சனி, 24 மே, 2014

சந்திரபாபு நாயுடு :எனது உயிருக்கு ஆபத்து உள்ளது

சீமாந்திரா புதிய முதல்–மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் 9ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஒரு புகார் கடிதம் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:–
கடந்த 2003–ம் ஆண்டு திருப்பதி அலிபிரியில் என் மீது கன்னி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மாபியா கும்பலைச் சேர்ந்த கங்கிரெட்டி முக்கிய குற்றவாளி ஆவார்.
பல சமூக விரோத செயல்களில் அவனுக்கு தொடர்பு உள்ளது. சந்தன கடத்தல் வழக்கில் அவன் முக்கிய குற்றவாளி ஆவான்.
சிறையில் இருந்த அவன் பெயிலில் வெளியே வந்து துபாய்க்கு தப்பி ஓடிவிட்டான்.
அவனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே போலீசில் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.


துபாயில் பதுங்கி இருக்கும் அவனை கைது செய்ய வேண்டும். அவனது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அவனை தப்பி ஓட செய்ததில் பெரிய அரசியல் சதி இருப்பதாக கருதுகிறேன். கங்கிரெட்டியை கைது செய்வதுடன் அவனுக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பிக்கு உத்தவிட வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: