வியாழன், 25 டிசம்பர், 2014

K.Balachandar தமிழ் சினிமாவின் ஹீரோ வேர்ஷிப் கலாசாரத்தின் கன்னத்தில் அறைந்தார்!

எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா கடவுள்கள் தமிழ்நாட்டு ரசிகனை படு முட்டாள்களாக்கி கொண்டிருந்து ஒரு இருண்ட யுகத்தின் கருப்பு வெள்ளை விடிவெள்ளியாக பாலச்சந்தர் உருவானார். அபூர்வ ராகங்கள் வெளியான அன்றைய தேதியில் சிவாஜி எம்ஜியாரை விட நடிகை ஸ்ரீவித்தியா தமிழ் ரசிகரின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தார் . இது பாலச்சந்தரின் சாதனை.ஒரு ஆணாதிக்க சமுகத்தில் இது உண்மையில் பெரும் மாறுதல்தான் .மாற்று சினிமாவை பலரும் ஆங்காங்கு பரீட்சார்த்தமாக உருவாக்கி கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அதை வியாபார ரீதியாகவும் வெற்றியாக்கி காட்டியவர் பாலச்சந்தர்தான். சிவாஜியும் எம்ஜியாரும் தமிழ் ரசிகனின் ஆரோக்கியமான ரசனையை சுனாமி போன்று அழித்து கல்லா கட்டிய காலத்தில் அதை உடைத்தவர் . இதே புரட்சியை இவருக்கு முன்பாக புரட்சி டைரெக்டர் ஸ்ரீதரும் செய்தவர்தான். ஆனால் அவர் பிற்காலத்தில் அதே நாயக வழிபாட்டு கோஷ்டிகளிடம் சிக்கவேண்டிய நிதி நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் .ஒரு அற்புத படைப்பாளி எம்ஜியாரின் நாலாந்தர மாசாலாவினால் ஒக்சிஜன் பெறவேண்டி ஏற்பட்டது.
பாலச்சந்தரும் கிட்டதட்ட அதே நிலைக்கு வந்து விட்டார் .ஆனாலும் சின்னத்திரை என்ற கட்டுமரம் கரை சேர்க்க ஏதோ நாயகவழிபாட்டு குற்ற சாட்டில் இருந்து கொஞ்சம் விடுபட்டுவிட்டார். ஆனாலும் இவரே உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் புதிதாக ரஜனி கமல் என்ற நாயக வழிபாடுகள் ஆரம்பித்து விட்டன.திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இங்கே நான் திருடன் என்று குறிப்பிட்டது ஹீரோ வேர்ஷிப்பை தண்ணீர் ஊத்தி ஊத்தி வளர்த்து காசு பார்க்கும் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு வம்பு ............

கருத்துகள் இல்லை: