![]() |
Periasamy Ponnusamy : ஏன் நான் திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் எனப் பதிந்துள்ளேன்?
திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
அதிமுக கூட்’ணி-18,363,499 வாக்குகள் 39.71%
மற்றவை - 6,919,189 வாக்குகள் 14.9%
இதில் திமுகவிற்கு SIR அடிப்படையில் வாக்குகள் குறைக்கப்பட்டதன் தாக்கம், எல்லா அணிகளையும் பாதிக்கும், SIR ஆல் 15.2% வாக்குகள் தமிழ் நாட்டில் குறைக்கப்பட்டன.
இந்த சதவீதத்தை கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளில் எத்துனை சதவீதத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனில்,
கடந்த 2021 சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 73.63% பதிவாகத வாக்குகள் 26.37%
அதாவது பதிவாகத வாக்குகளில் 4% ஐயும் பதிவான வாக்குகளில் 11.2% ஐயும் SIRஆல் நீக்கப்பட்ட வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த 11.2% ஐ கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் உத்தேசமாக என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதை அறியலாம்.
திமுக கூட்டணி = 43.38% X 11.2% = 4.85% தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
அதிமுக கூட்டணி = 39.71% X 11.2% = 4.44%
அந்த வகையில்
திமுக கூட்டணி = 43.38 - 4.85 = 38.53%
அதிமுக கூட்டணி = 39.71 -4.44 = 35. 27%
இது தான் SIRக்கு பின்னால் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய சதவீதம்.
இதில் நாம் கூட்ட வேண்டிய சதவீதமும் இருக்கிறது அதாவது, புதிதாக SIR மூலம் வந்த வாக்காளர்கள் 27.5 இலட்சம் தான் அது. இதை சதவீத அடிப்படையில் நாம் எடுத்தோம் எனில்,
இந்த புதிய வாக்காளர்களை நாம் திமுக மற்றும் அதிமுகவிற்கு மட்டுமே கூறு போட இயலாது. இதில் மூன்று மற்றும் நான்காம் அணியாக வந்திருக்கிற தவெகவையும் நாதகவையும் இணைத்துக் கணக்கிட வேண்டும்.
இந்த 27.5 இலட்சத்தில் 14.59 இலட்சம் .
தற்பொழுதுள்ள அலையின் அடிப்படையில் இதில் தவெக கூடுதல் சதவீதத்தை பெறலாம் அதாவது 35% பெற வாய்ப்புள்ளது. அதாவது, 5.10 இலட்சம் வாக்குகளை தவெக பெறும். திமுக சுமார் 30% பெற வாய்ப்புள்ளது. காரணம், அதன் திட்டங்கள் மாணவர்களைச் சார்ந்து இருந்துள்ளது. அதாவது 4.38 இலட்சம் வாக்குகளை பெறலாம். அதிமுக 25% அதாவது 3.64 இலட்சம். நாதக 10% 1.45 இலட்சம்.
27.5 இலட்சத்தில் மீதமுள்ள வாக்குகள் = 27.5-14.59 = 12.91 இலட்சத்தில் திமுக 50% ஐயும் அதிமுக 30% மற்றவை 20% பிரித்தும் கொள்ளும்.
அதன் அடிப்படையில் திமுகவிற்கு 6.45 இல்டசம் வாக்குகள் கிடைக்கும் . ஆக புதிதாக சேர்க்கப்பட்ட 27.5 இலட்சம் வாக்குகளில் திமுக கூட்டணிக்கு 4.38+6.45 = 10.83 இலட்சம் வாக்குகளை திமுக கூட்டணி பிரிக்கலாம்.
தற்பொழுது திமுக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள கூடுதலான சாதகங்கள்
1) தேமுதிக இணைப்பு
2) எஸ் டி பி ஐ இணைப்பு
3) தமிழ் மக்கள் தேச கட்சி இணைப்பு
4) அதிமுகவின் பிரபலங்கள் திமுகவில் இணைந்தது
5) மக்கள் நீதி மய்யம்
இது திமுக கூட்டணியின் புதிய வரவுகள். கடந்த சட்ட மன்ற தேர்தலின் பொழுது, கணக்கில் வராதவைகள். 2% வாக்குகளை கூடுதலாக பெற்று தரும்.
SIR உடைய தாக்கத்தால் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெற்ற வாக்கு 45.38% சதவீதத்தில் 38.53% ஆக குறைத்த பின், கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதான திமுக வாங்கிய வாக்கு எண்ணிக்கையில் கணக்கிட்டால் 1,99,64,457 வாக்குகள் . இதை தற்பொழுது பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையுடன் சதவீதக் கணக்கிட்டால்
=1,99,64.457/ 4,85,64,033 = 41.10% ஆகும் இத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட 27.5 இலட்சம் வாக்களர்களில் 10.83 வாக்குகள் கிடைக்கும் பார்த்தோமே, அதையும் தற்பொழுது பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையுடன் கணக்கிட்டால் 2.23%
ஆக மொத்தம் 41.10% +2.23% = 43.33%
இத்துடன் புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்ததால் கிடைக்க உள்ள 2% கூட்டினால் 45.33%
அடுத்து ஆண்டி இன்கம்பன்சி VS ப்ரோ இன்கம்பன்சி
திமுகவிற்கான ஆண்டி இன்கம்பன்சி என்பது ஒரு 5% இருப்பதாக எடுத்து கொள்வோம். அது புதிய வாக்களர்களில் 65% த்தை அதிமுக, தவெக மற்றும் தவெகவிற்குப் பிரித்து கொடுத்துள்ளதிலும், SIR தாக்கத்தால் குறைக்கப்பட்ட 4.85% சதவீதத்திலும் மிகப் பெரும் சதவீதத்தை தொட்டு விடும். இருப்பினும் நாம் அதை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
அதே போல் புரோ இன்கம்பன்சியும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. அது 3% அதாவது திமுகவின் திட்டங்களால் பயன் பெற்ற 35-70 வயது வரையுள்ள வாக்காளர்கள்.
ஏற்கனவே உள்ள 45.33% + 3% = 48.33%
48.33% த்தில் ஆண்டி இன்கம்பன்சி (மாயை) மற்றும் தவெகவின் வரவால் ஏற்பட்டுள்ள தாக்கம்(மாயை) என கற்பனை செய்து கொண்டு 5.33% கழித்தால், 43% என்கிற (வொர்ஸ்ட் சினாரியோ) குறைந்தபட்ச சதவீதத்தை திமுக கூட்டணி பெற்றே தீரும்.
இந்த 43% வாக்கு என்பது 210 தொகுதிகளில் எதிரொலிக்கும்.
எவ்வாறு,
*இரண்டாக உடைந்த பாமக!
*கொங்கு மண்டலத்தின் செங்கோட்டையன் அதிமுக வாக்கில் ஏற்படுத்தும் குறைந்தபட்ச தாக்கம்!
*தவெக திமுக வாக்குகளை மட்டும் அல்ல அதிமுக வாக்குகளையும் 3% பிரிக்கலாம்.
*சசிகலாவின் தேர்தல் வருகை அதனால் அமமுக மற்றும் அதிமுக டெல்டா மண்டலத்தி இழக்கும் வாக்குகள்.
*புதிய தமிழகம் பிரிந்ததால் நெல்லை மண்டலத்தில் சில தொகுதிகளில் இழக்கும் வாக்குகள்
இப்படியான அதிமுக அணிக்கு எல்லா மண்டலத்திலும் ஏற்பட்டுள்ள சிறிய பெரிய மாற்றங்கள், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை மிகச் சாதகமாக்கும். அது 6-8% வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
அதாவது 20,000 முதல் 30,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக