dinakaran.com -MuthuKumar : சென்னை: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:
தேனி மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து 17 பேர் வந்து தப்பி ஓடி இருக்காங்க. இந்த ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, போலீசுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுவரைக்கும் தவெக ஆட்சியில 50 பேர் சிறைக்காவலில் இருந்து தப்பித்திருக்கிறாங்கன்னா என்ன நிர்வாகம் செய்கிறார் தமிழ்நாட்டுடைய முதல்வர்? இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில இதுவரைக்கும் நடந்ததே கிடையாது.
சிஎம் சார், நீங்க வந்து ஆய்வு பண்ணீங்க சிறைச்சாலைக்கு போய். ஜோசியருடைய பரிகாரத்தை செய்வதற்காக சிறைச்சாலைக்குள்ள போய் வந்தீங்களா?
அமைச்சர் நிர்மல் குமார் வாய்க்கிழியே வக்கனையா பேசுறதுலதான் இருக்கார். சார், நீங்க பேட்டி கொடுக்கற நேரத்தில போய் பைல பார்த்தா கூட சார், ஆய்வு பண்ணா கூட சார், சட்டம் ஒழுங்கை காப்பாத்தலாம் சார். இந்த கேபினெட்ல வந்து ஒரு மந்திரிகூட உருப்படியா வேலை செய்ற மாதிரி தெரியல.
கத்தி படத்தில மேப் போட்டு பிடிச்சார் நம்ம முதல்வர். இப்ப எங்க போனார் இவரு? இப்ப இவர் மேப் எங்க? இவர் எங்க போய் வந்து கைதிகள எப்படி பிடிக்கப் போறாரு?. சினிமாவைப் பார்த்து மோகத்தில ஓட்டு போட்ட மக்களுக்கு எல்லாம் இது மிகப்பெரிய பரிசா கொடுத்திருக்கிறார் முதல்வர். சினிமாவில ஹீரோ சார், நீங்க மறுபடியும் மறுபடியும் சொல்றேன், சினிமாவில ஹீரோ சார், நீங்க. நடைமுறையில தமிழ்நாட்டில சிம் ஆக நீங்க ஜீரோவாதான் இருக்கீங்க. நான் என்ன கேக்கறேன்னா, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதல்வர் ஏன் மவுனமா இருக்கிறார்? வெறும் ரீல்ஸ் போடுறதுதான் அவருடைய நோக்கமா இருக்குதுன்னா எதுக்கு நீங்க ஆட்சிக்கு வந்தீங்க?
50 கைதிகள் இன்றைக்கு வந்து தப்பித்திருக்கிறாங்க. காவலர்கள் தாக்கப்பட்டிருக்கிறாங்க. இதுக்கு தமிழக அரசினுடைய விளக்கம் என்ன? முதலமைச்சர் என்ன நிலைப்பாடு எடுக்கப் போறார்?. தினந்தோறும் நிர்மல் குமாரை கூப்பிட்டு வந்து பேட்டி கொடுத்து திமுகவை திட்ட சொல்ல தெரியுதுல்ல? ஏன் ஒழுங்கா போய் வேலைய பார்க்க மாட்டியான்னு கேட்க தெரியாதா முதல்வருக்கு?.
சிடி நிர்மல் குமார், ஒன்னு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சரா பணியாற்ற தெரிஞ்சா வேலை செய்யுங்க. இல்லன்னா விட்டுட்டு போங்க. எதுக்கு இந்த பதவி உங்களுக்கு? மக்களுடைய வரிப்பணத்தில அதிகாரத்தில உட்கார்ந்துகிட்டு ஏன் ஏமாத்துறீங்க? இன்னும் நீங்க வந்து ஆட்சியில வந்த மனநிலையில இல்லை. அதனால்தான் நான் சொன்னேன், சிறையிலேயே பாதுகாப்பு இல்லைன்னா மக்களுக்கு நாட்டில வந்து எங்க பாதுகாப்பு இருக்கும்?
இனிமேல் நிர்மல் குமார் வாய்க்கிழியே வெளிய வந்து பிரஸ் பார்க்கறத எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா போய் வந்து மக்கள் பணி ஆற்றுங்குதான் நான் கேட்டுக்கிறேன். 17 பேர் தப்பித்ததற்கான உண்மையான காரணத்தை அரசு விளக்கணும். இது நாடா காடான்னு கேட்டீங்களே சிஎம் சார். நாங்க இப்ப கேக்குறோம் சார். இது நாடா இல்ல காடா சார்? தமிழ்நாட்டுல தான் நாங்கல்லாம் இருக் கறோமா?
அமைதியான அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை இப்படி சிதைச்சிட்டீங்களே சார். மக்களை ஏமாத்திட்டீங்களே சார். வஞ்சிட்டீங்க, வஞ்சித்துருக்கீங்க மிஸ்டர் சிஎம். இதுக்கு மேலயும் நீங்க அமைதியா இருந்தீங்கன்னா, இந்த மக்கள் உங்களை மன்னிக்க மாட்டாங்க. இவ்வாறு கூறினார்.
பேட்டியின் போது வழக்கறிஞர் மதிவாணன் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக