திங்கள், 16 நவம்பர், 2026

ஆங்கிலத்தை நீக்கியது இலங்கை செய்த மிகப்பெரிய தவறு !

யாழ்ப்பாணத்தில் குடியேற  மலையகத்தவருக்கோ முஸ்லீம்களுக்கோ சிங்களவருக்கோ விருப்பமில்லை ! யாழில் இருந்து போன தமிழருக்கும் விருப்பமில்லை ! ஏன் ? 
யாழ் பல்கலைக்கழகம் உருவாவதை, ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து தமிழ் மாணவர்கள் பல்கலைக்ழகம் செல்வதை எப்படித் தமிழ் தேசியம் எதிர்த்தது ?
அரசகரும மொழிச் சட்டத்தில் ஆங்கிலத்தை நீக்கியது இலங்கை செய்த மிகப்பெரிய தவறு ! அதனை ஒக்ஸ்போர்ட்டில் கற்ற பண்டாரநாயக்கா செய்த மிகப்பெரிய தவறு !
ஆங்கலத்தை தூக்கி எறிந்ததால் தான் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று பணிப்பெண்களாகச் செல்வதற்குக் காரணம் !
இன்று போராட்டத்தை நடத்திய 90 வீதமான புலிகளிடம் இருந்து நல்ல தமிழ் வருவதில்லை ! பெரும்பாலும் காது கொடுத்துக் கேட்க முடியாத தமிழே பேசப்படுகின்றது !
வன்னியில் தமிழ் மக்களைக் குடியேற்றியவர்கள் சிங்கள தேசியக் கட்சிகளே ! அதனைத் தொடர்ந்து காந்தியம் குடியேற்றங்களை அமைத்தது !
நில இராணுவம் - விவசாய இராணுவம் - படித்த வாலிபர் திட்டம் எல்லாமே சிங்கள தேசியக் கட்சிகளின் திட்டம் ! வன்னியில் தமிழர்களைக் குடியேற்றிய திட்டங்கள் !
காந்தியக் கிராமங்கள் தான் இறுதியில் வன்னியில் புலிகளுக்கு சிறுவர் போராளிகளைக் கொடுத்தது ! மட்டக்களப்பு போராளிகளும் தான் !
மக்கள் முட்டாள்களைத் தான் தங்கள் தலைவர்களாகத் தெரிவு செய்வார்கள் என்பதற்கு தமிழ் மக்கள் நல்லதொரு உதாரணமாகிவிட்டார்கள் !
சமூக, அரசியல் ஆய்வாளர், அரசியல் விமர்சகர் ராதா மனோகருடன்1974 இல் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான மீள்வாசிப்பு கலந்துரையாடல்: பகுதி 4 

கருத்துகள் இல்லை: