செவ்வாய், 9 நவம்பர், 2010

என்ஜினீயர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறல்

சென்னை மாணவனை கடத்தி பணம் பறிப்பு:
கைதான என்ஜினீயர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறல்


சென்னை அண்ணாநகரை சேர்ந்த மாணவன் கீர்த்தி வாசன் (13) கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கீர்த்திவாசனின் தந்தை ரமேசிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காக, கடத்தலில் ஈடுபட்ட, என்ஜினீயர்கள் விஜய், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாணவனை பணயம் வைத்து அவர்கள் பறித்துச் சென்ற ரூ.1 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கீர்த்திவாசனை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அது திருட்டு கார் என்பது தெரியவந்தது.

மாங்காட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாருதி கார் விற்பனை நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத புதிய காரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை சுமார் 1 மாதம் தாங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு கார் செட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். அதன் பிறகு போலி நம்பர் பிளேட்டை பொருத்தி இருவரும் காரை ஓட்டி வந்தனர்.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் விஜய், பிரபு இருவரும் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது.

கீர்த்திவாசன் கடத்தப்பட்ட பின்னணி குறித்தும் முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக விஜய், பிரபு இருவரையும் 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கீர்த்திவாசனை கடத்தியது ஏன் என்பது குறித்து இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
போலீஸ் விசாரணையின் போது, விஜய், பிரபு இருவரும், தலையில் அடித்தவாறு கதறி அழுதனர். தெரியாமல் தவறு செய்து விட்டோம் வேறு எந்த குற்றச் செயல்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று அழுது கொண்டே கூறினர்.

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: