ஞாயிறு, 3 நவம்பர், 2024

அமைந்தகரை குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

கலைஞர் செய்திகள் - KL Reshma : சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நிஷாத் என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கும்பகோணம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 16 வயது ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.
வீட்டு பணிகள் மட்டுமின்றி, முகமது நிஷாத்தின் குழந்தை பராமரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்


அந்த சிறுமி. இந்த சூழலில் கடந்த நவ.1-ம் தேதி இந்த சிறுமி, வீட்டின் குளியலறையில் இறந்து கிடப்பதாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் சர்புதீன் என்பவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்த அமைந்தகரை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

அப்போது சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து,
இதனை சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர். இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில், முகமது நிஷாத்தின் 4 வயது மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததாகவும்,
இதனால் அந்த சிறுமியின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று அவரை அடித்ததாகவும், அதன்பிறகே குளிக்க சென்ற சிறுமி அங்கே இறந்து கிடந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு முடிவுகளிலும் சிறுமியின் உடலில் கடும் காயம் ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த சில மாத காலமாகவே அவர்கள், அந்த சிறுமியை தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் தீபாவளியன்று (அக்.31) தாக்கியுள்ளனர். அதில் அந்த சிறுமி இறந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றிய போலீசார், முகமது நிஷாத், அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்கள் லோகேஷ், லோகேஷின் மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகிய 6 பேரையும் போலீசார் நேற்று (நவ.2) கைது செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 போரையும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: