![]() |
ராதா மனோகர் : இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
எந்த குழந்தைகளுக்கும் தந்தை தாயன்பு என்பது அடிப்படை உரிமை!
அடிப்படை ஆதாரம்!
அதிலும் தந்தை நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்!
இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல எங்கோ ஒரு தூரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்
இத்தனைக்கும் காரணமான அப்பன்காரன் நாட்டுக்கே எழுச்சியும் உயர்ச்சியும் வழங்க போகிறேன் என்று ஊரை கூட்டி கதை அளந்து கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே 41 உயிர்களை கொன்றுவிட்டு . அதை பற்றி எந்த கவலையும் அற்று அதைப்பற்றி ஏதோதோ கதைகள் எல்லாம் கூறிவிட்டு,
![]() |
அந்த அப்பாவி உயிர்களின் குடும்பத்தினரை தன்வீட்டிற்கே அழைத்து ரொம்ப சாரிங்க என்று கூறிவிட்டு அலட்சியமாக கடந்து விடுகிறார்!
இவர்தான் நாட்டை காக்கப்போகிறேன் நாகரிக கோமாளி வந்தேன்ங்க என்று கூறுகிறார்
ஒரு மனிதன் தன்குடும்பத்தினரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டிய விடயம்தான்
எல்லாவற்றிலும் சிகரம் வைத்தாற்போல் மனைவியை குழந்தைகளின் உணர்வுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை அற்று பல காதலில் சறுக்கி விழுந்து இது இன்றைய காதல் என்று வந்த ஒரு பெண்மணியோடு பகிரங்கமாக காட்சி அளிக்கிறார்
இவர் எவ்வளவு தடித்த ஒரு எருமை தோல் போர்த்த மனிதர்?
சங்கீதாவுக்கும் மகன் ஜேசனுக்கும் மக்கள் ஷாஷாவுக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்
நாங்கள் உங்களோடு நிற்கிறோம் கலங்க வேண்டாம் செல்வங்களே!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக