வியாழன், 5 பிப்ரவரி, 2026

விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.

 Giri Sundar  : திமுக காங்கிரசு சண்டை புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி.காலையில சண்டை போட்டா நைட்டு  ஒண்ணு சேர்ந்துடுவாங்க.
புருஷன் கிட்ட பிகு பண்ணா தான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
அவனுங்களும் தேர்தல் நேரத்தில தான் கேட்க முடியும்.இப்ப விட்டா அடுத்த தேர்தல்  வரைக்கும் தலைகீழ நின்னாலும் திமுக
கண்டுக்காது.
என்ன தான் விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.அப்படி போறதா இருந்தா கடந்த பார்லிமெண்ட் தேர்தல்ல அதிமுக கூப்பிட்டப்பவே போயிருப்பாங்களே!ஏன் போகல?
அடிமைங்கலாம் கள்ளக் காதலன் மாதிரி, மேட்டர் முடிச்சோமா,  தொடைச்சிட்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிச்சோமா, அமைச்சர் பதவி வாங்கினோமான்னு போயினேயிருப்பானுங்க.


அது அவனுங்க தப்பு இல்லை.அவனுங்க ஜீன் அப்படி.எம்ஜிஆர் இந்திரா காந்தி கூட கூட்டணி வச்சி ஜெயிச்சி அப்படியே ஜனதா கட்சி அமைச்சரவையில துண்டு போட்டு வச்சாரு.
ஜெயலலிதாவும்  2001 தேர்தல்ல காங்கிரஸ்,தமாகா,பாமக,கம்யூனிஸ்ட்டுகள் கூட கூட்டணி வச்சி  ஜெயிச்ச உடனே பழக்க வழக்கம்லா பஞ்சாயத்தோடு ரைட்டு.வீட்டு பக்கம்லா வரக்கூடாதுன்னு சொன்ன ஆளு.
அடுத்து நடந்த தேர்தல்ல விஜயகாந்த்க்கும்  அததான் பண்ணுச்சி.கூட்டணிலாம் தேர்தல் 
வரைக்கும் தான்னு கழட்டி விட்டுச்சு.
ஒரே ஒரு வாட்டி நம்ம காங்கிரஸ்காரனுங்க எடப்பாடி கிட்ட போய்ட்டு வரட்டுமே.ஒரு படத்துல போண்டாமணி துணியெல்லாம் கையில எடுத்துனு அய்யய்யோன்னு  ஓடி வர்ற மாதிரி ஓடி வருவானுங்க.
இதுல விஜய் வேற.
பாஜக  வளர்ந்திருக்கு.விஜய்க்கு 18% வாக்கு வங்கி இருக்கும்னு சொல்ற ப்ரவீண் சக்ரோபர்த்தி காங்கிரஸ் கட்சிய  வளர்ச்சிப் 
பாதைக்கு கொண்டு போற அளவுக்கு எதனா பண்ணியிருக்கானுங்களா?
அதிமுக நாலா சிதறியிருக்கு.பாமக ரெண்டா பிரிஞ்சிருக்கு.எவ்ளோ நல்ல வாய்ப்பு.நாம நம்ம கட்சிய இப்ப  வளர்க்கனும்டான்ற எண்ணம்  கொஞ்சம் கூட இல்லை.புதுசா ஒரு நடிகன் கட்சி ஆரம்பிச்ச உடனே அவன் முதுகுல சவாரி செய்ய நினைச்சா கட்சி எப்படி வளரும்?
நீங்க சீட்டு அதிகமா கொடுத்தா தானே நாங்க கட்சி வளர்க்க முடியும்னு நீங்க கேட்கலாம்.உங்க கட்சி உங்க எம் பி, எம் எல்ஏ பிரதிநிதித்துவம் இருக்கும் தொகுதியில பூத் கமிட்டி ஆளுங்க இருப்பானுங்களா?
கடந்த ஜூலைமாதம்"ஒன்றிணைவோம்வா" 
எஸ்.ஐ.ஆர்ல திமுக காரன் மைக்ரோ லெவல்ல வேலை செஞ்சி உங்க கட்சி தொண்டர்கள் எவ்வளவு பேர் இருப்பாங்கன்றத தெரிஞ்சினுருப்பான்.
உங்க கட்சிய எல்லாம் டெல்லியில் உட்கார வைக்குறதுக்கு வேண்டும்னா தமிழ் நாட்டு மக்கள் ஓட்டு போடுவாங்க.மாநிலத்துல உட்கார வைக்க எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க.
அதனால கடந்த தேர்தல்ல கொடுத்த அதே சீட்டு வாங்குனோமா ஜெயிச்சோமான்னு இருங்க.தலைவர் உங்களுக்கு கொடுக்குறது சீட்டு இல்லை.எம்எல்ஏன்ற பதவி.
புரிஞ்சா சரி!

கருத்துகள் இல்லை: