ஞாயிறு, 21 டிசம்பர், 2014

தமிழகத்தின் கவுரவம் காக்க பா.ஜ., ஆட்சி !அமித் ஷா சூளுரை !

அமித்ஷா இவ்வளவு முட்டாள்தனமான கருத்தையா சொல்லுவார் .....கச்சா எண்ணெய் விலையை மோடி குறைத்தாரம் .....அது உலக சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதை இப்போதுள்ள அனைவரும் அறிவர் .....அறிவுகொழுந்தாக இருக்கிறார் .....இவர் பேச்சு இங்கு எடுபடாது.... ஓட்டுக்காக என்னவேண்டுமானாலும் பேசுவார் போல தெரிகிறது .....மற்ற மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் , பொய்யான வாக்குறுதிகளாலும் ஆட்சியை பிடித்தனர்....அந்த ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்ச ரூபாய் மேட்டரை பற்றி பேசினார் என்றால் நல்லா இருக்கும்

Amith Shaw : Bjp will save pride of tamilnadu !தமிழகத்தின் மரியாதையை காப்பாற்ற, தமிழின் கவுரவத்தை காக்க, பா.ஜ., வலிமை பெற்று, ஆட்சிக்கு வர வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து பேசினார்.
சென்னை, மறைமலை நகரில் நடந்த பா.ஜ., பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது: தமிழ் கற்க துவங்கி விட்டேன்; விரைவில் உங்களிடம் தமிழில் பேசுவேன். இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. மோடி நாட்டின் பிரதமராகி இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்துள்ளன; காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. அங்கு பிரசாரம் செய்த ராகுல், 'ஆறு மாதங்களில், மோடி அரசு என்ன செய்தது?' என கேட்டு உள்ளார். அதை நான் பட்டியலிடத் தயார். ஆனால், 60 ஆண்டுகளாக, ராகுல் குடும்ப ஆட்சியில் என்ன செய்தீர்கள்? பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடிக்கு, விலைவாசி உயர்வின் வலி தெரியும்; ஆனால், வெள்ளிக் கரண்டியில் பால் குடித்து சொகுசு வாழ்க்கை வாழும் ராகுலுக்கு, அந்த வலி தெரியாது கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், எப்போதாவது பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்ததா? மோடி ஆட்சிக்கு வந்த பின் தான், 10 முறை குறைந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு குடும்பத்திற்கும், மாதம் 1,000 ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளோம். காங்., ஆட்சியில் இருந்தபோது, இந்திய எல்லையில், துப்பாக்கி சண்டையை ஆரம்பித்ததும், முடித்ததும் பாகிஸ்தான். ஆனால் இப்போது, துப்பாக்கி சண்டையை துவக்குவது, பாகிஸ்தான்; முடிப்பது இந்தியா. காங்கிரஸ் ஆட்சியில், வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடியது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும், அதைப் போக்க, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம், வேலைக்கான கதவு இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், இந்தியாவில் உற்பத்தியைத் துவக்க தயாராகி வருகின்றன. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 2ஜி, ஹெலிகாப்டர் வாங்கியது, நிலக்கரி சுரங்க ஏலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி என, பல துறைகளிலும் ஊழல் செய்துள்ளனர். கார்கில் போரில் இறந்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பில், ஊழல் செய்தனர். 10 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் - தி.மு.க., இணைந்த கூட்டணி அரசின் ஊழலுக்கு, பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, மக்களுக்கு உள்ளது. ராகுலுக்கு, ஒன்றை கூறிக் கொள்கிறேன். ஐந்தாண்டு ஆட்சி முடிந்து, மக்களிடம் ஓட்டு கேட்க வரும் போது, எங்கள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளையும் நீங்கள் கூற முடியாது.

நிர்வாகத்தில், முடிவு எடுக்க முடியாத நிலை, முன்பு இருந்தது. அந்த நிலையை மாற்றி இருக்கிறோம். இப்போது புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் முடிவு எடுக்கும் நிலையை மாற்றி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் கூடி, முடிவெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டக் கமிஷன் இருந்த இடத்தில், அமைச்சர்கள் குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், 100 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம், நம் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை, மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். வரும் 2019ல் குப்பை இல்லாத இந்தியா உருவாகும். முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் மேற்கொண்டதால், வளர்ச்சி சதவீதம் 4.5 லிருந்து 5.7 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் நிதி திட்டம் மூலம், எட்டு கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., மிகப் பெரிய அரசியல் கட்சி; ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சி. இங்கு இருப்போர், சிறிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கேரளா, தமிழகம், ஆந்திரா, ஒடிசா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில், பா.ஜ.,வை வலிமையாக்க உறுதி பூண்டுள்ளோம். தமிழகத்தில் குடும்ப ஆட்சி முடிவுக்கு வர, இளைஞர்களுக்கு வேலை, 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்க, உலகில் எந்த பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்கள் கவுரவமாக வாழ, தமிழகத்தில் பா.ஜ.,வை மிகப் பெரிய கட்சியாக மாற்ற வேண்டும்; ஆட்சிப் பொறுப்பிலும் அமர வைக்க வேண்டும். தமிழகத்தின் மரியாதையை காப்பாற்ற, தமிழின் கவுரவத்தை காக்க, பா.ஜ., வலிமை பெற வேண்டும். மோடியின் தூதராக, பா.ஜ., தூதராக, கிராமங்களுக்கு சென்று, அனைவரையும் பா.ஜ.,வில் உறுப்பினராக்குங்கள். இவ்வாறு, அவர் பேசினார். பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது, ''எல்லாரிடமும் மொபைல் உள்ளது. கட்டணமில்லா எண்ணை கூறுகிறேன். அதற்கு டயல் செய்தால், பா.ஜ.,வில் உறுப்பினராகலாம். உங்கள் மொபைல் போனை எடுத்து, 18002662020 என்ற எண்ணுக்கு, டயல் செய்யுங்கள். உடனே எஸ்.எம்.எஸ்., வரும். உறுப்பினர் எண் வரும். எஸ்.எம்.எஸ்., மூலம் கேட்கும் விவரங்களை தெரிவித்தால், பா.ஜ.,வில் மிக எளிதாக உறுப்பினராகலாம்,'' என கூறி, பா.ஜ.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  
'சீட்' பயத்தில் முதல்வர்:
பொதுக் கூட்டத்தில், பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் பேசியதாவது: தமிழகத்தில், நீண்ட காலம் முதல்வராக இருந்தவர், தன் குடும்பத்தை தான் பார்த்தார்; மக்களை கண்டுகொள்ளவில்லை. இன்று, அவரது குடும்பத்தினர், சிறை பயத்தில் உள்ளனர். மற்றொரு கட்சிக்கு, தமிழக மக்கள் மெஜாரிட்டி கொடுத்தனர். ஆனால், அதன் தலைவருக்கு, கோர்ட் தண்டனை கொடுத்துள்ளது. தற்போதைய முதல்வர், தன் சீட்டில் அமரவே பயப்படுகிறார். அந்த கட்சியில் தலைவர்கள் இல்லை. பா.ஜ.,வில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். தற்போது தமிழகத்தில், மாற்றத்திற்கான காலம் வந்து விட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை: