வியாழன், 25 டிசம்பர், 2014

ஆசிட் வீச்சுக்கு தூக்குதண்டனை ! சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு,

புதுடில்லி: 'ஆசிட்' வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிலும், பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுவதாக புகார் எழுந்து உள்ளது. 
நல்ல முடிவு...பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுவது ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டால் தூக்கு நிச்சயம்...இந்த தண்டனை வரவேற்க தக்கது...பெண் வன் கொடுமை என்பது எக்காலத்திலும் சகித்து கொள்ள முடியாதது...அவன் ரோட்டுல எவளையாவது பாத்துட்டு இவள நான் உருகி உருகி காதலிக்கிறேன் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா, எனக்கு கிடைக்காத இவ இனி யாருக்குமே கிடைக்க கூடாதுன்னு தப்புன்னு ஆசிட்ட ஊத்திட்டு போயிடறாங்க...இதுல அந்த பொண்ணு மேல ஏதாவது தப்பு இருக்கா..இல்ல...ஒரு பெண்ணை காதலிக்கிறது எப்படி உன் தனிப்பட்ட உரிமையோ அப்படி தான் அந்த பெண்ணும் யாரை காதலிக்கனும்கிரது அவளோட தனிப்பட்ட உரிமை. இதில் வன்கொடுமை என்பது ஏற்று கொள்ள முடியாதது...இத மாதிரி ஆசிட் வீசுகிறவனை எல்லாம் தூக்குல போடணும்..
இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கையில் எடுத்துள்ளார். தற்போதுள்ள சட்டப்படி, ஆசிட் வீச்சு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகளோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை, 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்த விதிமுறைகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஆசிட் வீச்சு குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மை அடிப்படையில் அதிகபட்சமாக, தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும்.


* வழக்கின் விசாரணை, மேல் முறையீடு உள்ளிட்டவற்றுக்கு காலம் வரையறுக்கப்படும்.

* ஆசிட் விற்பனை முறைப்படுத்தப்படும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படும்.

* முறையான அடையாள அட்டை மற்றும் உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே, ஆசிட் பெற முடியும்.

* ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிப்பது, காப்பீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களும் அரசின் சட்ட திருத்தத்தில் இடம் பெறும். dinamalar.com

கருத்துகள் இல்லை: