முன்னாள் ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்கா (24 March 1949) அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்தநாள்.
எப்போதும் தன்னை ஒரு மாணவனாகவே கருதும் ஒப்பற்ற கல்வியாளர்தான் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
இவரின் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை.
இவர் தொடர்புடைய சில விடயங்களை தற்போது குறிப்பிடலாம் என்றெண்ணுகிறேன்
நாட்டில் அமைதியை ஏற்படுத்த புலிகளோடு ஆறு சுற்று சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்
16–18 September 2002, Bangkok
31 October-3 November 2002, Bangkok
2–5 December 2002, Oslo
6–9 January 2003, Bangkok
7–8 February 2003, Berlin
18–21 March 2003, Tokyo
(இந்த பேச்சுக்களில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்ற புலி தலைவர்கள் இரவு நேரங்களில் உல்லாச விடுதிகளில் சல்லாபித்த கதைகளை திரு அன்டன் பாலசிங்கம் விலாவரியாக கூறி இருந்தது தெரிந்ததே)
2002 இல் இவர் புலிகளோடு கைச்சாத்திட்ட சமாதான ஒப்பந்தம் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனாலும் இந்த ஒப்பந்தம் புலிகளை ஜனநாயக வழிக்கு கொண்டு வரும் ஒரு பெரும் முயற்சியாக இருந்தது
அந்த சமாதானம் புலிகளுக்கு பெரும் பொறியாக அமைந்து விட்டது.
பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம் எப்போதும் ஒரு எலிப்பொறிதானே.
அந்த ஒப்பந்தத்தை அவர்களே பின்பு நொறுக்கினார்கள்
அதன் மூலம் உலகின் கண்களுக்கு இவர்கள் இனி திருந்தவே முடியாத பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்
அவர்களின் இயக்கமும் பிளவு பட்டது
பாசிஸ்டுகள் ரணிலை நரி நரி என்று இன்றுவரை கூவுவது இதன் காரணமாகத்தான்
ரணிலை ஒரு ராஜதந்திரி என்று கூறினால் அவர்களின் இமேஜ் என்னாவது?
எனவே நரி என்று கூறி சுய இன்பம் அடைகிறார்கள்.
பின்பு 2004 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் புலிகள் திரு மகிந்த ராஜபக்சவிடம் மில்லியன் கணக்கான பணத்தை பெற்று கொண்டு ரணிலுக்கு ஆதரவான வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாக்கிற்கு வேட்டு வைத்தனர் .
துப்பாக்கி முனையில் மக்களை தேர்தலை புறக்கணிக்குமாறு பணித்தனர்
அதன் மூலம் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினார்கள்!
ரணில் வெற்றி பெற்றால் அவர் சண்டைக்கு வரமாட்டார் . சமாதானம் பேசுவார்
ஆனால் மகிந்த ராஜபக்சவோ சண்டைக்கு வருவார் .அவரை நாம் வெற்றி கொள்ளலாம் என்று கனவு கண்டனர்.
என்னே ஒரு அறிவாளிகள்?
பின்பு என்ன நடந்தது என்பது எல்லோரும் அறிந்ததே
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் புலிகளும் ராஜபக்சவும் பக்கா நரிகளாக ரணிலின் வெற்றியை தடுத்தி நிறுத்தினார்கள.
ஆனால் இந்த இரண்டு நரிகளினதும் நரித்தனத்தால் பாதிக்கப்பட்ட ரணிலை இரு பகுதியினரும் நரி என்று இன்றுவரை கூறுகிறார்கள்.
இதுதான் செலக்டிவ் அம்னீசியா நோய் என்று கூறப்படுவது.
இது ஒரு முழுமையான கட்டுரை அல்ல.
மனதில் தோன்றிய சில விடயங்களை மட்டும் பகிர்ந்துள்ளேன்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆட்சியை நடத்த முடியாமல் எதிர்கட்சிகளை பார்த்து யாரவது வந்து பொறுப்பேற்று கொள்ளுங்கள் என்று கேட்ட பொழுது சஜித் அனுரா உட்பட யாரும் முன்வராத நேரத்தில் திரு ரணில் விக்கிரசிங்காவே முன் வந்து நாட்டை மீட்டார்.
அதுவும் இரண்டே இரண்டு ஆண்டுகளில் வேகமாகவே மீட்டு எடுத்தார்
வழமை போல நன்றி இல்லாத மக்கள் நல்லது செய்தவரை தோற்கடித்தனர்.
அவர் மீது தொடர்ந்து சேறு வீசி வாருகிறார்கள்
உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது
அதற்கு முயற்சித்தால் தோற்று போவீர்கள்.
மதிப்பிற்கு உரிய முன்னாள் ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக