திங்கள், 16 நவம்பர், 2026

ஆங்கிலத்தை நீக்கியது இலங்கை செய்த மிகப்பெரிய தவறு !

யாழ்ப்பாணத்தில் குடியேற  மலையகத்தவருக்கோ முஸ்லீம்களுக்கோ சிங்களவருக்கோ விருப்பமில்லை ! யாழில் இருந்து போன தமிழருக்கும் விருப்பமில்லை ! ஏன் ? 
யாழ் பல்கலைக்கழகம் உருவாவதை, ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து தமிழ் மாணவர்கள் பல்கலைக்ழகம் செல்வதை எப்படித் தமிழ் தேசியம் எதிர்த்தது ?
அரசகரும மொழிச் சட்டத்தில் ஆங்கிலத்தை நீக்கியது இலங்கை செய்த மிகப்பெரிய தவறு ! அதனை ஒக்ஸ்போர்ட்டில் கற்ற பண்டாரநாயக்கா செய்த மிகப்பெரிய தவறு !
ஆங்கலத்தை தூக்கி எறிந்ததால் தான் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று பணிப்பெண்களாகச் செல்வதற்குக் காரணம் !

ஞாயிறு, 15 நவம்பர், 2026

டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தால் அறப்பணி என்னாகும்?

 மின்னம்பலம் :லாபத்தை விட சமூக நலனே முக்கியம் என்கிறார் நோயல் டாடா
டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, டாடா குழுமம் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் மரபையே மாற்றிவிடக்கூடும் என்று டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எச்சரித்துள்ளார். லாபத்தைவிட சமூக நலனுக்கும் அறப்பணிகளுக்கும் முன்னுரிமை தரும் இப்போதைய நடைமுறை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்பது அவரது கவலை.
30,000 முதல் 40,000 பங்குதாரர்கள் வந்தால்?