புதன், 1 டிசம்பர், 2021

இலங்கையில் வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் . உயிரிழப்புக்களும் விபத்துக்களும் தொடர்கிறது

 பிபி சி தமிழ்  : இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, அம்பாறை, ஹட்டன், புத்தளம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது.

ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க சரத்பவார்-மம்தா எதிர்ப்பு

 மாலைமலர் : மத்தியில் வலிமையான மாற்றுத் தலைமை தேவை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை:  மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இன்றைய ஜால்ராக்களுக்கு தெரியாத திமுகவின் சுயமரியாதை கரைவேட்டிகள்

May be an image of 1 person

Kandasamy Kandasamy :  உங்கள் நாகரீக அரசியலில்  ஈயத்தை காய்ச்சி ஊற்ற.
சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரியவர் எப்பொழுதும் திமுக கரை வேட்டி அணிந்து கொண்டுதான் இருப்பார்.. சில மாதங்களுக்கு முன் கரையில்லாத வெள்ளை வேட்டி அணிந்து இருந்தார் என்னவென்று விசாரிக்க......
திமுக கரைவேட்டி சலவைக்கு போட்டிருந்தேன் திருப்பி வாங்க காசு இல்லை
எவ்வளவு என்று கேட்க 240 ரூபாய் என்று சொன்னார்
அதற்கு அடுத்து சொன்ன செய்தி வயசாகிப் போச்சு எவ்வளவு வெல
 தெரியல மொத்தமா போட்டுட்டேன்
மூன்று பிரிவாகப் பிரித்து போட்டிருந்தால் சலவைக்கு போட்ட வேட்டியை வாங்கியிருப்பேன்
அதற்கு மேல் அவருக்கு பேச நா எழவில்லை
என்னிடமும் அந்த காசு இல்லை
நினைத்துப் பாருங்கள் திமுக தான் அவர்களுடைய அடையாளம் அந்த கரைவேட்டி தான் அவருடைய அடையாளம்
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் அவர் பெயர் தெரியாது

NEET 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான்

 Sadhu Sadhath  : எதால அடிவாங்கினாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டெங்கில் அது ஈ தமிலன்ஸ்தான் ...
NEET வந்த போது எதெல்லாம் நடக்கும்னு பயந்தேனோ அதெல்லாம் அப்படியே கூட இல்ல வேற லெவலுக்கு நடந்துகிட்டு இருக்கு ..
நீட்ட ஆதரிச்சவனெல்லாம் என்ன சொன்னானுவனா நீட் பாஸ் செஞ்சாதான் தரமான டாக்டர் கிடைப்பாங்கனு சொன்னானுவ ..
போன வருசம் கிட்டதட்ட 115000 பேர் நீட் எழுதி அதுல 39.6% பேர் நீட் பாஸ் ஆனாங்க அதாவது கிட்டதட்ட 45000 பேர்... இத்தனை ஆயிரம்பேர் நீட் பாஸ் செஞ்சாச்சே டாக்டர் சீட் கொடுத்தானுங்களானா அதுவும் இல்லை ..
ஏன்டா கொடுக்கலனா மொத்தமே 2447 சீட்டு தான் இருக்குங்குறான் .. இதுல என்ன பெரிய கொடுமைனா இந்த 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான் ... ஆண்ட பேண்ட சாதி அத்தனையும் சேர்த்து இரண்டே பேர்தான் ... எஸ்டி பிரிவுல மேனேஜ்மென்ட் கோட்டாவுல கூட ஒருத்தருக்கும் சீட் கிடைக்கல

செவ்வாய், 30 நவம்பர், 2021

மதுரை சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

இரவில் சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

தினத்தந்தி  : மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண் உள்பட5 ஊழியர்கள் கடை உரிமையாளருடன் சம்பவத்தன்று செல்லூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து நள்ளிரவில் 1 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இளம்பெண்ணை கடைக்காரர் தனது மோட்டார் சைக்களில் அழைத்து சென்றார்.
அப்போது நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர், கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்?
நீங்கள் இருவரும் யார்? என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக அழைத்து சென்றுள்ளார்.

மு க அழகிரி தற்போது என்ன செய்கிறார்? மிக மிக அமைதி .கிரிக்கெட், பழைய படங்கள் . நண்பர்களுடன் வேடிக்கை பேச்சு ..

 Arsath Kan -  Oneindia Tamil :    மதுரை: திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒரு காலத்தில் கோலோச்சிய மு.க.அழகிரி இப்போது அரசியல் நடவடிக்கைகளில் துளியும் ஆர்வமின்றி அமைதியை மட்டுமே விரும்புகிறாராம்.
மதுரை சத்யசாய் நகரில் வசித்து வரும் அவர் தனக்கு பிடித்த பழைய படங்களையும், கிரிகெட்களையும் பார்த்து நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மேலும், தினமும் நான்கு பேருடன் அதுவும் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் மட்டும் சில மணித்துளிகள் மனம் விட்டு பேசுகிறாராம்.
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த போது பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.

ஒமிக்ரான்: இன்று நள்ளிரவு முதல் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 மின்னம்பலம் : கொரோனாவின் திரிபு வைரஸான ஒமிக்ரான் 14 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில் இந்தியாவில் அந்த வைரசை தடுப்பதற்காக ஒன்றிய அரசு இன்று (நவம்பர் 30) நள்ளிரவு முதல் சர்வதேச பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி
ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆபத்தான நாடுகள் பட்டியலில் தற்போது இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள அனைத்து 44 நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் RT-PCR சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாது.

டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

 மாலைமலர் : ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கோப்புப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.
அதன் விவரம் வருமாறு:-

இரும்பு சேரில் ஏறி, வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்..!

 வி.ஆர். ஜெயந்தி :  தலைவர் அவர்களுக்கு ஒயாத வேலை,  24, 25, 26, 27 தேதிகளில் தொடர் கூட்டங்கள். 27 அன்று செங்கல்பட்டில் மீட்டிங் இரவு 8.30 மணிக்கு முடித்து  இரவே அரியலூர் கார் பயணம் மேற்கொண்டார்கள். அரியலூரில் அத்தனை நிகழ்ச்சிகள். தலைவரின்
அம்மாவிற்கு டைபாய்டு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அரியலூரில் மீட்டிங் முடித்து, அம்மாவை பார்த்து விட்டு இரவு பயணம் செய்து காலையில் 5 மணிக்கு சென்னை வந்து தயாராகி  பார்லிமென்ட் போகிறார்கள்.  தலைவருக்கு உடல்நலம் சரியில்லை, காலில் வீக்கம் பிரச்சனையிருக்கிறது, ஓய்வில்லை.  மக்களுக்காக கடந்த கூட்டத்தொடரில் அடாவடியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்டங்களை எதிர்த்து அவையில் பேசத்தேவையிருக்கிறது.

திங்கள், 29 நவம்பர், 2021

கேரளா - மூளைச்சாவு அடைந்த ஜோசப்பின் கரங்கள் ராணுவ கப்டன் அப்துல் ரஹீமிற்கு பொருத்தப்பட்டது.. பொருத்திய டாக்டர் சுப்பிரமணியம் Abdul Rahim - India's second hand transplantation


May be an image of 4 people and people standing

பாண்டியன் சுந்தரம்  :  நெஞ்சம் நெகிழ வைக்கும் புகைப்படம்! கணவனை அன்பு மனைவியும், தந்தையைப் பாச மகளும் அருகிருந்து பார்க்கின்றனர், கைகள் மூலமாக!
இதோ , இந்தப் படங்களின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண்.. தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த , அள்ளி அரவணைத்து அன்போடு வளர்த்த , தன் அப்பாவின் கைகளைத் தான் நேருக்கு நேர் பார்க்கிறாள். கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன. ஆனால் அவள் அப்பா , எப்போதோ மரித்துப் போய் விட்டார்.
அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்..இதோ, அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய்..
அவர் மனநிலை எப்படி இருக்கும் ?

திரைக்கதைகளில் ஸ்க்ரிப்ட் டாக்ட்டரிங் என்றால் என்ன? பட்டுக்கோட்டை பிரபாகர்

  Pattukkottai Prabakar Pkp :  திரைத்துறையில் எனக்கு அறிமுகமான, அறிமுகமாகாத பலரும் என்னிடம் தங்கள் கதையைச் சொல்லி அதைப் பற்றி என் கருத்தைக் கேட்க வேண்டும் என்பார்கள்.
அந்த ப்ராஜெக்ட்டில் நான் இல்லை என்கிற பட்சத்தில் கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். தவிர்க்கவே இயலாத முக்கியமானவர்கள் என்றால் மட்டும் தர்மசங்கடத்துடன் ஒப்புக்கொள்வேன்.
வருவார்கள். இரண்டு மணி நேரம் கதை சொல்வார்கள். நன்றாயிருக்கிறது, நன்றாயில்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. உடனே மனதில் தோன்றும் குறைகளையும்.. அதை இப்படியெல்லாம் சரிசெய்யலாம் என்றும் கடகடவென்று சொல்லிவிடுவேன்.

ஒமிக்ரான் வைரஸ் - .விளைவுகள் கடுமையாக இருக்கலாம்" -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளனர்.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநிறுத்தம் -தலைவர்கள் கண்டனம்

 மாலைமலர் :  எம்.பி.க்கள் மீதான இடை நிறுத்த நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:   பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநிறுத்தம்  செய்யப்பட்டுள்ளனர்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி இடைநிறுத்தம்  செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து .. விவாதங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்த பாஜக! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

 மாலைமலர் : பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி:  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த பிரதீபா சிங், பா.ஜனதாவை சேர்ந்த ஜியானேஸ்வர் பட்டீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். பிரதீபா சிங் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்தும், ஜியானேஸ்வர் பட்டீல் மத்திய பிரதேச மாநிலம் கன்வார் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இலங்கையில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றியது எப்படி?

 

இந்துபோர்ட் ராசரத்தினம்
சேர் பொன்.ராமநாதன்
செல்லபுரம் வள்ளியம்மை:   இலங்கை தமிழர்களின் அரசியல் 
கலாச்சாரம், சமுகவியைல்  என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது  என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம்
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
மணி அய்யர்
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக  இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம்  பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல  தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது

மாநாடு திரைப்படம் ..அறிவியல் புனை கதையை அதன் இயற்பியல் விதிகளோடு விளக்க தவறினாலும் ரசிக்க முடிகிறது

May be an image of text that says 'PAST WYLS → FUTURE HOLD THE DOOR BRAN INTERSECTS TWO POINTS TIME FOR WYLIS HODOR DIES WYLIS BECOMES MODOR'

 Karthikeyan Fastura  :  மாநாடு திரைப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் Plot க்கு கதாநாயகன் இஸ்லாமியர் ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எனினும் மக்கள் மத்தியில் சினிமா ஊடகங்கள், பத்திரிக்கை ஊடகங்கள் பரப்பி வைத்திருக்கின்ற பொய்யான பொதுபுத்தி பிம்பத்தை உடைப்பதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள் இந்தக் கதையை ஏற்று நடித்த சிம்புவுக்கும் வாழ்த்துக்கள்
எனக்கு இந்தப்படத்தில் குறையாகபடுவது ஒரு அறிவியல் புனைவு கதையை அதன் இயற்பியல் விதிகளோடு விளக்கி அதிலுள்ள புதிர் என்னவென்று கூறி அதை அவிழ்ப்பது போல காட்டுவது சிறந்தது. ஹாலிவுட் மற்றும் பல்வேறு ஐரோப்பிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் வரும் Time loop திரைப்படங்கள் எல்லாவற்றிலும் இதை காணலாம். குவாண்டம் பிசிக்ஸ், Time A-theory பற்றிய கருத்தாக்கங்களை கற்பனைகளை விவரிப்பார்கள்.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

புலிகள் மீதான தடை தொடரும்! ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவு! .. வழக்கு செலவுகளையும் செலுத்தவேண்டும்

 tamilnaadi.com -  jeya :  விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினை இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர்.
இதேவேளை குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டில் தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்:

shivashankar-master-no-more

hindutamil.in :  பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
 இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு

kokila gunawardena

ஹரினி அமரசூரிய

ரஞ்சன் அருண் பிரசாத்  -      பிபிசி தமிழுக்காக  :  இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.
சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.
இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!
கலைஞர் செய்திகள் :  ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற தலைப்பில் மாநில அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படாமல் இருந்தது. அனால், நாட்கள் செல்லச் செல்ல ப்ளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சமும், மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!

 Mathivanan Maran -  e Oneindia Tamil :  ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மேற்கு வங்க மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மமதா பானர்ஜி, காங்கிரஸ் செல்வாக்கு இழந்த, பலவீனமான மாநிலங்களை குறிவைத்து அடுத்தடுத்து காய் நகர்த்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக இருக்கும் மாநிலங்களை குறிவைக்கிறார்.
இந்த வியூகத்தின் முதல் கட்டமாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

கனமழை நீடிப்பு... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 மாலைமலர் : கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அவ்வகையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சி.வை.தாமோதரம் பிள்ளை... பழந்தமிழ் சுவடிகளை பதிப்பித்த முன்னோடி .. தொல்காப்பியம் கலித்தொகை, சூளாமணி வீரசோழியம் .... இன்னும் பல

ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை | யாழ்ப்பாணம் : Jaffna

.keetru.com  :     தமிழ் இலக்கியங்கள்  இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கோயில்களிலும், மடங்களிலும், கவிராயர் இல்லங்களிலும், அரண்மனைகளிலும் முடங்கிக்கிடந்த பழந்தமிழ்ச் சுவடிகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா ஆகியோரைச் சாரும்!
c vai thamodaram pillaiதமிழறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாய்மொழியாம் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். ஓலைச்சுவடிகளிலிருந்து பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கண்டெடுத்து சரிபார்த்து, திருத்தம் செய்து, பதிப்பித்த பெருமை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்படும் சி.வை.தாமோதரம் பிள்ளையையே குறிக்கும்.
தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகள் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு தான், தமிழ் மொழியின் பரந்துபட்ட பரப்பு தெரியவந்தது. தமிழ் நூல்களை அழியாமல் காத்துப் பாமர மக்களிடையே பரவலாக்கிய பெருமை தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களையே சாரும். தமிழ்ச்சுவடிப் பதிப்பு வரலாற்றில் ஆறுமுக நாவலருக்குப்பின் சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புப்பணி போற்று தற்குரியது. அவர் தமிழ் நூல்கள் பலவற்றை முதன் முதலில் பதிப்பித்து தமிழுலகம் அறியச் செய்தார்.

திமுகவை துவம்சம் செய்த ராஜீவ் காந்தி படுகொலை .. அதிமுக காங்கிஸ் கொலை வெறியாட்டம் Flashback 1991 - May 22

May be an image of 3 people, people standing and text that says 'மே மே22 மறக்கமுடியுமா'

Arumugam Karthikeyan : இன்றக்கு ஈழம் பேசும் குழந்தைகளுக்கு தெரியுமா 29 வருடம் முன் இந்த நாளில் ஈழம் பற்றி பேசிய திமுககாரனுக்கு நடந்த சம்பவத்தை உங்கள் வீட்டுல உள்ளவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க..
ஈழத்துக்காக செத்து பிழைத்தவர்கள் திமுககாரன் தான்...
இன்று மறக்கமுடியாத நாள். அந்த கொடூரமான தாக்குதல் இன்றும் மனதில் நீங்காது இருக்கிறது. அந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிருடன் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை. என் தாயை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து 4 மணி நேரம் கதவை புட்டி ஒரு நாற்காலியை வைத்து முட்டுகொடுத்து தடுத்து நின்றார். அவர் அப்படி தடுத்து எங்களுடன் நிற்கவில்லை என்றால் என் தாய் தந்தை என்னுடன் சேர்ந்து ஏழு உயிர்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பே பலியாகியிருக்கும் அந்த கொலைவெறி தாக்குதலுக்கு.

200 ஆண்டுகளில் இல்லாத மழை ... களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யாறு ஆகிய இடங்களில் தலா 18 சென்டிமீட்டர் மழையும்,  காட்டப்பாக்கத்தில் 17 சென்டி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 16 சென்டி மீட்டரும், மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.