வியாழன், 22 மே, 2014

பா.ஜ., கூட்டணியில் பதவிக்கு அன்புமணி சுதீஷ் வைகோ இடையே கடும் போட்டி!

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி; தோற்றவர்களும் மத்தியில்
அமைச்சராவதற்கு முயற்சிப்பதால், பா.ஜ., கூட்டணியில் யாருக்கு பதவி என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைக்கப்பட்ட, தேசிய ஜனநாயக கூட்டணியில், இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்று, எம்.பி., ஆகி உள்ளனர். மற்ற கட்சிகளும், அதன் தலைவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பா.ஜ., எம்.பி, என்ற அடிப் படையிலும், கட்சியின் மாநில தலைவர் என்ற முறையிலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், கட்சியினருக்கு உதவவும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், பா.ஜ., மூத்த நிர்வாகி இல.கணேசன், இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என, பா.ஜ.,வினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஒழுங்கா ஜெயிச்சு பாராளுமன்றம் போனாலே நம்ம பேச்சு எடுபடுமான்னு தெரியாது...இதுல ஓசியில குடுத்த சீட்ட வைச்சுகிட்டு எங்க மக்களுக்காக ஓங்கி ஒலிக்கிறது.. தேமுதிக இனி வெள்ளை யானை அதுக்கு தீனி போட முடியாது. அத காட்டுல கொண்டு விட்டுடவேண்டியது தான்.
ஆனால், அவர் தோல்வி அடைந்துள்ளார். ஏற்கனவே, இரண்டு மூன்று முறை அவர் தேர்தலை சந்தித்துள்ள போதிலும், வெற்றி பெற முடியவில்லை. இனிமேலும் அவரால், தேர்தலை சந்திக்க முடியுமா என்பது சந்தேகம் என்பதால், அவருக்கு இந்த முறை, ராஜ்யசபா எம்.பி., கொடுத்து, அவரை கவுரவிக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் விரும்புகின்றனர். அப்படியொரு சூழல் வரும்போது, அவருக்கும் அமைச்சர் பதவி கேட்கப்படும் என்றும், பா.ஜ.,வினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

பா.ஜ.,வில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு உள்ள சூழ்நிலை யில், கூட்டணி கட்சிகளும், இதுபோன்ற எதிர்பார்ப்புடன் டில்லியில் அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்பி., என்ற முறையில், பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணிக்கு, அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என, பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக, சிறப்பாக செயலாற்றியவர் என்ற முறையில், அன்புமணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, பா.ம.க.,வினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இவர் மீதுள்ள சி.பி.ஐ., வழக்கை காரணம் காட்டி, அமைச் சரவையில் அவரை சேர்க்கக் கூடாது என்ற எதிர்ப்பும், பா.ஜ.,வில் கடுமையாக உள்ளது. இப்படியொரு நெருக்கடியில் பா.ஜ., உள்ள நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க., - ம.தி.மு.க.,வும் கூட, அமைச்சர் பதவிக்காக காய் நகர்த்தி வருகின்றன. ம.தி.மு.க., தலைவர் வைகோ, விருதுநகரில் வெற்றி பெற்றிருந்தால், அவர் நிச்சயம் மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இருந்திருக்காது. தேர்தலுக்கு முன்பே, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இந்த உறுதியை வைகோவிடம் அளித்திருந்தார் என கூறப்படுகிறது. இப்போது, வைகோ தோல்வியை ழுவியுள்ளதால், அவரை பா.ஜ., ஆளும் மாநிலம் மூலமாக, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய வேண்டும் என, அவரது கட்சியினர் விரும்புகின்றனர். இதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற மாநில தலைவர்களும் ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் டில்லி சென்றிருந்த வைகோ, தே.ஜ., கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, வைகோவிடம் அந்த தலைவர்கள், இந்த யோசனையை கூறியதாகவும், ம.தி.மு.க., வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் அறிந்ததும், தே.மு.தி.க.,வுக்கும் இப்போது இந்த ஆசை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் டில்லியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, நரேந்திர மோடி அளித்த வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பார்த்ததும், சுதீஷுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விட்ட நம்பிக்கையே அக்கட்சியினருக்கு ஏற்பட்டு விட்டது. இவர்களுக்கு இடையில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள என்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமியும், தனது கட்சிக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்கிறார்.




எளிதல்ல...:

தேர்தலில் ஜெயித்தவர்கள் ஒரு பக்கமும், தோற்றவர்கள் மறு பக்கமும், பதவிக்காக காய் நகர்த்துவதால், பா.ஜ., மேலிடம் திணறிப் போய் உள்ளதாக தெரிகிறது. தற்போது, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆளுகிறது. பஞ்சாப், நாகலாந்து, சீமாந்திரா மாநிலங்களில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்களில் இருந்து, எத்தனை பேரை தான், ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க முடியும்? அதிலும், இப்போதைக்கு இந்த மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலுக்கு வாய்ப்பும் இல்லை. அப்படியே வாய்ப்பு வந்தாலும், சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வெளி மாநிலத்தவரை தேர்வு செய்வது, அவ்வளவு எளிதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: