ராஜா ஜி : வாக்கு சதவிகிதம் கூடினால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு என்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள்!
பல முறை நடந்தது போல் இதும் கொஞ்சம் உண்மைதான்.
SIR நடந்ததற்குப் பிறகு கிட்டத்தட்ட 15% வாக்காளர்கள் நீக்கம்!
இதன் படி பார்த்தால் இப்போது கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தோடு 15% கழித்து விட்டு பாருங்கள் உண்மை தெரியும்!
90% என்றால் 75%
80% என்றால் 65%
அப்படி பார்த்தாலும் 5% அதிகமாக வாக்கு எண்ணிக்கை தெரியும், இதுவும் உண்மைதான்.
என்னப்பா குழப்புற என்பீர்களே.
இதுதான் 18 முதல் 30 வயது வரை எப்போதும் வாக்களிக்காத இளைஞர்களில் சிலர் விசைக்கு வாக்காளித்திருப்பார்களே அவர்களின் எண்ணிக்கை!
அப்போ விசைக்கு எவ்ளோதான் கிடைக்கும் என்போமே!
கடந்த தேர்தலில் மூன்றாம் வாய்ப்பாக இருந்த சீமானைப்பற்றி யாருமே பேசுவது இல்லையே!
இம்முறை விசை இல்லை என்றால் சீமான் 10 முதல் 12% வரை முன்னேறி இருப்பார்!
இப்போது சென்ற 2021 இல் வாங்கியதில் 3% இழக்கலாம்!
அது விசைக்கு போகலாம்!
ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் 10 முதல் 15% இருக்கும் சிலர் வாக்குகள் விசைக்கு கிடைக்கலாம்!
ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரதான எதிர்க்கட்சிக்கு தான் சென்று இருக்கும் அதனால் அதிமுகவுக்கு தான் பெருத்த சேதம் ஏற்படும்!
அப்போ திமுக!
விசைக்கு எதிரான வாக்குகள் நிச்சயம் திமுகவுக்கே வரும்!
சோசியல் மீடியாவில் தனக்கென பல ஆட்களை வைத்துக்கொண்டு அஜித், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சிம்பு, சூர்யா போன்றவர்களின் ரசிகர்களுக்கு இப்போது வச்சு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது!
SIR மூலம் வாக்காளர்கள் எண்ணிக்கை நீக்கப்பட்ட போது திமுக மட்டுமே கடுமையாக உழைத்து தம்முடைய வாக்காளர் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொண்டது!
நான் கோவையில் இருக்கும் போதும் என்னுடைய கொளத்தூர் தொகுதி பட்டியலில் இருந்து என்னை நீக்கவில்லை!
இந்த உழைப்புக்கான பரிசு வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படும் பாருங்கள்!
ஆகவே நிம்மதியாக தூங்கச் செல்லுங்கள்!
மே முதல் வாரத்தில் உதயசூரியன் உதிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக