![]() |
Kalidasan Swaminathan : அண்ணன் பொன்முடி வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா?
பொது வெளியில் பேசிய சில சர்ச்சையான கருத்துக்களால்
அவர் துணை செயலாளர் பதவியையும் இழந்து மந்திரி பதவியையும் இழந்தார்.
அமைச்சராக இருப்பவர் எந்த ஜாதியையோ, எந்த மதத்தையோ சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்பதற்காகத்தான் பதவியேற்பின் சத்தியப்பிரமாணம் எடுப்பது.
பொன்முடி அடிப்படை தி.க காரர் என்பதால் சில கருத்துக்கள் அவரை மீறி வந்திருக்கலாம். அதற்கு தான் அமைச்சர் பதவி எடுக்கப்பட்டது.
ஆனால் பொதுச்செயலாளர் பதவி பறிக்கும் அளவுக்கு அவர் செயல் இருந்தது என்றால், கட்சிக்கும் துரோகம் செய்த பலர் இன்னும் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்களே!
கஞ்சா சங்கருக்கும், ஆட்டுக்குட்டிக்கும்,
ஆமையனுக்கும் பணம் கொடுத்தவர்களும் இன்னும் பதவியில் இருக்கிறார்களே!
அதிமுக வெற்றிக்கு துணை போனவர்களும் கட்சியில் இருக்கிறார்களே!









