![]() |
Janaki Karthigesan Balakrishnan : Solar PV மின்சார உற்பத்திக்கு மேலும் முன்னேற்றம்
இணைத்துள்ள பதிவு சூரிய ஒளிக்கதிர்களால் உற்பத்தியாக்கப்படும் மின்சாரத்திட்டத்தில் solar panel சூடாகுவது மின்சகர உற்பத்தியின் அளவைக் குறைப்பதாக இருக்கும். அந்தக் குறையை நீக்க, அவுஸ்திரேலியாவில் கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும் வகையில் கடல்நீரைப் பயன்படுத்தும் முறையொன்றை நிறுவியுள்ளது. அதனால் உற்பத்தியாகும் மின்சாரம் 20% ஆல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள் பாவனைகளைக் குறைத்து பூகோளம் மாசடைதலைத் தவிர்ப்பதும், பூகோளம் வெப்பமாதலைத் தடுப்பதும் நோக்கமாகக் கருதி கடந்த பல ஆண்டுகளாக உலகளாவ கற்பித்தலும், ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தல் எனவும் பரவலாக நடைபெற்று வருகின்றன. பலநாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, இவற்றைக் கடைபிடித்து வருகின்றன.
ஆனால் உலகிலேயே தலைசிறந்து நாடு எனக் கருதப்பட்டு வரும் நாடான அமெரிக்கா, அதிக அளவில் எரிபொருளில் தங்கியிருக்கும் தொழில்நுட்பங்களையே பாவனையில் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் அதிபர் நாடு நாடாகச் சென்று எரிபொருளைக் கொள்ளையடிப்பதும், உடனே அடைய முடியாத பட்சத்தில் நாட்டின் தலைவர்களை சிறைபிடிப்பதும், கொல்வதுமென பயங்கரவாதத்தில் ஈடுபட்டதுமல்லாமல், இப்போது ஈரானுடன் போரை ஆரம்பித்தது எனக்கூறி, இன்னோர் உலகப் போருக்கு தளம் அமைத்து வைத்துள்ளார்.
அமெரிக்காவில்தான் உலகச்சிறப்பு வாய்ந்த கல்விநிலையங்கள் உள்ளன, கல்விமான்கள் உள்ளனர் என அறியப்படுகிறது. அமெரிக்காவின் சிறப்பான தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் இயங்க அமெரிக்கர் அனைவரும் முன்வரவேண்டும். தடைசெய்பவரின் அடக்குமுறைகளை முறியடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக