ஞாயிறு, 22 ஜனவரி, 2017

இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டமில்லை

யாருக்குமே வலிக்காமல் விமர்சனமில்லை, மசாஜ் கூட பண்ண முடியாது, நீவி விடும் போது கொஞ்சம் வலிக்கும்.
இந்த பெருந்திரளான கூட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடியது என்று நினைத்தவர் ஹிப் ஹாப் தமிழன் ஆதியோடு இங்கே யாரவது இருக்கிறீர்களா?
இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டமில்லை, ஆறு மணிக்கு வேலையை விட்டு போய் விடியற்காலை மூன்று மணி வரை இருந்து காலை மீண்டும் அலுவலுகத்துக்கு சென்றவர்களை இந்த நான்கைந்து நாட்களாக நான் அறிவேன்.
இந்த கூட்டத்தை, மக்கள் தங்களுக்கான எதிர்ப்பை பதிவு செய்யவும், நீண்ட காலமாக இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி இருந்ததின் மொத்த வெளிப்பாடாக தான் நாம் பார்க்க வேண்டுமே ஒழிய, ஜல்லிக்கட்டு பிரச்னையை தவிர வேறு எதையுமே பேச கூடாது என்பதல்ல.
அடுத்து, மோடியை மக்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்றால், இந்த கோர்ட்டின் மீதான நம்பிக்கையும், அரசின் மீதான நம்பிக்கையும் பொதுவில் மக்களுக்கு இல்லையென்பதை உணர்ந்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது, அரசாங்கமோ, நீதிமன்றமோ வேறில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள், நடத்த வேண்டுமானால், எப்படியும் நடத்தலாம் என்று இன்று நடந்ததை போல வழிவகை இருக்கும், எல்லாமே அரசியல் என்கிற விழிப்புணர்வு இருப்பதால் தான், கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது நானொன்றும் செய்ய முடியாது என்கிற மோடியின் அறிக்கையை இங்கே யாரும் நம்புவதற்கு இல்லை.

ஜல்லிகட்டு .... அறவழியை விட்டு விடாதீர்கள் .. மக்களும் உங்களை கை விட மாட்டார்கள்

ஹிப் ஹாப் , விவேக் இருவரும் தமிழக அரசின் நிலை பாடை எடுக்கும் நிர்பந்தம் என்ன?! மேலும் பல ஆங்கில சேனல் மற்றும் தமிழ் சேனல் வழக்கம் போல ஜிங் ஜாக் ஜில் அடிக்க தொடங்கி விட்டதே ..
இன்று மெரினா சென்று 6 மணி நேரம் கள நிலவரம் அறிந்த போது கண்டவை இவை :
🔵இளைஞர்கள் குழு குழுவாகி இசை இசைத்தும் பாட்டு பாடியும் ஒரு விழா போல போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்
🔵இதில் அதிகமாக மிக மோசமாக மோடியை திட்டுகிறார்கள் அடுத்தபடியாக அதிகமா கிண்டல் செய்வது OPS மற்றும் சசிகலா ..
🔵ஏராளமான பெண்கள் குழு குழுவாக மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் போட்டும் பீட்டா தடையை வேண்டி நிரந்திர தீர்வு கோருவதை காண முடிகிறது .
🔵பெண்கள் குடும்பம் குடும்பமாக குழந்தையுடன் சாராய் சாரையாக வந்து போராடும் இளைஞர் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்கிறார்கள் ..
🔵இளைஞர்கள் சாலைகள் ஒழுங்கு படுத்தி போலீஸ் துறை வேலையை கையில் எடுத்து பொறுப்புடன் எடுத்து செல்கிறார்கள் ..
🔵மிகவும் அதிசயித்த விஷயம் பெண்களை கண்ணியமாக நடத்துவது .. ஒரு இடத்திலே பெண்கள் இசை இசைத்து ஆடுவதை எனது reporter போட்டோ எடுக்கும் போது வேண்டாம் சார் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்கள் ..
🔵அரசு செய்தி துறை மற்றும் media மூலம் ஏதோ ஜல்லிக்கட்டு நடந்தது போலவும் ., போராட்ட குழு எதோ குடியரசு தினத்தை சீர் குலைக்க நுழைவது போலவும் ஒரு பிம்பம் உருவாக்கி வருகிறார்கள் ..

ஆதியின் பின்னணியில் அரசியல் புரோக்கர் ( தமிழகத்தின் ஒரே ஒரு சக்சஸ்புல் புரோக்கராம் அவர்)

தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத போராட்டமாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு போராட்டம்.
இந்த போராட்டத்தின் தனி சிறப்பே யாரையும், யாரும் கட்டாயப்படுத்தி வரவைக்கவில்லை.
இதுதானாகவே சோ்ந்த கூட்டம். எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இங்கு அனுமதியில்லை. சாதி சங்களுக்கு சவுக்கடி, உடைக்க வழி தெரியாமல் முழித்தனா்.
அவசர சட்டம் என்பதே முதல் வெற்றியாகதான் இருந்தது. ஆனாலும் அரசியல் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் நிரந்தர சட்டத்தை நோக்கி போராட்டம் பயணமாகிறது.
முதலில் பில்டப் கொடுத்த, இவரை வைத்து காய் நகா்த்தினால் போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் என்று முடிவு செய்ததாம் அந்த மேல்மட்டம்.
எப்படி சாத்தியம்.  ஆதியின் சொத்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகா் கார்டனின் விசுவாசி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாராம்.

தொலைகாட்சிகள் ஹிப் ஹப் ஆதிக்கு ஏகப்பட்ட விளம்பரம் .. பூனை குட்டி வெளியே வந்தது?

ஜல்லிகட்டு நிரந்தர சட்டம் நிறைவேறுவதற்கு முன்பாகவே போராட்டம் திசைமாறி செல்வதாக கூறி, போராட்டத்தில் இருந்து விலகுவதாக இசையமைப்பாளர் ஆதி தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, முன்னணி செய்தி சேனல்கள் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக திரும்ப திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை 5:50 மணி நிலவரப்படி 4லட்சத்து 56 ஆயிரம் பேர் வரை பார்த்துள்ளனர். 32 ஆயிரம் பேர் மட்டுமே ஷேர் செய்துள்ளனர். அப்படி இருந்தும் தமிழகத்தில் எங்கும் போராட்டத்தின் வீரியம் இதுவரை குறையவில்லை. கோரிக்கை முழுமையாக நிறைவேறும் முன்பே ஆதி போராட்டத்தை கலைக்கப் பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் “நடிகர்கள் அனைவரையும் புறக்கணித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். லைவ்டே

வதந்திகள் பரப்பப்படுகிறது .. கவனம் மக்களே நிதானம் இழக்கவேண்டாம் !

மெரினா ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பரபரப்பு காரணமாக கொதிநிலையில் இருக்கும் தமிழக நகரங்களில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க  ஏதேனும் கடுமையான  உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால், அவை எதுவும் ஊர்ஜிதமான தகவல்களாக இல்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இதுதவிர சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டக்குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.
ஆறாவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தின் பலனாக, தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பித்தது... ’ஆறு மாத காலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ என்ற ஆளுநரின் அறிவிப்பு உற்சாகம் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு சடுதியில் கலைந்தது. மெரினா முதல் அலங்காநல்லூர் வரை ஆளுநரின் அறிவிப்பு எந்த உற்சாகக் கூக்குரலையும் எழுப்பவில்லை.

ஜல்லிகட்டு .. இருவர் மரணம் ... உரிய பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்க படவில்லை ! தமிழக அரசுமீது கடும் குற்றச்சாட்டு !

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் ராஜா உயிரிழந்தார். முன்னதாக, ராப்பூசல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கீரனூர் லட்சுமணப்பட்டியைச்சே ர்ந்த 30 வயது வாலிபர் மோகன் காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மதுரை தமுக்கம் மைதானத்தில், ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 48 வயதுடைய சந்திரமோகன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
•காளைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும்.
•காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.
•போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
•காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்.
•மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும்.
•போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
•தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
•காளைகளை பரிசோதனை செய்யும் இடம், பந்தல் வசதியுடன் இருக்க வேண்டும்.

ஹிப் ஹாப் ஆதி : பயமாக இருக்கிறது. எனவே போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்

தமிழில் ஹிப்-ஹாப் ஸ்டைல் பாடல் பாடியதன் மூலமாக பிரபலமானவர் ஆதி. ‘கிளப்புல மப்புல’,‘வாடி புள்ள வாடி’ போன்ற ஆல்பங்கள் வெளியிட்டிருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ பாடலைப் பாடியதால் தமிழ் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரச் சட்டம் வேண்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆதியின் ‘டக்கரு டக்கரு’ பாடல்
வருவதற்கு முன்பும் இங்கே ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது மற்றும் விவசாயிகள் தற்கொலை என பெரிதளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ‘டக்கரு டக்கரு’ என்ற ஒற்றை பாடலை பாடிவிட்டு இந்தப் போராட்டத்துக்கு நான் தான் விதை விதைத்தேன் என ஆதி தற்போது பேட்டியளித்திருக்கிறார். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமல்ல. இது தமிழ் மக்களின் போராட்டம். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இங்கே ஒன்றிணையக் காரணம் அவர்களின் உரிமையை மீட்கவே.

சுப்பிரமணியன் சாமி : தமிழ்நாட்டுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் !

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவந்தும் போராட்டங்கள் தொடர்வதால் தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டால், அரசை கலைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். மேலும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது டிவிட்டர் பக்கம் மூலம் தொடர்ந்து இழிவாக விமர்சித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

19 ரயில்கள் ரத்து! ஜல்லிகட்டு போராட்ட எல்லை விரிவடைகிறது?


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தூத்துக்குடி – மணியாச்சி – சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் இணைப்பு ரயில் (16130), மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் (56723/56722), மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் (56731/56734), திங்குக்கள் – மதுரை பயணிகள் ரயில்(56707), ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56724/56721), காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் (76830), திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56829), விருதுநகர் – காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் (76838/76840), காரைக்கால் – பெங்களூரு பயணிகள் ரயில் (56513), சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் விரைவு ரயில் (16105), சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ரயில் (12633), சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ரயில் (22661), சென்னை எழும்பூர் – தூத்துக்குடி ரயில் (12693), சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் (16723), சென்னை எழும்பூர் – செங்கோட்டை ரயில் (12661), சென்னை எழும்பூர் – மதுரை விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ரயில் (16101 ), சென்னை எழும்பூர் – மதுரை மஹால் ரயில் (22623), தூத்துக்குடி – சென்னை எழும்பூர் ரயில் (12694), திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் (16106), ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் ரயில் (22662), ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் (16102) செங்கோட்டை – சென்னை எழும்பூர் ரயில் (12662), கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் ரயில் (12634), திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் ரயில் (16724), நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் (12632), மானாமதுரை – சென்னை எழும்பூர் ரயில் (16182), நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ரயில் (12690), ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்னம்பலம்

பெ.மணியரசன் : அவசர சட்ட நகலை கண்ணிலே காட்டாமல் ஏமாற்றுவது ஏன்? மீண்டும் பீட்டா தடை கொண்டுவரும்?

thetimestamil.com :வனவிலங்குகள் நலச் சட்டத்தின் 11, 22ஆம் பிரிவுகள் மற்றும் அரசியல்சாசனத்தின் 37ஆம் பிரிவு ஆகியவை தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் புதிய அவசர சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :
தடைநீக்கி, சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்துவிட்டார், அவசரச் சட்டம் இதோ வந்துவிட்டது என்று நேற்று (21.01.2017) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்ச் செல்வம் அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அவசரச் சட்டத்தின் நகலை எங்கேயும் வெளியிடவில்லை. அதன் எழுத்துவடிவம் ( Text) திங்கள் கிழமைதான் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. திங்கள் கிழமை எழுத்து வடிவில் வருவதாகச் சொல்லப்படும் அவசரச்சட்டத்தைச் சொல்லி வெள்ளிக் கிழமையே “ வெற்றி வெற்றி” என்று முழங்குவது சரியா?
எழுதப்பட்ட வடிவத்தைக்கூட காட்டாமல், அவசரச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி, இலட்சோபலட்சம் களப் போராளிகளை வலியுறுத்துவது ஞாயமா? அறமா? இப்போக்கு முதலமைச்சர் மீதான நம்பகத் தன்மையை சீர்குலைக்காதா?

மெரீனா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான போலீஸார் குவிப்பு.. பதட்டம்

ன்னை: மெரினா கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு திடீரென 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர், காவல்துறை அதகாரிகள் கோரிக்கை விடுத்தும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். இந்நிலையில் மெரினா கடற்கரைப் பகுதியில் இன்று திடீரென 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டத்தை முடக்கி கூட்டத்தை கலைக்க போலீசார் குவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் நாளை சட்டசபைக் கூட்டம் தொடங்குவதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  tamiloneindia

திண்டுக்கல் கோவில்பட்டியில் மக்கள் விரட்டியடித்தும் ஜல்லிக்கட்டை நடத்த மல்லுக்கட்டும் அதிகாரிகள்


Jallikattu: Yet another setback for TN govt. திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில்பட்டியில் மக்கள் கொந்தளித்து விரட்டும்போதிலும் ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்து வருகிறார்கள் அரசு அதிகாரிகள்.
தமிழக அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த போட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது. மக்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அலங்காநல்லூர் வருவதை தடுத்து சாலைகளில் குழி தோண்டி வைத்துள்ளனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு திட்டமிட்டது. அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாடிவாசலை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அரசு அதிகாரிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இருப்பினும் எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்திவிட அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். tamiloneindia

புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு

வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி < துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தில், தீபா பேரவை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வேலுார் சிறை யில் அடைக்கப் பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, தீபா அறிக்கை வெளியிடவில்லை. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தீபா பேரவையினர் கடந்த இரண்டு நாட்களாக, தீபாவுக்கு நுாற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதி அனுப்பியுள்ள னர். அக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:    அட போங்கய்யா காமடி பண்ணிக்கிட்டு .........இனி தீபா பேரவை அம்மா பேரவை எதுவுமில்லை ....தமிழ்நாடு மாணவர் பேரவை மட்டும்தான்

ஜல்லிகட்டை மொய்க்க தொடங்கும் வணிக உலகம் ... ஜல்லிகட்டு ஒரு வெற்றியின் சின்னம்

வணிக சந்தைக்குள் நுழைகிறது ஜல்லிக்கட்டு : 'பீட்டா'வுக்கு 'டாட்டா' காட்டும் பிரபலங்கள்< ஜல்லிக்கட்டு போராட்டத்தால், வணிக நிறு வனங்கள், தங்கள் பார்வையை அதன் பக்கம் திருப்ப துவங்கியுள்ளன. 'பீட்டா' உறுப்பினர் களாக வலம் வந்த பிரபலங்களும், மாற துவங்கியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, விலங்குகள் நல ஆர்வலர்கள் என, கூறிக்கொள்ளும், 'பீட்டா' போன்ற அமைப்புகளின் வழக்கால் தடை ஏற் பட்டது. அந்த அமைப்பு, ஜல்லிக்கட்டு குறித்த தவறான தகவல்களை, மத்திய அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவித்து, தடை பெற்ற தாக, தமிழக மக்கள் கருதுகின்றனர். இதையடுத்து, 'பாரம்பரிய உரிமையை மீட்டு எடுக்க வேண்டும்' எனக் கூறி, மாணவர்கள் அறவழி போராட்டத்தில் இறங்கினர். மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் துவங்கிய அந்த போராட்டம், இன்று தமிழகம் முழுவதும் விரி வடைந்துள்ளது. சென்னை, மெரினா கடற்கரை யில் நடந்து வரும் போராட்டம், தேசிய
ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது



ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாணவர்கள், இளைஞர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமான என கேள்வி எழுந்து உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.தினத்தந்தி

அலங்காநல்லூரில் தோல்வி - திண்டுக்கல்லில் ஜல்லிகட்டு நடத்தி பார்க்க பன்னீர்செல்வம் ஆசை? முயற்சிக்கிறார்?

மதுரையில் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை 2 மணி நேரமாக நடத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதில், கிரிஜா, மதுரை கலெக்டர் வீரராகவராவ், ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி பிதாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும், விடிய விடிய மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையும் விரிவாக விவரித்துள்ளார் கலெக்டர். இதனால் அலங்காநல்லூர் செல்வதில் பயனில்லை எனவும் முதல்வரிடம் சொல்லப்பட்டது. அதனால் அலங்காநல்லூர் செல்வதை கைவிட்டார் முதல்வர். அலங்காநல்லூர் செல்ல முடியாமல் போனதால் சென்னை திரும்புகிறார் முதல்வர் என்று பேசப்படுகிறது. சென்னை திரும்பியதும் மத்திய அரசிடம் விவாதிக்கவிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டம் ’நத்தம் கோயில்பட்டி’ கிராமத்தில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை துவங்கிவைக்கிறார் என்று நக்கீரன் இணையதளத்தில் பரபரப்பு செய்தி வெளியானது.

பன்னீர்செல்வம் சென்னை திரும்புகிறார் .. நிரந்தர தீர்வு இல்லாமல் வரவேண்டாம் .. மக்கள் போர்க்கொடி!

மதுரை: அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டு விட்டுள்ளது. வழியெங்கும் அவரது காரை நிறுத்தி மக்கள் சாலை மறியல்செய்யலாம் என்று சந்தேகப்படுவதால் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும். வாடி வாசல் திறக்கும், காளைகள் துள்ளிக் குதித்து வரும் என்று கூறியிருந்தார் முதல்வர். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் அதற்குத் தடை போட்டு விட்டனர். அவசரச் சட்டம் கண் துடைப்பு, ஏற்க மாட்டோம், நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, அதுவரை வராதீங்க என்று கூறி விட்டனர். நாலாபக்கமும் அலங்காநல்லூரைச் சுற்றிலும் மக்கள் குவிந்திருக்கின்றனர். கொந்தளிப்புடன் உள்ளனர் சமரச முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன., இதனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் சென்னை திரும்பலாம் என்று கருதப்படுகிறது. அவர் சென்ஏனை திரும்பும் வழியெங்கும் மக்கள் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தக் கூடும் என்று சந்தேகம் வந்திருப்பதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து மதுரை விமான நிலையம் வரை போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து நிலைமை பரபரப்பாக காணப்படுவதால் மதுரை முழுவதும் தொடர்ந்து பதட்டம் தணியாமல் உள்ளது. tamiloneindia

ஊரே வீடுகளை காலி செய்து ரோட்டிற்கு வந்தது ! எங்கு பார்த்தாலும் மனித தலைகள்..!

சேலத்தில் ஜல்லிகட்டுக்கான போரட்டங்கள் தீவிரமடைந்துள்ளது தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை  கரகாட்டம்  மேள தாளங்கள் முழங்க சேவல் சண்டை, சிலம்பாட்டம் மூலம் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலத்தில் மத்திய அரசை கண்டித்து, மாணவ மாணவியர்களின்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது..
இந்த நிலையில் இன்று மாணவ மாணவியர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர்   குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி : அவசரம் பகிரவும்!

அவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி..அரசின் அறிவிப்பின் படி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை (22-1-2017) ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.   இது முற்றிலுமாக சதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர் அளவில்  ஜல்லிக்கட்டு நடத்தி விட்டுவிடுவர். இங்கு தான் சற்று யோசிக்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை  அதனால் peta  அமைப்பு அச்சட்டத்திற்கு தடை வாங்க அடுத்த நாளான  திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதற்குள்ளாக இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது போல் மாயையை காட்டி நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
தயவுசெய்து இதைக்கண்டு போராட்டத்தை விட வேண்டாம்.லைவ்டே

3 வருடமாக வருமானவரி கட்டாத பீட்டா..தலைமை நிர்வாகி ஜோஷி பூரா கைதாகிறார்..?!

விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல்  வெளியாகி உள்ளது.
பீட்டா (People for the ethical treatment of animals-PETA) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது.
1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்து இந்தியாவுக்குள் கடந்த 2000ம் ஆண்டில் கால்பதித்தது.
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
அந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் தீர்மானத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு:வேளாண் பல்கலை. பதவியை ராஜினாமா செய்தார் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி தலைவர் சிவசேனாதிபதி

Karthikeya Sivasenapathy resigns from TNAU Management Board memberசென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களில் ஒருவரான காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான கார்த்திகேய சிவசேனாதிபதி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தமிழகம் முழுவதும் காளை புரட்சி வெடித்துள்ளது. மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா, திருச்சி, கோவை ஈரோடு என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.< மெரினாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மதுரை, சேலம், கோவையில் நடைபெற்று வரும் புரட்சியில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் பீட்டா தலைமை செயலகத்துக்கு முன்பாக ஜல்லிகட்டு போராட்டம் நாளை..


எதிர்ப்பு வலுக்கிறது; அமெரிக்காவில் ‘பீட்டா’ தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டம்" ; ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தினை கொண்டுவரும் பணியில் மத்திய, மாநில அரசுக்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. விரைவில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துவிட்டனர்.& போராட்டத்தின் போது மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று ஒருபுறம் கோஷம் எழுப்பினாலும், மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்புகிறார்கள். தமிழகம் முழுவதும் இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் பீட்டா பக்கம் பாய்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிறப்பித்ததையடுத்து நாளை அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வர விடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உள்ளம் பூரிக்கிறேன்.

மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில ஆளுநர் அவர்களிடமும் பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்ற நம் கனவு நனவாகி உள்ளது.

ஜல்லிகட்டு தந்த அங்கீகாரம் ! வடநாட்டு ஊடகங்களில் முதல் முறையாக தமிழ்நாடு பற்றி ஆக்கபூர்வமான


sonia singh Verified account ‏@soniandtv Most remarkable thing about the #jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment.Delhi should learn
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டி, வெற்றியை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டு போராட்டம் உலக மக்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதனால், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தப் போராட்டம். சமூக வலைதளமான டுவிட்டரில் என்.டி.டிவியின் டைரக்டர் சோனியா சிங் போட்டுள்ள பதிவு, இந்தியாவுக்கே தமிழ்நாட்டை முன்னிறுத்தியுள்ளது.
அதாவது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறுகின்றது. மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. ஆனால், எந்த ஒரு பெண் மீதும் இளைஞர்கள் கைகள் அத்துமீறவில்லை. மாறாக பாதுகாப்புகள் தான் செய்துள்ளனர்.
“சென்னை மெரினா கடற்கரை போராட்டக்காரர்களை பார்த்து, டெல்லி பாடம் கற்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். லைவ்டே

ஜனவரி 26-ஐ தமிழர்கள் கருப்பு தினமாக ,,,? பதட்டத்தில் மத்தியரசு!

உண்மையில் இந்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் பதட்டத்தில் முக்கியமானது குடியரசு தினமான ஜனவரி 26-ஐ தமிழர்கள் கருப்பு தினமாக கடைப்பிடிப்பதற்கு முன் இந்த கூட்டத்தை கலைத்துவிட வேண்டும் என்பதே.
அதற்காகவே மாநில அரசு மூலம் அவசர சட்டம் கொண்டுவந்து தமிழர்களுக்கு குச்சு மிட்டாய் கொடுக்கும் வேலையை செய்கிறார்கள்.
உண்மையில் மத்தியரசு இந்த பிரச்னையை முழுமையாக தீர்க்க வேண்டுமானால் காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிப்பது மட்டும்தான் ஒரே வழி.