செவ்வாய், 14 ஏப்ரல், 2026

ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்


 ராதா மனோகர்
: 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.

 அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் ஆபரேஷன் லிபேரேஷன் என்ற ராணுவ முன்னெடுப்பு வடமராட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் நடத்தப்பட்டது 
சுமார் 4000 படையினர் குவிக்கப்பட்டு ஈவு இரக்கம் இல்லாமல் கடுமையாக ராணுவம் போரிட்டது 
அன்றைய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலீயின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டது (லலித் அத்துலத் முதலி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தவர்)
அந்த ஆபரேஷன் லிபேரேஷன் ஈழப்போராட்டத்தின் முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.

அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் ஆபரேஷன் லிபேரேஷன் என்ற ராணுவ முன்னெடுப்பு வடமராட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் நடத்தப்பட்டது 
சுமார் 4000 படையினர் குவிக்கப்பட்டு ஈவு இரக்கம் இல்லாமல் கடுமையாக ராணுவம் போரிட்டது 
அன்றைய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலீயின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டது (லலித் அத்துலத் முதலி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தவர்)
அந்த ஆபரேஷன் லிபேரேஷன் ஈழப்போராட்டத்தின் முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.
   



1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன 
 அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.
Operation Poomalai பூமாலை என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் 5 Antonov An-32 military transport aircraft 5 அன்டநொவ் An 32 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன!
இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தியை இலங்கை அரசு புரிந்துகொண்டு இந்தியா அரசோடு பேச்சு வார்த்தைக்கு தயாரானது.
மீதி நடந்த விடயங்களை ஓரளவு எல்லோரும் அறிந்தவையே .
இந்த பதிவின் மூலம் நான் சொல்லப்போகும் விடயம் 
புலிகள் இந்த விடயத்தை ஆரம்பத்தில் இருந்தே எப்படி குள்ளநரித்தனமாக அணுகினார்கள் என்ற விடயம்தான் நான் கூற விளைவது.  
கடும் ராணுவ நடவடிக்கைகளால்  பெரும் இன்னல்களுக்கு உள்ளன மக்களின் பார்வையில் இந்திய ராணுவ விமானங்களின் வருகை  பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
எல்லோர் முகத்திலும் இழந்த நம்பிக்கைகள் மீண்டு வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இனி இந்தியா எங்களை காப்பாற்றும் என்று ஒவ்வொருவரும் நம்பினார்கள் 
இந்தியாவும் அந்த நம்பிக்கையோடுதான் வந்திருந்தது.
ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டும் மக்களின் இந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கண்டு  பயந்து போயிருந்தான்.
ஆமாம் மக்களின் மகிழ்ச்சியை பார்த்தால் அவன் பயப்படுவான் 
மக்களின் பயம்தான் அவனுக்கு சுவாசம் .. அப்படி ஒரு டிசைன் 
இலங்கை ராணுவம் இனி தனக்கு அங்கு வேலை இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தது.

May be an image of text
மக்கள் சுதந்திரமாக நடமாட தொடங்கி இருந்தார்கள் 
ஆங்காங்கே உரிமையாளர்கள் இன்றி மூடப்பட்டிருந்த கடைகளை மக்களே உடைத்து பொருட்களை அள்ளி சென்ற காட்சியும் காணக்கூடியதாக இருந்தது 
பெயருக்குதான் ராணுவம் இருந்தது 
இந்தியாவோடு மோதுவதற்கு எமக்கு பலம் இல்லை என்று ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தனா அறிவித்தார் 
இந்த செய்தியானது ராணுவத்தின் உளவியலில் எப்படி பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கும் என்று ஊகித்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றிலும் மேலாக இந்திய விமானங்கள் போட்ட அரிசி பருப்பு சர்க்கரை மாவு போன்ற பொருட்களை மக்கள் எடுக்க கூடாது  என்று பிரபாகரன் அறிவித்தார் 
அது மட்டுமல்ல அப்படி எடுத்தவர்கள் அருகில் உள்ள புலிகளின் முகாமிற்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றும்  மிரட்டல் விடுத்தான்.

May be an image of text
பின்பு அவற்றை கொள்ளை விலைக்கு விற்றார்கள் அவர்கள்.
இந்த நிலையில் மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்க வேண்டிய தேவை  பிரபாகரனுக்கு இருந்தது.
போர் முடிந்து விட்டால் தனக்கு ஏது மதிப்பு?
போர் இன்னும் முடியவில்லை என்று மக்களுக்கு காட்டுவதற்கு நெல்லியடியில் அமைதியாக இருந்த ராணுவ முகாமிற்குள் வெடிகுண்டு நிரப்பிய    லாரி ஒன்றை அனுப்பினார்கள் புலிகள் 

May be an image of text
5 July 1987 அன்று நடந்த அந்த அநியாய தாக்குதலில்  மூன்று புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள் என்று கூறினார்கள் 
அந்த தாக்குதலில்  19 ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்  31 வீரர்கள் காயமடைந்தனர்  
போர் முடிந்து விட்டது இனி நிம்மதியாக வீடு போய் சேரலாம் என்று அமைதியாக இரவில் தூங்கி கொண்டிருந்த  அப்பாவி ராணுவத்தினர் இந்த காட்டுமிராண்டிகளால் உயிரை இழந்தார்கள் 
போர் முடிந்து விட்டது  
இந்தியாவின் அரிசி பருப்பு சர்க்கரை மூட்டைகளை எண்ணிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இந்த தற்கொலை தாக்குதல் தேவைதானா?
இதில் இன்னொரு சோகம் இருக்கிறது 
இதில் தற்கொலை போராளியாக பருத்தித்துறை எம்பி துரைரெத்தினத்தின் மகன் ஒருவரும்  பங்கு பற்றி உயிரிழந்தார் 
எம்பி துரைரத்தினம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியலுக்கு வாழ்க்கை முழுவதும்  எண்ணெய் ஊற்றியர்கள்தான்.
தேர்தல் அரசியலில் தோல்வியே காணாத  வரலாற்றுக்கு சொந்தக்காரர் துரைரெத்தினம் ( 1960 இல் லிருந்து 1983 வரை எம்பி) அவர்கள். 
வெறும் வெறுப்பு அரசியல் என்பது இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் என்ற சிகரெட் விளம்பரத்திற்கு நிகரானது  
துரைரத்தினம் மட்டுமல்ல வேறு சில தமிழரசு கட்சி தலைவர்களும்  இந்த கர்மாவில் இருந்து தப்பவில்லை  
இந்த விதியில் இருந்து தப்பியவர்கள் SJV. செல்வநாயகம்  - EMV நாகநாதன் மட்டும்தான் 
 

கருத்துகள் இல்லை: