வியாழன், 14 மே, 2026

சட்டமன்றத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள்

May be an image of text that says "அனல் கக்கிய உதயநிதி! சலனமின்றி அடித்த விஜய் அதிர்ந்த சபை"

 ராதா மனோகர் : நடிகர் விஜயின் அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பதில் சிலர் அவசரம் காட்டுவது சரியல்ல என்று தோன்றுகிறது 
பொதுவாகவே ஒரு புதிய அரசு பதவி ஏற்றால் மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் 
அதிலும் விஜய் அரசியலுக்கு புதியவராக இருப்பதால் கொஞ்சம் அனுதாபமும் இருக்கும் 
அவரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் 
41 கொலைகளையே தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
அது தன்மீது ஏவிவிட்ட சதியென்று பலரையும் நம்பவைத்த காரிய களவாணி அது.
ஆனாலும் ஆட்சிக்கும் அரசுக்கும் புதுசு 
அவரின் அப்பாவி முகத்தை கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணாமல் இருப்பது நல்லது 
கொஞ்சம் பொறுத்தால் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வெளிவரும் 
அதுவரை பொறுத்தல் நல்லது 


அதுவரைக்கும் அவரை சீண்டும் பேச்சை தவிர்த்தல் நல்லது 
அவர் மீது ஒரு அனுதாபம் வருமளவுக்கு அவரின் பலவீனங்களை குறித்து இப்போது தாக்குவது புத்திசாலித்தனமல்ல 
இன்னும் ஏராளமான விடயங்கள் வெளிவரும்  
எதிர்ப்பதற்கு மட்டுமல்ல கடித்து குதறுவதற்கு வாய்ப்புக்கள் வரும்   
அந்த அளவுக்கு அரசியல் குற்றப்பின்னணி அவரை சுற்றி இருக்கிறது 
இப்போது அவர் மீது அனுதாபம் உருவாக்க கூடிய எதையும்  தவிர்ப்பது நல்லது 
மக்கள் அவருக்கு எதிராக கிளம்பி எழுவார்கள் எகிறி பாய்வார்கள் 
அப்போது அந்த எதிர்ப்புக்கு உரிய தலைமையை வழங்கலாம் 
தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள் 

கருத்துகள் இல்லை: