ஞாயிறு, 30 மார்ச், 2014

அழகிரி முதன்முறையாக திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நேரடியாகவே ...

திமுக வேட்பாளரைத் தோற்கடிப்பதே என்மீது ஆதரவாளர்கள் காட்டும் விசுவாசத்துக்கு அடையாளம் என உசிலம்பட்டியில் தனது ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி ஆவேசமாகக் கூறினார்.
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர் மு.க.அழகிரி மதுரைக்கு வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் வந்தார். அவர் வந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகனும் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரமும் வந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் ப.சிதம்பரத்துடன் தனியாக மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். அதன்பின், ஆதரவாளர்களுடன் மதுரை சாய்நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சனிக்கிழமை காலையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு தனது ஆதரவாளர்களான திமுக நகர நிர்வாகி அஜீத் பாண்டியன் தந்தை இறப்புக்கும், நேவி செüந்திரபாண்டியன் மனைவி இறப்புக்கும் அவர்களது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
அழகிரி வந்ததை அறிந்த செய்தியாளர்கள் அங்கு கூடினர். பின்னர் அவரிடம், நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்தீர்கள். ஆனால், தற்போது கருணாநிதியும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தில் பேசியுள்ளாரே எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க. அழகிரி, நான் கூட்டணி குறித்து வெளிப்படையான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. நீங்களாகவே (பத்திரிகையாளர்) எழுதிக் கொண்டீர்கள் என்றார்.
பின்னர், அவர் ஆதரவாளர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். இதையடுத்து, கார் கண்ணாடியை இறக்கிய அழகிரி, தேனித் தொகுதி திமுக வேட்பாளர் (பொன்.முத்துராமலிங்கம்) நான்காம் இடத்துக்கு செல்லும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும். அதுவே என்மீது நீங்கள் காட்டும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
மு.க.அழகிரியுடன் மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், திமுக நிர்வாகி எம்.எல்ராஜ் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
இதுவரை திமுக வேட்பாளர்கள் தோற்பார்கள் என மறைமுகமாகவே கூறி வந்தார் மு.க.அழகிரி. தற்போதுதான் முதன்முறையாக அவர் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் நேரடியாகவே கூறியுள்ளார்.
அழகிரியின் பேச்சு தி dinamnani.com

கருத்துகள் இல்லை: