வியாழன், 30 ஏப்ரல், 2015

சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதாவுக்கு, இது சரியான தீர்ப்பே.

நீதிபதி தீபக் மிஸ்ராThe  learned  Appellate  Judge,  after  receipt  of  our judgment sent today, shall peruse the same and be guided by the observations made therein while deciding the appeal.ஜெயலலிதாவின் மேல் முறையீட்டை முடிவு செய்கையில், எங்கள் தீர்ப்பு கையில் கிடைத்த பிறகு, அத்தீர்ப்பை படித்துப் பார்த்து, அதில் கூறியவற்றை மனதில் வைத்து, தீர்ப்பு வழங்க வேண்டும்.
இதுதான் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு.   இந்தத் தீர்ப்பு கிட்டத்தட்ட குமாரசாமி, ஜெயலலிதாவை தண்டிக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்வது போலவே உள்ளதா என்றால் அப்படித்தான் உள்ளது.  வழக்கமாக கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தீர்ப்பளிக்கையில் நீதிபதிகள், நாங்கள் இந்த தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள், எந்த வகையிலும் தீர்ப்பளிக்கும் நீதிபதியின் எண்ணத்தை பாதிக்கக் கூடாது.இந்த கருத்துக்களை நிராகரித்து விட்டு, சாட்சிகளையும், ஆவணங்களையும் பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றே கூறுவார்கள்.
jjsasikalanakeeranஇது முழுக்க முழுக்க நீதிமன்ற மரபை மீறிய தீர்ப்பு. நீண்ட நாட்கள் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் பெற்ற ஒரு மூத்த வழக்கறிஞர் கூறியது “கடந்த 50 ஆண்டுகளாக, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வந்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் நான் படித்துள்ளேன்.  இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததே கிடையாது” என்றார்.
இது நிச்சயமாக வரலாறு படைத்துள்ள தீர்ப்புதான்.  இதனால், ஜெயலலிதாவுக்கு பாதகமா என்றால் நிச்சயம் பாதகமே.    உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மூவர் அமர்வு கொண்ட உச்சநீதிமன்றம் சொன்னால், அவர் அதை மீறி எப்படி தீர்ப்பு வழங்க முடியும் ?  மேலும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அனைத்து எழுத்து பூர்வ வாதங்களையும் நிராகரியுங்கள் என்று தெளிவாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள். ஊழல் சமூகத்துக்கு எத்தகைய தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி, இதை பரிசீலித்து தீர்ப்பு வழங்குங்கள் என்று உத்தரவிட்டால், அது ஜெயலலிதாவுக்கு எப்படி பாதகமாக இல்லாமல் போகும் ? பாதகம்தான்.   ஆனால், வினையை விதைத்தால் தினையையா அறுவடை செய்ய முடியும் ?   இந்திய நீதிமன்றங்களையும், சட்டங்களையும், வளைத்து, நெளித்து, அதன் இண்டு இடுக்களில் எல்லாம் புகுந்து, வெளியேறி, 18 ஆண்டுகளாக ஒரு வழக்கை இழுத்தடித்து, சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதாவுக்கு, இது சரியான தீர்ப்பே.
ஜெயலலிதாவின் வழக்கில் பல்வேறு தீர்ப்புகளைச் சொன்ன விசித்திரமான நீதிமன்றங்கள், இறுதியாக வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், இதுவும் விசித்திரமான நீதிமன்றம்தான் என்பதை உணர்த்தியுள்ளது.  ஆனால் இது நியாயத்தின் பக்கம் உள்ள விசித்திரம்..savukkuonline.com
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – சிலப்பதிகாரம்.

கருத்துகள் இல்லை: