tamil.news18.com : தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், வாக்குப்பதிவு குறித்த இன்றைய முக்கிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல், வாக்குப்பதிவு குறித்த இன்றைய முக்கிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்......
April 23, 20268:40 PM IST
TN Election 2026 Live Updates | "மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சல்யூட்” - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது எனவும், மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சல்யூட் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
April 23, 20268:18 PM IST
TN Election 2026 Live Updates | இரவு 8 மணி நிலவரப்படி 84.69% வாக்குப்பதிவு
தமிழகத்தில் இரவு 8 மணி நிலவரப்படி 84.69% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
84.69% polling recorded in Tamil Nadu as of 8 PM pic.twitter.com/NoGKkKAcrb
— Arvind Gunasekar (@arvindgunasekar) April 23, 2026
April 23, 20267:23 PM IST
TN Election 2026 Live Updates | மாலை 6 மணி நிலவரம் : தமிழகத்தில் 84.29% வாக்குப்பதிவு
தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-
அரியலூர் – 85.23%
செங்கல்பட்டு – 84.18 %
சென்னை – 83.03 %
கோவை – 84.39 %
கடலூர் – 84.50%
தர்மபுரி – 89.78%
திண்டுக்கல் – 88.25 %
ஈரோடு – 89.72%
கள்ளக்குறிச்சி – 86.85%
காஞ்சிபுரம் – 86.76%
கன்னியாகுமரி – 75.41%
கரூர் – 91.86%
கிருஷ்ணகிரி – 84.61%
மதுரை – 80.15%
மயிலாடுதுறை – 80.91%
நாகபட்டினம் – 85.33%
நாமக்கல் – 89.43%
பெரம்பலூர் – 85.13%
புதுக்கோட்டை – 83.30%
ராமநாதபுரம் – 76.15%
ராணிப்பேட்டை – 88.53%
சேலம் – 90.13%
சிவகங்கை – 76.03%
தென்காசி – 81.45%
தஞ்சாவூர் – 80.05%
நீலகிரி – 78.41%
தேனி – 80.80%
திருவள்ளூர் – 82.79%
திருவாரூர் – 82.81%
தூத்துக்குடி – 79.68 %
திருச்சி – 85.01 %
திருநெல்வேலி – 77.41%
திருப்பத்தூர் – 87.57%
திருப்பூர் – 88.20%
திருவண்ணாமலை – 87.97%
வேலூர் – 87.63%
விழுப்புரம் – 87.62 %
விருதுநகர் – 84.09%
April 23, 20266:13 PM IST
TN Election 2026 Live Updates | தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவு
இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கு செலுத்தும் எந்த இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
April 23, 20265:59 PM IST
TN Election 2026 Live Updates | "6 மணிக்குள் வந்தால் 9 மணி வரைகூட வாக்களிக்கலாம்..." - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
“சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் இன்று மாலை ஆறு மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்குள் வந்துள்ள அனைவரும் வரிசையில் காத்திருந்து இரவு எட்டு மணி, ஒன்பது மணி ஆனாலும் அதனைக் கடந்தும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.
April 23, 20265:40 PM IST
TN Election 2026 Live Updates | மாலை 5 மணி நிலவரம் : தமிழகத்தில் 82.24% வாக்குப்பதிவு
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-
அரியலூர் – 83.09%
செங்கல்பட்டு – 82.41 %
சென்னை – 81.34 %
கோவை -82.33 %
கடலூர் – 81.91%
தர்மபுரி – 87.28%
திண்டுக்கல் – 86.35 %
ஈரோடு – 87.59%
கள்ளக்குறிச்சி – 84.28%
காஞ்சிபுரம் – 84.92%
கன்னியாகுமரி – 73.44%
கரூர் – 89.32%
கிருஷ்ணகிரி – 82.40%
மதுரை – 77.89%
மயிலாடுதுறை – 78.41%
நாகபட்டினம் – 83.15%
நாமக்கல் – 87.63%
பெரம்பலூர் – 82.75 %
புதுக்கோட்டை – 81.55 %
ராமநாதபுரம் – 74.41 %
ராணிப்பேட்டை – 86.28 %
சேலம் – 88.02%
சிவகங்கை – 74.44%
தென்காசி – 79.28 %
தஞ்சாவூர் – 78.07 %
நீலகிரி – 75.90%
தேனி – 78.73%
திருவள்ளூர் – 80.70%
திருவாரூர் – 80.65 %
தூத்துக்குடி – 77.56 %
திருச்சி – 82.76 %
திருநெல்வேலி – 75.10%
திருப்பத்தூர் – 85.28 %
திருப்பூர் – 86.33 %
திருவண்ணாமலை – 85.59%
வேலூர் – 85.06%
விழுப்புரம் – 85.45 %
விருதுநகர் – 82.16 %
April 23, 20264:54 PM IST
TN Election 2026 Live Updates | "நல்லதே நடக்கும்..." - நடிகர் ரவி மோகன் பதில்
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகர் ரவி மோகன் வாக்களித்தார். அப்போது திரைத்துறையில் இருந்து ஒருவர் முதல் முறையாக களம் காண்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு? நல்லதே நடக்கும் என நடிகர் ரவி மோகன் பதில் அளித்தார்
April 23, 20263:47 PM IST
TN Election 2026 Live Updates | கோவை 10 சட்டமன்ற தொகுதிகளில் 3 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்!
1) கோவை வடக்கு- 64.06%
2) கோவை தெற்கு-68.69%
3) கவுண்டம்பாளையம்-73.92%
4) கிணத்துக்கடவு- 73.00%
5) மேட்டுப்பாளையம்- 70.26%
6) பொள்ளாச்சி- 73.04%
7) சிங்காநல்லூர்- 68.93%
8) சூலூர்- 74.47%
9) தொண்டாமுத்தூர்- 72.50%
10) வால்பாறை- 70.65%
April 23, 20263:41 PM IST
TN Election 2026 Live Updates | மதியம் 3 மணி நிலவரம்.... தமிழகத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு
மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 % வாக்குப்பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 61.95 % கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-
அரியலூர் – 68.97 %
செங்கல்பட்டு – 69.46 %
சென்னை – 68.13 %
கோவை – 71.16 %
கடலூர் – 68.53 %
தர்மபுரி – 74.68%
திண்டுக்கல் – 74.35 %
ஈரோடு – 75.61 %
கள்ளக்குறிச்சி – 71.11 %
காஞ்சிபுரம் – 72.51 %
கன்னியாகுமரி – 61.95%
கரூர் – 76.08 %
கிருஷ்ணகிரி – 70.07%
மதுரை – 67.15 %
மயிலாடுதுறை – 65.80 %
நாகபட்டினம் – 69.96%
நாமக்கல் – 76.43 %
பெரம்பலூர் – 70.54 %
புதுக்கோட்டை – 69.85 %
ராமநாதபுரம் – 63.14 %
ராணிப்பேட்டை – 72.46 %
சேலம் – 75.79 %
சிவகங்கை – 64.74 %
தென்காசி – 67.14%
தஞ்சாவூர் – 66.65 %
நீலகிரி – 63.67 %
தேனி – 67.68%
திருவள்ளூர் – 68.07 %
திருவாரூர் – 68.43 %
தூத்துக்குடி -65.18 %
திருச்சி – 71.05 %
திருநெல்வேலி – 62.84 %
திருப்பத்தூர் – 71.46 %
திருப்பூர் – 75.38%
திருவண்ணாமலை – 72.19 %
வேலூர் – 71.23 %
விழுப்புரம் – 71.65 %
விருதுநகர் – 70.24 %
April 23, 20263:37 PM IST
TN Election 2026 Live Updates | கூடுதலாக 5,545 சிறப்பு பேருந்துகளும் இயக்கம் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (23.04.2026) நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
21.04.2026 அன்று முதல் இன்று (23.04.2026) நண்பகல் 01.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 5,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 5,545 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 10,637 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.26 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
????UPDATE
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (23.04.2026) நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
21.04.2026 அன்று முதல் இன்று (23.04.2026) நண்பகல் 01.00 மணி நிலவரப்படி,…
— ArasuBus (@arasubus) April 23, 2026
April 23, 20262:58 PM IST
TN Election 2026 Live Updates | திண்டுக்கல்லில் 2 கள்ள ஓட்டு பதிவு?
திண்டுக்கல், எஸ்.பி.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் M.V.M நகரை சேர்ந்தவர் ராம்பிரபு. இவரின் மனைவி ரோகினியின் வாக்கினை மற்றொருவர் செலுத்தி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து ரோகினி வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து 17b டெண்டர் வாக்கு பதிவு செய்தார்.
இதேபோல் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி கென்னடி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் எம்.எஸ்.பி காலனி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கணேசன் என்பவர் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதால், வாக்கு மைய தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து 17B டெண்டர் வாக்கை பதிவு செய்தார்
April 23, 20262:28 PM IST
TN Election 2026 Live Updates | "விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிவின் போது தெரியும்" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். தென்கரை பகுதியில் உள்ள செவன்த்டே மெட்ரிக் பள்ளியில் வாக்களித்த பின் பேட்டியளித்த அவர், விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிவின் போது தெரியும் என்றார்.
April 23, 20261:48 PM IST
TN Election 2026 Live Updates | பகல் 1 மணி நிலவரம்... தமிழகத்தில் எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பதிவு?
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 % வாக்குபதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 50.42 % நீலகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-
அரியலூர் – 55.18%
செங்கல்பட்டு – 56.28 %
சென்னை – 54.58 %
கோவை – 58.24%
கடலூர் – 55.13%
தர்மபுரி – 59.02 %
திண்டுக்கல் – 59.79 %
ஈரோடு – 61.79 %
கள்ளக்குறிச்சி – 57.15%
காஞ்சிபுரம் – 58.98 %
கன்னியாகுமரி – 50.35 %
கரூர் – 60.77%
கிருஷ்ணகிரி – 56.21%
மதுரை – 54.75%
மயிலாடுதுறை – 53.59 %
நாகபட்டினம் – 57.07 %
நாமக்கல் – 62.51 %
பெரம்பலூர் – 57.55 %
புதுக்கோட்டை – 56.78 %
ராமநாதபுரம் – 51.54 %
ராணிப்பேட்டை – 58.62 %
சேலம் – 61.42%
சிவகங்கை – 53.50 %
தென்காசி – 54.24 %
தஞ்சாவூர் – 54.83 %
நீலகிரி – 50.42 %
தேனி – 55.63%
திருவள்ளூர் – 55.45 %
திருவாரூர் – 56.00 %
தூத்துக்குடி – 52.55 %
திருச்சி – 57.66 %
திருநெல்வேலி – 50.73 %
திருப்பத்தூர் – 57.42 %
திருப்பூர் – 62.97%
திருவண்ணாமலை – 58.23 %
வேலூர் – 57.49 %
விழுப்புரம் – 58.23 %
விருதுநகர் – 57.27 %
April 23, 20261:14 PM IST
TN Election 2026 Live Updates | "அடுத்த 5 ஆண்டை மனதில் வைத்து வாக்களிக்களியுங்கள்" - இயக்குநர் பாக்யராஜ்
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் பாக்யராஜ் அவரது மகனும் நடிகருமான ஷாந்தனு மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாக்களித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாக்யராஜ், “அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அடுத்த 5 ஆண்டை மனதில் வைத்து இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்களிக்க வரவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருப்பத்தூரில் வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு சென்ற தவெக நிர்வாகி சக்திவேல், ஓட்டு போட்டதை வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தல் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்தவகையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகர் யோகி பாபு, “வாக்களிப்பதில் முக்கியத்துவம் நன்றாக தெரியும் என்றும் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பதில் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
April 23, 202612:13 PM IST
TN Election 2026 Live Updates | "சென்னையில் இந்த முறை 90% வாக்குபதிவாகும்..." - தயாநிதி மாறன் நம்பிக்கை
வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி , “சென்னையில் இந்த முறை 90% வாக்குபதிவுக்கு சாத்தியம் உள்ளது எனவும், வழக்கமாக 47% மட்டுமே சென்னையில் வாக்குபதிவு நடைபெறும் என்ற கேள்விக்கு,வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் வாக்களிக்காமல் சொந்த ஊர் சென்றதால் ஏற்பட்ட விளைவு, இம்முறை 90% வாக்குபதிவு நடைபெறும், அது திமுகவிற்கு சாதகமாக அமையும்” என்றார்
April 23, 202612:02 PM IST
TN Election 2026 Live Updates | அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகர் அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
April 23, 202611:47 AM IST
TN Election 2026 Live Updates | தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு
காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குபதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-
அரியலூர் – 36.11 %
செங்கல்பட்டு – 37.17%
சென்னை – 35.47 %
கோவை – 38.62 %
கடலூர் – 36.30 %
தர்மபுரி – 38.28 %
திண்டுக்கல் – 39.05 %
ஈரோடு – 41 %
கள்ளக்குறிச்சி – 37.30 %
காஞ்சிபுரம் – 39.48 %
கன்னியாகுமரி – 34.68 %
கரூர் – 39.70 %
கிருஷ்ணகிரி – 36.53 %
மதுரை – 36.22 %
மயிலாடுதுறை – 35.33 %
நாகபட்டினம் – 37.77 %
நாமக்கல் – 41.41 %
பெரம்பலூர் – 37.89 %
புதுக்கோட்டை – 37.12 %
ராமநாதபுரம் – 34.02 %
ராணிப்பேட்டை – 38.70 %
சேலம் – 40.56 %
சிவகங்கை – 35.35 %
தென்காசி – 36.31 %
தஞ்சாவூர் – 36.54 %
நீலகிரி – 32.62 %
தேனி – 37.35 %
திருவள்ளூர் – 36.71 %
திருவாரூர் – 37.19 %
தூத்துக்குடி – 35.16 %
திருச்சி – 38.08 %
திருநெல்வேலி – 34.05 %
திருப்பத்தூர் – 37.49 %
திருப்பூர் – 42.45 %
திருவண்ணாமலை – 38.25 %
வேலூர் – 37.99 %
விழுப்புரம் – 38.40 %
விருதுநகர் – 38.05 %
April 23, 202611:33 AM IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக