மின்னம்பலம் ஐந்து நாள்கள் தொடர் ரெய்டு, நீண்ட விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்து வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்பவர், ஓடோகெம் என்கிற வாசனைதிரவிய நிறுவனத்தை நடத்திவருகிறார். இவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிலரும் இதில் பங்குதாரர்களாக இருந்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்ககம் ஐந்து நாள்களுக்கு முன்னர், கான்பூரில் உள்ள பியூசின் தொழிற்சாலையில் தேடுதல்சோதனையில் ஈடுபட்டது. சோதனையிடச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்படியாக அங்கே கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது.
செவ்வாய், 28 டிசம்பர், 2021
உத்தர பிரதேசம் - 16 லாக்கர்கள், 500 சாவிகள். பாதாள அறைகள்.. ரெயிடில் சிக்கிய வடநாட்டு ஜெயினின் சாம்ராஜ்யம்
சென்னையில் களைகட்டும் 'மார்கழியில் மக்களிசை'! மக்களின் இசையை மேடை ஏற்றவே மார்கழியில்.... இயக்குனர் பா.ரஞ்சித்
நக்கீரன் செய்திப்பிரிவு : இயக்குநர் ப.ரஞ்சித் கலையை ஜனநாயகம் படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமிய இசை கலைஞர்கள் தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் என தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான மார்கழியில் மக்கள் இசை 2021 நிகழ்ச்சி கடந்த 18 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பறையடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கூட பராமரிக்காமல் விட்ட பராரிகள் அதிமுகவினர் !
Raja Rajendran Tamilnadu : குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, எளியோர்களுக்கு, நிறைவான வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் !
1975 - 1976 அன்று எங்களுடைய பார்த்தசாரதி நகர் குடியிருப்பை முதல்வராயிருந்த கலைஞர் தன் அமைச்சரவை புடைசூழ திறந்துவைத்தார் !
மொத்தம் 120 வீடுகள். ஐந்து கட்டிடங்கள். தரைத்தளத்தோடு சேர்த்து ஒவ்வொரு கட்டிடத்திலும் நான்கு மாடிகள். கிட்டத்தட்ட 600 + மக்கள் அதில் குடியிருந்தனர் !
99% மக்கள் வேறெங்கும் சொந்த வீடுகளல்லாத உண்மையாகவே எளியோர்கள். அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு அட்டாச்டு பாத்ரூமோடு வீடு வாய்த்தது கிட்டத்தட்ட வரம் !
அந்தக் கட்டிடம் அதன் பின் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் திடமாக இருந்தது. அதாவது கட்டிடங்கள் உறுதியாக இருந்தன !
ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்குள் மர ஜன்னல், கதவு போன்றவைகள் பெரும்பாலும் உளுத்து அல்லது கரையான் அரித்து, வீணாய் போனது. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியால், அதை சரிசெய்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு வாழ்வில் பெரும்பாலோர், முன்னேறியிருந்தனர் !
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : தற்போது 17 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை பிறப்பிட்டுள்ளார்.
தற்போது 17 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படவுள்ளது.
முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1 -2 -3.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான கலகக் குரல்..
![]() |
மின்னம்பலம் - செவ்வாய் 19 டிச 2017 : முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -12017-12-19T13:30:02+5:30
சந்திப்பு: தமயந்தி
(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது.
இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)
உங்கள் குழந்தைப் பருவம், வீடு, சூழல் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும்போது… ?
மாநில அளவில் போதாது.. தேசிய அளவில் பாடம் புகட்ட வேண்டும் .. 'பாஜகவுக்கு' எதிராக முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்
Rajkumar R - Oneindia Tamil : சென்னை: பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக கடந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும் என கூறினேன்,
பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டனர்,
ஆனாலும் இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தா.பாண்டியன் அவர்களின் திரு உருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.
சென்னை: குடிசை மாற்று வாரிய குடியுருப்பு இடிந்தது 24 வீடுகள் தரைமட்டம் . உயிர்ச்சேதம் இல்லை
தினத்தந்தி : சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த
திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த டி பிளாக்கில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திங்கள், 27 டிசம்பர், 2021
திருமண போர்வையில் இலங்கைக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகள்.” – வெளிநாட்டவர் திருமணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு கட்டுப்பாடு
thesamnet.co.uk - அருண்மொழி : சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சக்திதான் என்னை இயக்குகிறது: திடீர் சாமியார் அன்னபூரணி ஆவேசம்!
மின்னம்பலம் : கடந்த மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. இன்னொருவரின் கணவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி விவாதத்தில் சண்டை போட்ட இவர் இன்று அருள்வாக்குத் தரும் அன்னபூரணியாம்.
இவரது சில வீடியோக்கள் பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது. நித்தி தன்னை ஆதிபரமேஸ்வரன் என கூறிக்கொள்ளும் நிலையில், அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தி என்று சொல்கிறார்.
அன்னபூரணியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்குச் செங்கல்பட்டு போலீசார் தடை விதித்ததாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
நிதி ஆயோக் சுகாதார தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம் ! - உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
கலைஞர் செய்திகள் : “இதுதான் நீங்க சொன்ன வளர்ச்சியா?”: கடைசி இடத்தில் உத்தர பிரதேசம்- வெட்டவெளிச்சமாக்கிய நிதி ஆயோக் அறிக்கை!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டும். 2014ஆம் ஆண்டு முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
"ஆதிபராசக்தி அம்மா" அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை.. அன்னபூரணியை தேடும் போலீஸ்
![]() |
Vishnupriya R - Oneindia Tami : சென்னை: தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அன்னபூரணி செங்கல்பட்டில் ஒரு திருமண மண்டபத்தில் அருள்வாக்கு கூற ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.
ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின. இவரது பேஸ்புக் வீடியோக்களில் இவருக்காக பாடல்கள் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
தாயி மகமாயி வேதபுர காளி என ஒலிக்கிறது.
கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம்
ராதா மனோகர் : கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம்
Mr Justice என்று அமெரிக்காவில் அழைப்பார்கள் .. இங்கே நாம் மை லார்ட் என்கிறோம் .. வழக்காடுபவர்கள் பிச்சை எடுப்பவர்கள் போலவும் .. தீர்ப்பை கொடுப்பவர் பிச்சை அளிப்பவர் போலவும் ஒரு ஜனநாயக நாட்டில் .. நீதிக்கு உகந்ததுதானா?
தன்வழக்கு என்று வந்தால் தானே தீர்ப்பு அளிப்பதுவும் .. அடுத்தவர் வழக்கென்று வந்தால் பெரிய சம்பிரதாயங்களை பார்ப்பதுவும் ..
சில சமயத்தில் விபத்துக்களை போல நல்ல தீர்ப்புக்கள் வருவதுண்டு .
இந்த கீழடியில் அகழாய்வை தொடரவேண்டும் என்பது கூட அப்படி ஒரு விபத்து போல வந்த நல்ல தீர்ப்பு.
உயர்பதவிகளில் இருக்கின்ற தகுதி பிராமணர்களுக்கே உண்டு என்று சொல்கின்ற நீதிபதி.. இப்போதும் நீதிமன்றத்தில் இருக்கின்றார் .உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவே இல்லை.
பாரத தேசம் வேதங்களின் நாடு . CP(M) சங்கரன் நம்பூதிரி சீடர்களின் ஆய்வுகள்
![]() |
சிவசங்கரன் சுந்தரராசன் : சமூகம் சாதி – மதம் போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
வினவு
இதுவரை ”புதிய கலாச்சாரம்” வாசகர் களுக்கு ”அறிவுச் சோதனைப் போட்டி” எதையும் நாம் நடத்தியதில்லை. இப்போது ஒரு சிறு ஆவல். அதையும் செய்து பார்த்து விடுவோமே! கீழே தரப்படும் மேற்கோள்கள் யாருடையது என்று வாசகர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!
வேத கலாச்சாரம்
”பல்வேறு மன்னர்கள் ஆட்சி நடத்திய நாடுகளாகத் தான் இந்திய உபகண்டம் இருந்தது. ஆனால், இந்த உபகண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையே ஏதோ ஒருவிதமான இணைப்பும் – பிணைப்பும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
" தேத்தண்ணி " "தே கஹட்ட " என்ற சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பு
![]() |
Shadagopan Ramiah : " தேத்தண்ணி " நாவலை பெற்றுக்கொள்ள.....
அடுத்து வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பு நாவலான தேத்தண்ணி அச்சுக்கு போயிருக்கிறது . இந்த நாவல் உப்பாலி லீலாரட்னவின் "தே கஹட்ட " என்ற சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பாகும் .1965 --1970... பின்னரான மலையக மக்களின் தொழிற்சங்க வரலாற்றையும் போராட்டங்களையும் எடுத்துக் கூறும் நாவல் இது. இந்த நாவல் இன்னும் சில தினங்களில் கைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் .
இந்த சந்தர்ப்பத்தில் ஆர்வமுள்ள வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
408 அழகிய நீண்ட பக்கங்களுடன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு படத்தை தாங்கி 94 அத்தியாயங்களுக்கு 94 படங்களுடன் மிகக் கனதியாக வெளிவந்திருக்கும் இந்த நாவலின் விலை ரூ. 1250/= .
ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது தாலிபான்கள் கட்டளை
செல்லபுரம் வள்ளியம்மை : தாலிபான்களின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரித்து பேச்சு. மனித உரிமைகளும் பெண் உரிமைகளும் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான விடயமாகும்
நகரங்களின் கலாச்சாரமும் கிராமங்களின் கலாச்சாரமும் வேறு வேறு
பழமைவாத சமூக குழுக்களின் கலாச்சாரங்களை உணராமல் போனால் .. பிளா பிளா பிளா பிளா
மனித உரிமைகளையும் பெண் உரிமை பற்றியும் பேசும்போது நாம் கவனமாக இருக்கவேண்டும்
அதாகப்பட்டது இதுவரையில் இம்ரான் கான் போர்த்தி வந்த ஜனநாயக பண்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அசல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குரலாக ஒலிக்கிறார் ..இதுதான் பாகிஸ்தானிய அரசியல்வாதிகள்
உள்ளே பச்சை சங்கித்தனம் வெளியே ஜனநாயக மதசார்பற்ற நடுவு நிலைமை
NEET இதுதான் வலதுசாரிகளின் வெற்றி.! இதுதான் தமிழ்நாட்டு மக்களின் தோல்வி.!
![]() |
Kandasamy Mariyappan : NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப் படவேண்டும் என்றால்..,
வலதுசாரி கும்பல்கள், திமுகவினர் உருவாக்கியுள்ள மருத்துவ கல்லூரிகள் மூலம் கொள்ளையடிப்பதற்காக NEET வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று, தொடர்ந்து திமுக மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே வருகின்றனர்.!
பொதுமக்களுக்கும் இது உண்மையோ என்ற எண்ணம் வரும்.!
ஆனால் கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள்.!
1. ACS Medical College (BJP)
2. SRM Chennai (BJP)
3. SRM Trichy (BJP)
4. Deenadayal Medical College (BJP) ×
5. Sathya sai Medical College (BJP)
6. Chettinadu Medical College (BJP)
7. Meenakshi Medical College (ADMK)
8. Muthukumaran Medical College (ADMK)
திரு. நெல்லை கண்ணன் கண்ணீர் ... பெரும்பான்மை ஜாதிகளிடம் இருந்து சிறுபான்மை ஜாதிகளை காப்பாற்றுங்கள்
![]() |
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சாதிகளிடத்திலிருந்து, சிறுபான்மை சாதியினரை காப்பாற்றுங்கள் என்பதுதான் அவரது அழுகை.
எத்தனைக்கொடுமைகளை அனுபவிக்கிறோமென இங்கே கேலிபேசும் நபர்கள் அறியமாட்டார்கள்.
தமிழகத்தின் தேவர், நாடார், வன்னியர், கவுண்டர், பறையர், பள்ளர் தவிர்த்த சிறுபான்மை சாதிகள், இந்த பெரும்பான்மை சாதியர்களின் அடாவடிகளால் பாதிக்கப்படுவதை யாரும் பேசமாட்டேன்கிறார்கள்.
அதைத்தான், நெல்லைக்கண்ணனாரின் ஆதரவற்ற நிலையும், ஆதாரத்திற்காக தோள்தேடும் நிலையையும் அம்மேடையில் பிரதிபலித்தது.
நெல்லை ஜெபமணியை அவனது கேவலமான பேச்சிற்காக நீங்கள் தொட்டுவிட முடியுமா...!?
ஞாயிறு, 26 டிசம்பர், 2021
பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்.. பின்னணி பாடல்களை தாண்டி நடிப்பிலும் அசத்தியவர்
Mari S - tamil.filmibeat.com : சென்னை: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.
திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாணிக்க விநாயகம் பல படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.
திரு .மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று மாலை அவரது இல்லத்தில் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.
விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்
மாலைமலர் : இலங்கையில் விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் இருந்து கிழக்கே 336 கிலோமீட்டர் தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி இரவு 11.40 மணிக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஒருவரே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியுள்ளார். துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக்கொன்றதும் அந்த போலீஸ்காரர் மற்றொரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திமுக மகளிரணி Vs இளைஞரணி ! புதிய உறுப்பினர் சேர்ப்பில் ஏற்பட்ட முரண்பாடு! பின்னணி என்ன?
திமுக இளைஞரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க உதயநிதி ஸ்டாலின் முயற்சித்து வரும் வேளையில், கனிமொழியும் மகளிரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் இந்த விவகாரம் தான் திமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சாமியார் அன்னபூரணி - வேறொரு பெண்ணின் கணவரை தட்டி பறித்து சொல்வதெல்லாம் உண்மை flashback
இவர்கள் யார்? என்ற முழு விவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் மக்கள் அவர்களிடம்
சென்று காலில் விழுவதும், பணத்தைக் கொட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அப்படியாகத்தான் திடீரென சாமியார் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. “அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் பக்கத்தில் இவரது வீடியோக்கள் பல பதிவிடப்பட்டுள்ளன.
கோவை KMCH பள்ளி வளாகத்தில் ஆர் எஸ் எஸ் ஆயுத பயிற்சி .. மாணவர்கள் மனதில் வன்முறை விதைப்பு
![]() |
Chinniah Kasi : *அனுப்புநர்* கு.இராமகிருட்டிணன் மற்றும் அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள், கோயம்புத்தூர்.
*பெறுநர்*
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம். *மதிப்பிற்கு உரியவர்களுக்கு,*
*பொருள்:* ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் கோயம்புத்தூரில் நடைபெறுவதை தடுத்து நிறுத்திட வேண்டி....
வணக்கம்,
ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்வா மதவெறி அமைப்பின் பயிற்சி முகாமானது வருகிற 31.12.2021 முதல் 02.01.2022 வரை கோயம்புத்தூர் கே.எம்.சி.எச். பள்ளி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மகாத்மா காந்தி கொலை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் இந்திய அரசினால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இன்னும் ஆர்.எஸ்.எஸ். மதவெறி கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அத்தகைய அமைப்பின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பும் ஒரு மதவெறி பாசிச அமைப்பாகும்.
நாவலர் இரா நெடுஞ்செழியனுக்கு சிலை ! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
![]() |
கலைஞர் செய்திகள் : நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை திறந்து வைத்து, நாட்டு உடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை நாளை (26.12.2021) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!
![]() |
![]() |
மின்னம்பலம் : நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக்கொள்ளப்பட்டதன் 53ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிபிஎம் கட்சியானது புதுப்பித்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று காலையில் இதைத் திறந்துவைத்தார். அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் முதலிய பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் உள்பட பல நிகழ்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கீழவெண்மணி நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச்சென்றனர்.
ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்
ஹென்றிச் ஹிம்லர் .. மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும் எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்1900 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்









