திங்கள், 30 மே, 2011 இது நம்ம பழைய செய்தி ஒன்று
நடிகர் விஜயின் நாக்கில் சனி ;அம்மாவின் ஆட்சி அமைய தானும் காரணமாம் ஜெயலலிதா தனது வெற்றிக்கு யாரும் உரிமை கோருவதை சகிக்க முடியாதவர் என்பது தம்பி விஜய்க்கு தெரியாது போலும் யாரவது எடுத்து சொல்லுங்களேன் அவர் பாவம் சார்ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்: நடிகர் விஜய்ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் பேசினார்.
சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் 29.05.2011 அன்று மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.











