ஞாயிறு, 30 மார்ச், 2014

உதயக்குமாருக்கு ரூ.9 கோடி சொத்து: வேட்பு மனுவில் தகவல் ! So நிச்சயம் பதவி தேவைதான்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ‘ஆம் ஆத்மி’ கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இடிந்தகரையில் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வந்த உதயகுமார் நேற்று அங்கிருந்து வெளியேறி நாகர்கோவில் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்வதற்காக உதயகுமார் மதியம் 12.20 மணிக்கு வந்தார். வேட்பு மனுத்தாக்கலுக்கான ஆவணங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அவர் மீது வழக்குகள் அனைத்தையும் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டியது இருந்ததால் சுமார் 2 மணி நேரம் ஆனது. மதியம் 2.20 மணிக்கு கலெக்டர் நாகராஜனிடம் வேட்பு மனுவை உதயகுமார் வழங்கினார். அங்க சுத்தி இங்க சுத்தி இந்த இடத்துக்கு தான் வருவே அடுத்தது ஹாஸ்பிடல் காலேஜ மந்திரி ..

வேட்பு மனு தாக்கலின் போது அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம் குறித்து பிரமாண பத்திரத்தில் கூறி உள்ள விவரங்கள் வருமாறு:–
உதயகுமாரிடம் கையிருப்பாக ரூ.40 ஆயிரம், வங்கிக் கணக்கில் ரூ.1.80 லட்சம் உள்ளது. 2 பள்ளி வேன், ஒரு அம்பாசிடர் கார், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளது. ரூ.3.66 கோடி மதிப்பில் விவசாய நிலமும், ரூ.1 கோடி மதிப்பிலான விவசாயம் சாராத நிலமும் உள்ளது. மேலும், அவரது பெயரில் ரூ.1.50 கோடியில் வணிக வளாகக் கட்டிடமும், ரூ.3.50 கோடி மதிப்பில் குடியிருப்புக் கட்டிடமும் உள்ளன. தாய் பெயரில் ரூ.1.50 கோடி மதிப்பில் குடியிருப்புக் கட்டிடம் உள்ளது.
உதயகுமார் பெயரில் வங்கிக் கடன் இல்லை. மனைவி பெயரில் ரூ.2,97,000 வங்கிக் கடன் உள்ளது. மனைவி பெயரில் ரூ.1.98 கோடி விலை உயர்ந்த பொருள்களும், தாயார் பெயரில் ரூ.3.30 லட்சத்தில் விலை உயர்ந்த பொருள்களும் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. .maalaimalar.com/


கருத்துகள் இல்லை: