தினமலர் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தற்போது, தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:
1. விஜய்
2. ஆனந்த்
3. ஆதவ் அர்ஜூனா
4. அருண் ராஜ்
5. செங்கோட்டையன்
6. வெங்கட்ரமணன்
7. நிர்மல்குமார்
8. ராஜ்மோகன்,
9. பிரபு
10. கீர்த்தனா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
ஆதவ் அர்ஜூனா ஆண்டவன் மேல் உறுதி என பிரமாணம் எடுக்க வில்லை. சொந்த விஷயம் சரி ஆனால் ஒவ்வொரு கட்சி ஆபீஸூக்கும் அலைந்து, மற்றும் அதன் தலைவர்கள் காலில் விழாத குறையாக உறுதி சொல்லி அலைந்ததற்கும் இதற்கும் நேராகிவிட்டது.
வாழ்த்துக்கள் விஜய் உங்கள் பதவி ஏற்பு விழா சிறப்பு. உங்கள் பெற்றோர் பூரிப்புடன் ""என்னோற்றாங்கொல்லெனும் சொல்"" என்ற குறளுரைக்கு ஏற்ப பாசமாக பார்த்தது சரித்திரம், சிறப்பு விஜய் சார், உங்கள் பிள்ளைகள் செய்த பாவம் என்ன??. தந்தை முதலமைச்சர் பதவி ஏற்பதை உங்கள் சொந்தக் குழந்தைகள் பார்த்திருந்தால் ஆனந்தம் அடைந்திருப்பர். நீங்கள் அவர்களை கூட்டி வந்திருந்தால் அனைத்து குழந்தைகளூம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால் வருத்தம் என்ன வென்றால் உங்கள் கட்சி முக்கியஸ்தர்களில் ஒருவர் கூட அதை முயற்சிக்காமல் இருந்தது துரதிருஷ்டம். கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் பாவம்
ஒவ்வொரு அமைச்சர் பதவிப் பிரமாணம் எடுத்து விஜய்யைக் கட்டிப்பிடித்த போதும் எழுந்து நின்று மரியாதை செலுத்தின ராகுல் பாராட்டுக்குரியவர் .
கடைசியில் விஜய்யும் பதவி அடைய யாருடைய கால்லையும் விழ தயாரா இருந்து நம்பிக்கையை வீண் போக வச்சி தானும் ஒரு அரசியல்வாதினு proof பண்ணிட்டாரு. கொள்கை முக்கியம் இல்ல பதவி அடைவது தான் முக்கியம். ஆனா ஒன்னு எப்ப யாரு கால வார போறாங்கனு எச்சரிக்கையாகவே இருக்க வேண்டிய நிலை. வாக்குறுதியை நிறைவேற்ற படாத பாடு படனும்.
ஆதவ் அர்ஜுனனுக்கு ஆண்டவன் என்றால் பயம், அலர்ஜி போலும். பயங்கரமாக தவறு செய்திருப்பான் அல்லது செய்யப்போகிறான். அதனால் தான் ஆண்டவன் மேல் உறுதி மொழி எடுக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக