tamil.oneindia.com - Halley Karthik : இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் குறையவில்லை. இப்படி இருக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.
அப்பாஸ் அராக்ச்சி உயர்மட்டக் குழுவுடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றிருக்கிறார். இவர் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் வரவுள்ளனர். கடந்த முறை பேச்சுவார்த்தை அவ்வளவு ஸ்மூத்தாக போகவில்லை. இப்படி இருக்கையில் இந்த முறை, இரு தரப்பும் நிதானமாக பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக பாகிஸ்தான்தான் இறங்கி வேலை செய்து வருகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை, ஈரான் போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போர் காரணமாக அந்நாடு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியில் சிக்கியிருக்கிறது. போர் நிறுத்தத்திற்கு உதவுவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அதேபோல இந்தியாவுக்கு சரிசமாக சர்வதேச அளவிலும் குட் நேம் வாங்க முடியும். எனவேதான் இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ரொம்பவும் மெனக்கெடுகிறது.
பேச்சுவார்த்தையின் பின்னணி
ஈரான் விதித்துள்ள கடல்வழி முற்றுகை காரணமாகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருந்தன. இந்தத் தடையை நீக்குவது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும்.
மேலும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியபடி, இந்தப் பேச்சுவார்த்தைகள் நேரடியாகவே நடக்கும், ஆனால் பாகிஸ்தான் அதனை ஒருங்கிணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக