செவ்வாய், 20 செப்டம்பர், 2011

புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நெதலாந்து ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது!


புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நெதலாந்து ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது!
புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கியது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து இலங்கை தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ரெலிகொம் நிறுவனத்தினர் நேற்று இடம்பெறவுள்ளது.
இந்த விசாரணை நெதலாந்து ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் போது, சர்ச்சைக்கு உரிய சனல் 4, காணொலியை நீதிமன்றில் ஒளிபரப்புமாறு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டதரணிகள் கோரியிருந்தனர்.
இதற்கான அனுமதியினையும், நீதிபதி வழங்கியுள்ளார்.
புலிகள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என நிரூபிப்பதே புலி ஆதரவாளர்களின் நோக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நெதலாந்திற்கான இலங்கை தூதுவர் புத்தி ஆத்தாவுட தெரிவித்துள்ளார்.
இந்த காணொலியை நீதிமன்றில் ஒளிபரப்ப வேண்டாம் என்பதை உத்தியோகபூர்வமாக கோருவதே தூதுவராலயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 காணொலி நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்படுமானால், இலங்கை அரசாங்கம் தயாரித்த பதில் காணொலியும் ஒளிபரப்பப்பட வேண்டும் என நெதலாந்திற்கான இலங்கை தூதுவராலயம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: