திங்கள், 13 ஏப்ரல், 2026

வவுனியா ஓமந்தை இந்திய ராணுவ முகாமில் புலிக்கொடி!. 7-august 1987


 ராதா மனோகர்
: ராஜிவ் ஜேயார் ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை வந்த  இந்திய அமைதி படையை புலிகள்  கோலாகலமாக வரவேற்றார்கள்!
இவர்களுக்கு இடையே ஒரு கல்யாண வீட்டுக்கு நிகரான கொண்டாட்டம் இருந்தது 
இந்திய ஹெலிகாப்டர்களில் தங்கள் தளபதியின்  மணப்பெண்ணை அழைத்து வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது.
பரஸ்பரம் உணவு பரிமாறினார்கள். 
இந்திய படையினரும் கூட  புலிகளை இட்டு பெருமிதம் கொண்டிருந்தனர் 
ஒருவேளை புலிகளை ஒரு இந்து வீரர்கள் என்ற நோக்கத்தில் அணுகினார்களோ தெரியவில்லை. 
இவர்களுக்கு இடையேயான அந்த தேன்நிலவு எப்படி கசந்தது?
பச்சையாக சொன்னால் புலிகளுக்கே உரித்தான பேராசையும் முரட்டுத்தனமும் கத்துக்குட்டித்தனமும்  எல்லையற்ற பாசிச குணாம்சம் அதில்  அடங்கி இருக்கிறது!   
.7-august 1987 -ஈழநாடு பத்திரிகை 
வவுனியாவில் இந்திய இராணுவத்தினர் 
ஓமந்தை ராணுவ முகாமில் புலிக்கொடி!
அமைதி காக்கும் இந்திய படையினர் நேற்று முன்தினம் வவுனியா வந்து சேர்ந்தனர். இவர்கள் திருகோணமலையில் இருந்து ட்ராக் வண்டிகளிலும் டாங்கிகளிலும் கனரக வாகனங்களிலும் வந்து சேர்ந்தனர் .
புலிக்கொடி பறக்கவிடப்பட்ட ஜீப் வண்டியொன்றில் இந்திய ராணுவ அதிகாரிகள் முன்னேற 600 இந்திய ராணுவ அணி வந்து சேர்ந்தது.
இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகையை அறிந்த பொதுமக்கள் வீதிகளில் கூடி நின்று தமது மகிழ்ச்சியை தெரிவித்து ஆரவாரம் செய்தனர்.
இதே வலை வவுனியா நகரில் போலீஸ் நிலையத்திற்கு அண்மையில் பொதுமக்கள் சிவக்குடையல் நின்ற நபரொருவர் இந்திய ராணுவ அணியினரை நோக்கி வெற்று போத்தலால் எறிந்தார்.
ஆனாலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
உடனடியாக இலங்கை ராணுவத்தினர் அந்நபரை பிடித்து போலீஸ் நிலையாம் கொண்டு சென்றனர்.
இந்திய ராணுவத்தினர் தற்போது வவுனியா காமினி வித்தியாலயத்தில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று முல்லை தீவு மன்னார் ஆகீய பகுதிகளுக்கு சென்றனர்
வவுனியா நகர் முழுவதும் தற்போது புலிகொடிகள் அநேகமாக கட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது .லாரிகள் கார்களிலும் மக்கள் புலிக்கொடியை பறக்க விட்டு செல்கின்றனர்.
இதற்கிடையில் ஓமந்தை ராணுவ முகாமிற்குள் பெரிய அளவிலான புலிக்கொடியும் சென்றியில் ஒரு  சிறிய  புலிக்கொடியும் பறக்க விடப்பட்டுள்ளன.
வவுனியாவில் இந்திய இலங்கை ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காணப்பட்டது .
சுமார் 12 ஹெலிகாப்டர்கள் இவ்வாறு பறந்து திரிந்தன.
இந்த ஹெலிகாப்டர்களில் இலங்கை ராணுவத்தினரை கொழும்புக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது            

கருத்துகள் இல்லை: