புதன், 2 ஏப்ரல், 2014

அன்புமணி மீது கடும் கோபத்தில் ராமதாஸ்! பிரசாரத்திற்கு வருவாரா ? எந்த நேரமும் அய்யா சீறி பாயலாம் ? பயத்தில் கட்சியினர்


டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்கள் மகன்
அன்புமணியுடன் பயங்கர கோபத்தில் உள்ளாராம் , சாதாரண கோபம் அல்ல . கட்சியை விட்டே நீக்கும் அல்லது தானே பிரசாரத்திற்கு போகாமல் விடக்கூடிய அளவும் வெறுப்பில் உள்ளார் . பாஜகவுடன் சேரும் முடிவில் ராமதாஸ் பெரிதாக விருப்பம் காட்டவில்லை அதிலும் விஜயகாந்துடன் சேர்வதென்பது ஒரு துளியும் அய்யாவால் ஏற்று கொள்ள முடியாத தீர்மானமாகும் .அவர் உருவாக்கிய ஜாதிமைபுகள் அடங்கிய சமுதாய கூட்டணி போதிய அளவு வாக்கு வீதத்தை பெற்று தரும் .கூடவே கட்சியின் தனித்தன்மை பேணப்படும் போன்ற கருத்துக்கள் எல்லாம் புறகணிக்க பட்டன.
 அன்புமணியின் விருப்படியே ஒருவேளை வென்றாலும் கட்சியின் மாம்பழ சின்னம் பறிபோக கூடிய ஆபத்து உள்ளது, ஆனால் அன்புமணியோ மாம்பழம் போனால் என்ன கட்சி போனால் என்ன எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கினால் போதும் என்று படு சுயநலமாக உள்ளார் . அய்யாவின் திட்டப்படி சமுதாய கூட்டணி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்கு வீதம் மாம்பழ சின்னத்த்தை தக்க வைத்திருக்கும் , போதாக்குறைக்கு விஜயகாந்த் போன்ற ஒரு கேவலமான சினிமா மசாலாவுடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டி இருக்கே என்ற கோபம் வேறு அய்யாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது . சுருக்கமாக சொன்னால் அய்யா ராமதாசும் கலைஞர் அய்யாவும் ஒரே விதமான மன நிலையில் தான் உள்ளனர் . பதவி வெறி பிடித்த ஸ்டாலினும் அன்புமணியும் ஒரு சாபக்கேடான வாரிசுகளாகி விட்டனர் .அங்கே அன்புமணி இங்கே ஸ்டாலின் தந்தைகள் இருவரும் சோகத்தில் ?


கருத்துகள் இல்லை: