வியாழன், 22 டிசம்பர், 2022

கவிஞர் தாமரை : ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி. சிக்கலில் விஜி பழனிச்சாமி

கோவை விவகாரம்

Gurusamy News18 Tamil Nadu : 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள்.. விஜிஸ் பழனிசாமி இந்தப்பெயரை இதுவரை நான் உச்சரிக்கவில்லை. பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் பேனாவால் எழுத வேண்டி நேர்கிறதே .. என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இளைஞரின் மரணத்திற்கு சின்னத்திரையில் பணியாற்றும் விஜிஸ் பழனிசாமி காரணம் என கவிஞர் தாமரை தனது பேஸ்புக் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதன், 21 டிசம்பர், 2022

வட கொரியா (கம்யூனிஸ்டு )மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்க தடை

 மாலை மலர் :  பியாங்யாங்: சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள கம்யூனிஸ்டு வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.
இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நுழைந்த புதுவகை கரோனா வைரஸ் - மூன்று பேருக்குத் தொற்று உறுதி

nakkheeran.in : கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கானவர்களைப் பாதித்தது.
 பல லட்சக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவிலிருந்தது. கிட்டதட்ட 4.5 கோடி பேர் இதுவரை இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். 5 லட்சம் பேர் வரை இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டு சீனாவில் வெகு வேகமாகக் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தது.
பலர் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை !

 தேசம்நெட் - அருண்மொழி :  தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று  பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அக்டோபர்  2021 இலிருந்து டிசம்பர்  2022 வரை  25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா.. 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! 70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு

tamil.oneindia.com  - Halley Karthik :  நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.4 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சில சரிந்து விழுந்துள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பரந்தூரில் விமான நிலையம் .. விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

tamil.asianetnews.com  -  Narendran S :  பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆட்சேபனை… விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

 தினத்தந்தி :  சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

"மிஸ்டர் க்ளீன்" வந்தாச்சு.. ஒருத்தரும் தப்ப முடியாது.. கண்சிவந்த திமுக மேலிடம்.. யாரந்த "புள்ளிகள்"

 tamil.oneindia.com - Hemavandhana  :  சென்னை: அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுக்க போகிறதாம் திமுக.. அதற்கான காய் நகர்த்தல்களும், முன்னெடுப்புகளும் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில், திமுகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறது.. மற்றொருபுறம், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார்..
எப்போதுமே தேர்தல் சமயங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபரீசன் மேற்கொண்ட முயற்சிகளும், அதுகுறித்த களஆய்வும், மேலிடத்துக்கு பேருதவியாக இருந்து வருவதை மறுக்க முடியாது.
திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர் திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

பிரிட்டனில் மனைவியை பிள்ளைகள் கண்முன்னே கொன்றுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய கணவன்.. தேடிப்பிடித்த பிரிட்டன் போலீஸ்

 news.lankasri.com : இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து
பிள்ளைகள் கண்முன்னே தாயை துடிதுடிக்க கொலை செய்துவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் சென்ற ஒருவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து
பிள்ளைகள் கண்முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்
2001ஆம் ஆண்டு, தெற்கு லண்டனிலுள்ள வீடு ஒன்றில்  (38) என்னும் பெண் தன் பிள்ளைகள் கண் முன்னே துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டார்.

சென்னையில் பகலில் குப்பை லாரிகளை இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மாலை மலர்  : சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகரில் துர்நாற்றம் வீசும் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை.
இந்த லாரிகளில் இருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் விபத்து ஏற்படுகிறது.
குப்பைகள் மீது வலைகளைப் போர்த்தாமல் செல்வதால் லாரியில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வந்ததுதான் சாதனை'' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நக்கீரன் :    சென்னை நுங்கம்பாக்கத்தில் 'அன்பின் கிறிஸ்துமஸ்' எனும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''ஆதிதிராவிட கிறித்தவர்கள் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது.
ஆனால் 2006-11 ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு என்ன சலுகைகள் வழங்கப்பட்டதோ அதனை ஆதிதிராவிட கிறித்துவர்களுக்கும் வழங்கிய ஆட்சி இது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான கோரிக்கை எடுத்து வைத்துள்ளார்கள்.
அதை ஒன்றிய அரசுதான் இன்றைக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலையில் இருப்பதையும் இனிகோ இருதயராஜ் எடுத்துச் சொன்னார்.

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

maalaimalar : ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள்.
பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மெதுவாக சென்று திரும்பிய போதும் கணக்கெடுப்பாளர்கள் செல்லவில்லை. அங்கேயே நின்று கணக்கெடுப்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள்.
இதை கவனித்த இந்தி போலீஸ்காரர்கள் மற்ற பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற ஆசிரியர்

Angry Karnataka Teacher Kills Class 4 Student, Beats Up Mother: Cops

 மாலைமலர் : பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசியையாக பணியாற்றுகிறார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்குள் புகுந்த என்ஐஏ... புலிகளோடு தொடர்புடையவர்கள் உட்பட 9 பேர்.. ...

tamil.samayam.com  :  திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டுனர்.
கடந்த 2020 மார்ச் மாதம் கேரளா விளஞ்சியம் கடற்பகுதியில் சந்தேகத்தில் இடமாக கைது செய்யப்பட்ட படகிலிருந்து 300 கிலோ 323 கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கொண்ட விசாரணையில் அந்த கடத்தலில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலர் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டு, திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் உள்ளவர்களும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
தொழிலில் நஷ்டம்... மனமுடைந்த ஃபேஷன் டிசைனர் எடுத்த துயர முடிவு!

இந்தியாவில் 2021ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை - மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

மாலைமலர் :  கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திங்கள், 19 டிசம்பர், 2022

ராகுல் காந்தி : இந்தி உதவாது... ஆங்கிலம் படியுங்கள்!

மின்னம்பலம் - Prakash  :  இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்: ராகுல் காந்தி
”இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கி (செப்டம்பர் 7), பல மாநிலங்களிலும் அதை நிறைவு செய்து வருகிறார்.
தற்போது அவருடைய இந்த ஒற்றுமைப் பயணம் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பொதுக்கூட்டத்தில் இன்று பேசிய ராகுல்காந்தி, “ஆங்கில மொழியை பள்ளிகளில் கற்பிப்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா- எதிராளி முகத்தில் குத்துவிட்டார்

maalaimalar :  புதுடெல்லி:  டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளார்கள். குஜராத்தில் 14 சதவீத வாக்கு வங்கியுடன் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

மாலை மலர்   :; சென்னை  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிப்பதாவது:-
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழியாம் தமிழ்மொழியைத் தழைத்தோங்கச் செய்திட வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அதிகரிக்கும் வட இந்தியர்கள்! அகதிகளாகும் தமிழர்கள்!

aramonline.in  ;  தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலைக்கு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது! பல்லாயிரக்கணக்கில் வட இந்திய பெண்களுக்கு வேலை! பெரும் திரளாக வருவோருக்கு வேலையும், இருப்பிடமும் தந்து, இருப்போரை சொந்த மண்ணில் அகதிகளாக்குவதா?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் கிராமம் அருகே டாடா எலக்ரானிக்ஸ் எனப்படும் போன் உதரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 5,300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த ஆலை செயல்படுவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கார்ப்பரேஷன் எனப்படும் டிட்கோ 500 ஏக்கர் நிலத்தை தந்துள்ளது. இங்கு சீனாவில் இருந்து வெறியேறிய ஆப்பிள் நிறுவனத்திற்கான போன் உதிரிபாகங்களை தயாரிக்க சுமார் 18,000 பேருக்கான வேலை வாய்ப்பு கொண்ட நிறுவனமாக இது உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"

தினத்தந்தி  : 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.
தோகா,
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.
எதிர்பார்க்கப்பட்ட 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது (மலையாளி) கணவரா? போலீஸார் விசாரணை

பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது மலையாளி கணவரா? போலீஸார் விசாரணை

zeenews.india.com  :  லண்டன்: பிரிட்டனில் செவிலியராகபணிபுரிந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கொலை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோட்டயம் வைக்கம் குலசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஞ்சு, அவரது கணவர் சஜுவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சு, அவரது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகள் என குடும்பத்துடன் பிரிட்டனின் கெட்டரிங் என்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் செவிலியராகப் பணிபுரியும் அஞ்சு, அவரது குழந்தைகள் ஜான்வி, ஜீவா ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணங்களைத் தொடர்ந்து, அஞ்சுவின் கணவரும், கண்ணூர் பாடியூர் கொம்பன்பாறையைச் சேர்ந்தவருமான செளவலன் சஜு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டனர் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்

இலங்கை கடற்படையின் மீட்புக் கப்பலுடன் சேதமடைந்த படகு.
படகில் இருந்து கைக்குழந்தையுடன் மீட்கப்படும் பெண்

jaffnamuslim.con  :  பங்களாதேஷில் இருந்து படகு மூலம் தப்பிச் சென்ற 104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் வெந்தலை தீவுக்கு அப்பால், பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் ஒரு பெரிய மீன்பிடி படகை அவதானித்த மீனவர்கள் உடனடியாக வடக்கு கடற்படை கட்டளைக்கு தகவல் வழங்கியதையடுத்து கடற்படையினர் 3 படகுகளை அந்த இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சனிக்கிழமை (17) மாலை வேளையில் மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, கடற்படையினரால் மீட்கப்பட்ட குறித்த படகு, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகில் சனிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி, ஞாயிற்றுக்கிழமை (18) காலை கிடைத்ததைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் முகாமிற்கு மாற்றப்பட்டதுடன், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நான்கு பேர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ரெயில் திட்டம்- கிரீன்வேஸ் சாலையில் அடுத்த மாதம் துவங்குகிறது சுரங்கப்பாதை தோண்டும் பணி

மாலைமலர் : சென்னை  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.

டெக்ஸ்டைல் துறை -200 பில்லியன் டாலர் சந்தை! கண்ணீரில் மிதக்கிறது

tamil.goodreturns.in -  Prasanna Venkatesh  : ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பெரிய பொருளாதார நாடுகளில் உள்ள மக்கள் ஆடைகளுக்காகச் செலவிடும் தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளதால், இந்தியாவின் 200 பில்லியன் டாலர் டெக்ஸ்டைல் மற்றும் ஆடைத் தொழில் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை, கொரோனா-வுக்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருத்தி விலை அதிகமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.
பருத்தி விலை குறைந்த காலகட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் இத்துறை வளர்ச்சியின் கழுத்தை நெரித்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தளர்வு

 tamil.hindustantimes.com -  Muthu Vinayagam Kosalairaman :  நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்துள்ள சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை பதிவாளர் உத்தரவுபடி மதுரையில் தங்கி நாள்தோறும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தி்ல் கையெழுத்திட வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக 10 நாள்கள் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து வந்த சவுக்கு சங்கர், சென்னையில் கையெழுத்திட அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்டு சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.