாற்றை விடுங்கள். எலுமிச்சை சாறு பட்டவுடன் ஐஸ்கிரீம் நுரைத்துக்கொண்டு பொங்கினால், அதில் வாஷிங் பவுடர் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல ஐஸ்கிரீம் கெட்டியாக இருக்க ஜவ்வரிசி மாவு அல்லது ஸ்டார்ச் சேர்க்கப்படலாம். இதை கண்டுபிடிக்க, சிறிது ஐஸ்கிரீமை உருக்கி, அதில் இரண்டு துளிகள் அயோடின் டிஞ்சர் (மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சேர்க்கவும். ஐஸ்கிரீம் நீல நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல, நல்ல தரமான ஐஸ்கிரீம் இயற்கையான முறையில் உருகும். ஐஸ்கிரீமை ஒரு தட்டில் வைத்துச் சாதாரண வெப்பநிலையில் உருக விடுங்கள். ஐஸ்கிரீம் உருகுவதற்கு மிக நீண்ட நேரம் எடுத்தாலோ அல்லது உருகிய பிறகும் அது நுரை போலவோ, பிசுபிசுப்பான ரப்பர் போலவோ தெரிந்தால், அதில் அதிகப்படியான செயற்கை கெமிக்கல்கள் அல்லது தரம் குறைந்த வனஸ்பதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அதேபோல ஐஸ்கிரீம் சாப்பிடும்போது நாக்கில் ஒருவிதமான மெழுகு போன்ற படிவம் ஒட்டிக்கொண்டால், அதில் பால் கொழுப்புக்கு பதிலாகச் மலிவான தாவர எண்ணெய் அல்லது டால்டா சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது எ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக