canada indian
ராதா மனோகர் : வடஇந்தியாவில் சங்கிகளின் ஆதிக்கம் கூட கூட அவர்கள் ஒரு காட்டு மிராண்டி கும்பல்களாக மாறி கொண்டு வருகிறார்கள் போல் தெரிகிறது கனடாவிலும் இதர மேற்கு நாடுகளிலும் அவர்களின் பல செயல்பாடுகள் சொல்லும் தரமன்று!
இன்று கனடாவில் அவர்களின் செயல்கள் இங்குள்ள ஏனைய குடிவரவாளர்களுக்கும் ஒரு பெரும் தீமையை விளைவிக்க கூடும்.
வெள்ளை இனத்தவர்களுக்கு வடஇந்திய சங்கிகளுக்கும் ஏனைய தெற்கு ஆசிய மக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பெரும் பாலும் தெரிவதில்லை
குறிப்பாக ஆந்திர, கன்னட, மலையாள, சிங்கள, தமிழர்களுக்கும் வடஇந்திய சங்கிகளுக்கும் இடையே தோற்ற வித்தியாசம் பெரிதாக இல்லாத காரணத்தால் எல்லோரும் சங்கி காட்டுமிராண்டி கூட்டம்தான் என்றுதான் பெரும்பாலும் கருதுவார்கள்.
கனடாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் குடிவரவாளர்கள் நிரந்தர வதிவிட அனுமதி கோரி உள்ள நிலையில் இந்த காட்டு மிராண்டி கூட்டத்தின் மீது உள்ள கோபத்தில் கனடா மக்களும் அரசியல்வாதிகளும்
புதிய கடுமையான குடிவரவு சட்டம் இயற்றவும் நிறைவேற்றவும் கூடும்!
மேலும் தென்னிந்தியாவில் பெருகும் வட இந்திய சங்கி கூட்டம் எதிர்காலத்தில் என்னென்ன திருவிளையாடல்களை செய்யப்போகிறார்கள் என்பது பற்றி கொஞ்சம் ஆழமாக சிந்திப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக