புதன், 24 டிசம்பர், 2014

ஜெர்மனி: இஸ்லாத்துக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில், இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரஸ்டெனில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர்கள் பேரணியில் கலந்துக்கொண்ட போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும் புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர்.
‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெர்மனியில் குடியேரும் இஸ்லாமியர்களால் ஜெர்மனிய மக்களின் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்றும், இஸ்லாம் அமைதியான மதம் அல்ல என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் கிறிஸ்தவ மதத்தை பாதுகாப்பதாக இந்த போராட்டக்காரர்கள் தெரிவித்தாலும், அவர்கள் வலதுசாரி தீவிரவாதத்தை வளர்ப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெகிடாவின் இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் தஞ்சம் கோரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த ஆண்டில் மட்டும் சிரியா, இராக், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் தஞ்ச கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த பெகிடாவுக்கு எதிரான போராட்டங்களும் திங்களன்று நடைபெற்றன.
வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களை ஒதுக்காமல் அவர்களை வரவேற்க வேண்டும் என்ற பேரணி மியுனிக் நகரில் நடைபெற்றது.  bbc.co.uk/tamil

கருத்துகள் இல்லை: