திங்கள், 19 செப்டம்பர், 2011

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாணவன் முதலிடம்.

முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீடசையில் 194 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


சேதுராகவனின் தந்தை புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி அதிகாரியாகவும், தயார் கரவெட்டி யார்க்கரை அ.த.க பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றனர்.


இவரது சிறந்த பெறுபேறு பற்றிக் கேட்டபோது யுத்த சூழ்நிலையில் படித்துவந்த தான் இவ்வாறு முதலிடத்தைப் பெறுவேன் என நினைத்திருக்கவில்லை என்று புன்னகையுடன்  தெரிவித்தார்.
பெற்றோர் மற்றும்  பாடசாலை அதிபர், ஆசிரியர்களே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் இந்த மாணவன் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் பொறியிலாளராகவரவேண்டும் என்பதே எனது ஆசை, எனது வெற்றிக்கு உதவிய இறைவனுக்கும் ஏனையோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றார் அவர்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற சேதுராகவனுக்கு வடமாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் எல்.இளங்கோவன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன், ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: