வெள்ளி, 24 ஏப்ரல், 2026

தவெக தோற்கும். 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.

May be a graphic of text that says "DMK 2.0 バ LOADING... LOADING... NEWERA.NEWVISION, NEWERA.NEWVISION.S W ERA. NEW VISION. NEW"

 A Sivakumar 1991 தொடங்கி களத்திலும் 2011 தொடங்கி தளத்திலும் இயங்கும் எனக்கு இந்த மீடியாக்களும் நட்ட நடுநிலை நக்கிகளும் எந்த அடிப்படையில் தவெக 20% வாங்குவான்னு சொல்லுறாங்கன்னே தெரியலை, புரியலை.
What is the scale these people use to measure this percentage for TVK…?
அரசியல் தவிர வேறு எதுவும் பேசாத நமக்கே தவெகவின் 10 வேட்பாளர்களின் பெயர் தொகுதி பெயரோடு தெரியாது.
தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும், எந்த ஊரிலும் வேட்பாளரின் பெயரை சொல்லி வாக்கு கேட்டு நேரடி / மறைமுக பிரச்சாரமே செய்யாத தலைவன்...
இந்த தவெக வேட்பாளர் தன் கடினமான உழைப்பால் தொகுதியை தலைகீழாக பிரித்து மேய்கிறார் என்று தமிழ்நாட்டு ஊடகங்களின் கவனம் பெறுமளவுக்கு தொகுதியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள உழைக்காத, உழைக்கத் தெரியாத 231 இதர வேட்பாளர்கள்...
எல்லாம் சேர்ந்து தங்கள் தொகுதியிலும் தமிழ்நாடு அளவிலும் எப்படி 20% வாங்குவாங்க…?


இன்னைக்கு கூட வேண்டாம்; நாளைக்கு இதே நேரத்துக்குள்ள இந்த வேட்பாளர்கள் எல்லாம் 20% ஓட்டு வாங்க வாய்ப்பு உண்டுன்னு ஒரு 10 பேர் சொல்லுங்க. தேர்தல் அரசியலை கத்துக்க தயாராக இருக்கிறேன்…!
அந்தளவுக்கா தமிழ்நாட்டு மக்களை முட்டாளா நினைக்குறாங்க…?
Now we have the official figures of Voting across Tamilnadu that clearly indicates No big surge in voting. கூட்டம் கூட்டமா, மக்கள் பெருங்கூட்டமா வந்து வாக்களிக்கிறார்கள் என்று இவர்கள் இன்று அதிகாலை 7 மணிக்கு கட்டமைக்க முயன்ற கட்டுக்கதை 9, 10 மணி வரைக் கூட தாங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை…!
உள்ளாட்சித் தேர்தலில் பார்த்திருக்கீங்களா?
சமூக சேவகர், பணக்காரர், பணத்தை தண்ணீராக செலவு செய்பவர், ஆன்மிக வள்ளல், அசோசியேசன் தலைவருன்னு ஊர் ஊருக்கு யாராச்சும் நிப்பாங்க…!
தேர்தல் முடியும் வரை போற வர்றவனெல்லாம் நிச்சயம் இந்த நபர் பந்தயம் அடிப்பாருன்னு சொல்லி திமுக/அதிமுக வேட்பாளர் வயித்துல புளியை கரைப்பான்…!
ஆனால் கட்சி வாக்கு மாறாம தான் விழும்,
இவங்க டெபாசிட்டு கூட வாங்க முடியாம தோப்பாங்க. நேரடி அறிமுக வாய்ப்புள்ள, முகமறிந்த உள்ளாட்சிக்கே இது தான் நிலை…!
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னம் வேண்டாம்னு படித்த மேதாவி கும்பல் குப்புறப் படுத்து உருளவும், தேர்தலுக்கு தேர்தல் கட்சிகளுக்கு சின்னத்தை மாத்தனும்னு சீமான் மண்ணில் விழுந்து புரளவும் இதுவே முக்கிய காரணம்…!
அதனால என்னளவில் தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. எப்போதும் போல இந்த முறையும் மீடியா கோமாளிகளின் முகத்திலும், நடுநிலைநக்கிகளின் முகத்திலும் கரியைப் பூசாம விடமாட்டாங்க…!
கொஞ்சம் வரலாற்றை பார்ப்போமா…?
2016ல் மக்கள் நலக்கூட்டணி
தனிப்பெரும் கட்சியாக திமுக 25 தொகுதிகளில் வெறும் 25000 வாக்குகள் குறைந்த காரணத்தால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது…!
எதிர் வாக்குகள் சிதற, தன்னுடைய வாக்குகளை தக்க வைத்த அதிமுக ஆட்சி அமைத்தது…!
#PureArithmetic 
2019ல் 40/40 திமுகவின் Target.
வயித்துல புளியை கட்டிக்கிட்டு உருண்டோம். எப்படியும் கோவை, தர்மபுரி, சேலம் போனாலும் போயிடும் என்று எல்லாருமே பயந்தோம்…! 
ஆனா ரிசல்டு 40/40
#PureArithmeticAndChemistry
2021ல் Same Arithmetic & Chemistry for both the alliances.
அமமுக, மநீம உள்ளே புகுந்து குழப்பிய நிலையில், அதிமுக தன் வாக்குகளை தக்க வைத்த இடங்களிலும், திமுக rest of TNலும் வெற்றி & ஆட்சி…! 
2024 தேர்தலிலும் 40/40 நம்மோடTarget.
எப்படியும் கோவை உட்பட 7/8 தொகுதிகள் தோற்போம் என்று BBC, Washington Post, Newyork Times எல்லாம் சொல்லிட்டாங்கன்னு நம்மாளுங்களே நம்பிக்கை இல்லாம தானிருந்தாங்க….! 
ஆனால் 40/40 + Comfortable victory.
Very same Pure Arithmetic & Chemistry
இப்போ 2026
அதே Arithmetic இருக்கு. ஆரம்பத்தில் Chemistry தடுமாறினாலும் கடைசி ஒரு வாரம் 10 நாளில் இழுத்துப் பிடிச்சாச்சு. இன்னைக்கு நீங்கள் ஒவ்வொரு பூத்திலும் திமுககாரன் பம்பரமா சுற்றி சுழன்றதை பார்த்திருப்பீங்க. கூடவே பெரும்பாலான அதிமுகவினரும் சுழன்றதையும் பார்த்திருப்பீங்க. எங்காவது தவெகவினர் சுற்றி சுழன்றதாகவோ இந்த தொகுதியில் இந்த தவெக வேட்பாளர் தன் கட்சிக்காரர்களை சிறப்பாக வழி நடத்தியிருக்கிறாருன்னு ஒத்தை மீடியா ரிப்போர்டு இருக்கா…?
வழக்கம் போல 2016ல் மீடியாக்களும் நடுநிலைநக்கிகளும் திமுக வெறுப்பாளர்களும் எப்படி மநகூவை ஏமாந்தவர்கள் தலையில் வைத்து கட்டினார்களோ அதே மாதிரி இந்த முறை தவெகவை கட்ட முயற்சித்து இருக்காங்க. அப்போது இல்லாத அளவுக்கு இப்போது Insta influencers கூட்டம் கூட சேர்ந்திருக்கு.
2016ல் மதிமுக, தேமுதிக, விசிக மற்றும் கம்யூனிஸ்டுகளின் கட்சி வாக்குகளை மட்டுமே மநகூ வாங்கியது. திமுக வெறுப்பு மீடியா & நடுநிலைநக்கி தேவரடியார் பசங்களை நம்பாதீங்க. உங்களை மநகூ பக்கம் ஏமாத்தி திசை திருப்பிட்டு அவனுங்க அதிமுகவுக்கு தான் ஓட்டுப் போடுவாங்க. ஆட்சி மாற்றம் வேணும்னா எல்லாரும் திமுகவுக்கு தான் போடனும், மநகூ தனக்கும், தமிழ்நாட்டுக்கும் திமுகவுக்கும் தான் கேடாகவே முடியும் என்று என்னைப் போன்றவர்கள் கரடியா கத்தியதை புறக்கணித்த மாற்றம் வேண்டும் கூட்டம் திமுக/ அதிமுக தவிர்த்துட்டு மநகூ பக்கம் போக, தனித்துப் போட்டியிட்ட பாமக தன் சாதி வாக்குகளை மட்டும் வாங்க, தத்தம் விசுவாச வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுகவும் அதிமுகவும் பெற்றது, அன்றைய தேதியில் பெரியக் கட்சியான அதிமுக ஆட்சி அமைத்தது.
அதே மாதிரி இந்த முறை தவெகவை ஏமாந்தவர்கள் தலையில் கட்ட மீடியாக்களும் நட்டநடுநிலைநக்கிகளும் எடுத்த முயற்சி பயனளித்திருக்காது என்பதே என் அரசியல் நம்பிக்கை. அது பலனளித்த இடங்களில் எல்லாம் அதிமுகவும் குறிப்பாக நாதகவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதற்கு தான் வாய்ப்பு.
இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் பெரிய கட்சியான திமுக + நம்பகமான வாக்கு வங்கிகளை கொண்ட கூட்டணிக் கட்சிகள் + மநீம + தேமுதிக + இதர புதிய கட்சிகள் ஒரு பக்கம்.
பலம் குன்றியுள்ள அதிமுக + இந்துத்துவ வாக்குகளை மட்டும் நம்பியிருக்கும் பாஜக + சாதிய வாக்குகளை மட்டுமே நம்பியிருக்கும் பாமக இன்னொரு பக்கம்.
இதில் வெற்றி திமுகவுக்கே இருக்கும் என்பது தான் நான் படித்த Arithmetic, Chemistry, Physics, Botany, Zoology எல்லாம்…!
கண்டிப்பாக 234 தொகுதியிலும் தவெக தோற்கும். 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். காரணம் மநீம நண்பர்கள் 2021 தேர்தல் களத்தில் காட்டிய தீவிரத்தை, பூத் அளவிலான திறமையை, உழைப்பை கூட தவெக காட்டவில்லை என்பதே உண்மை.
தப்பித்தவறி கூட விஜயை நம்பி ஏதேனும் ஒரு தொகுதி மக்கள் ஏமாறுவார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை because I don't want to underestimate my own TN Voters. அவருடைய ஸ்டார் வேல்யூ, அந்த இரண்டு தொகுதியிலும் அவருக்காக அதிமுக போட்ட டம்மி வேட்பாளர்களினால் அவர் கடும் போட்டியை தந்திருக்க முடியுமே தவிர வெற்றி அடைய வாய்ப்பில்லை.
In case, if this assumption, understanding, prediction goes wrong then we can conclude that the new generation is capable of making a series impact on elections.
#வெல்வோம்_ஒன்றாக
A Sivakumar

கருத்துகள் இல்லை: