Gudiyattam Kumaran Orator : மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு சென்னை மேயர் திருமதி.பிரியாராஜன் M Com அவர்கள்!
இவர்கள் தான் யார் தன்னால் என்ன முடியும் என்பதையெல்லாம் நிரூபிக்கும் முன்பே எவ்வளவு ஊடகத்தாக்குதலுக்கு உள்ளானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்!
திரு.உதயநிதி நேரடி அரசியலில் வந்த பொழுது வாரிசு வாரிசு என்று சொல்லி கூக்குரலிட்டு கும்பல் இன்னும் 30-40 ஆண்டுகள் ஆனாலும் அதையே தான் பாடும் அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்திக்கொண்டே இருக்க எழுதப்படாத சட்டம் இயற்றுவார்கள், அதே போல் அன்று வரை யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத இன்றைய மாண்புமிகு சென்னை மேயர் அவர்களை தளபதியார் அறிவித்த பொழுது ,அவ்வளவு காலம்-திரு.உதயநிதிக்கு என்ன என்ன அளவு கொள் எல்லாம் வைத்தார்களோ அதையெல்லாம் 100% கொண்ட நமது சென்னை மேயரை வார்த்தை தாக்குதலால் சிறுமை படுத்தி ஒரு ஊடக தாக்குதலே நடத்தினார்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக!
ஆம் !
என்ன அந்த அளவுகோல்!
கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்காங்க!
கட்சியில் படித்த இளைஞர்களுக்கு இடம் இல்லையா?
கட்சிக்காக உழைத்த குடும்பமே இல்லையா!
பெண்களுக்கு முக்கியத்துவமே இல்லையா?
கட்சியில் புது முகங்களே இல்லையா?
இதெல்லாம் நம் திமுகழகத்தின் பால் அக்கறைகொண்டு!? பேசும் -அதே சமயம் உதயாவிற்கு என்ன தகுதி? என்ற ரீதியில் வைக்கப்படும் ஒரு நடுநிலை (போர்வை) விமர்சனம்-சரி வாதத்திற்கு ஏற்றுக்கொண்டு !
ஆம் மேற்படி எல்லா தகுதியும் கொண்ட ஒருவரை திருமதி பிரியா அவர்களை மேயராக போட்டியிட அறிவித்தவுடன் எழுந்த விமர்சனங்கள் சட்சாத் சங்கிகளிடம் இருந்தும் சாதி சங்கிகளிடமும் இருந்து தான்!
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வென்றார்!
பொறுப்பேற்றதும்-திமுக காழ்ப்பு பிடித்த மேற்படி பேர்வழிகளிடம் இருந்து வந்த விமர்சன தாக்குதல்!
என்ன குழந்தையை எல்லாம் மேயர் ஆக்குறீங்க!
பேசுறதே மழலையா இருக்கு!
தமிழ் இங்கிலிஷ் கலந்து கலந்து பேசுறாங்க!
மாவட்டசெயலாளருக்கு பொம்மையாக தான் இருக்கணும்!
தலைமையின் குடும்பம் சொல்லற படி தலையாட்டனும்!
கிருத்துவ தலித் என்ற அவதூறு!
இது எல்லாம் அவர் யார் -என்ன செய்வார் என்று தெரியாமல் அவரை பார்த்து-பேசுவதை சார்ந்த சமூகத்தை மட்டும் வைத்து பேசிய வார்த்தைகள்!
சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்து சராசரியான குடும்பம் -திருமணம் ஆகி சிலவருடம் ஆனா பெண் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடக உலகத்தில் இதையெல்லாம் பார்த்து மிரளாமல் -கொடுத்த பொறுப்பை தன்னால் ஆனா என்பதை தாண்டி உள்ளபடியே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்!
50 ஆண்டுகாலம் உழைப்பால் உயர்ந்த தலைவர் நமது தளபதி ஒரு புறம்-ஏற்கனவே இரு முறை அமைச்சர் கட்சியில் மிக உயரிய பொறுப்பு கொண்ட நேரு அண்ணன் ஒரு புறம்-கள அரசியல் அசுரர்கள் அண்ணன் மாசு, அண்ணன் சேகர்பாபு-இவர்களுக்கு நடுவே மேயராக பெயரும் எடுக்கவேண்டும்-தன் தளபதி தனக்கு தன்னை நம்பி கொடுத்த பொறுப்பை கெடாமல் காக்கவேண்டும்-மேயராக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை சமாளிக்க வேண்டும்-மக்களை சந்திக்கவேண்டும்-இதற்கிடையில் சில்லறை சங்கிகளுக்கு தன் நடவடிக்கை மூலம் நிரூபிக்க வேண்டும் என்று பல்முனை அழுத்தம் என்று கூட சொல்லலாம்-29 வயது என்பது சிறு வயது இல்லை என்றாலும் சுற்றி நிற்கும் கழக முன்னோடிகளுக்கு முன்னால் இளையவர் தான்!
இவ்வளவு பெரிய முன்னுரை சொல்ல காரணம் ஒன்று உண்டு!
ஆம்! நேற்றைய சென்னை மழை!
இவர் மேயர் ஆனதும் இவருக்கு கொடுக்கப்பட்ட பணி சிங்காரச்சென்னை 2.0 அதாவது தளபதியின் கனவு நகரத்தை நிர்மாணிக்க போகும் தளபதியின் கண்களாக நேரடி கண்காணிப்பில் பணிபுரியக்கூட முக்கியமான பொறுப்பு-ஒவ்வொரு நாளும் இவர் சென்னையை சுற்றி வந்து செய்த பணிகள்-மக்கள் சந்திப்பு-நிர்வாக ரீதியான அலுவல்கள்-அமைச்சர்களின் வழிகாட்டுதலுடன் கூடிய திட்டங்கள் என்று சுற்றி சுழன்று வந்தார்!
இந்த இடத்தில் அவரின் சமூக வலைதள பக்கத்தை குறிப்பிடுகிறேன் PriyaRajan DMK -நேரம் கிடைக்கையில் ஒரு முறை பார்த்துவிடுங்கள்!(அவரின் பணிக்காக)
இதற்கிடையில் அண்ணண் நேரு மாண்புமிகு மேயர் அவர்களை வேகமாய் கூப்பிட்டு நிற்க சொன்னார் என்றும் அண்ணன் சேகர்பாபு குடை விஷயமும் சமீபத்தில் கூட வைரலாய் பரப்பினார்கள்-சமீபத்தில் கூட இவர் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசியதை சங்கிகளும் தும்பிகளும் கேலிகிண்டல் செய்தார்கள்!
எல்லாவற்றிக்கும் மொத்தமாய் பதிலடியாக சென்னை உள்கட்டமைப்பு-வடிகால் விஷயங்களில் கொடுத்து இருக்கிறார்-நேற்று இரவு மழைக்கு நடுவே ஊடகவியலாளருக்கு தெளிவாய் பிசிரு தட்டாமல் மழைக்கு ஏற்பாடாய் செய்யப்பட்ட விஷயங்களை அடுக்குகிறார்!
மழைக்கு அலெர்ட் கொடுத்து இருக்கிறோம்!
எல்லா zonal officer ம் 24X 7 ல இருக்காங்க!
எங்க எங்க Water Flow கம்மியா இருக்கு ன்னு check பண்ணுறோம்!
Discharge point check பாக்குறோம்!
மாநகராட்சி ஊழியர்கள்!
மின்சார துறை சம்மந்தமாக பேசுறோம்!
கண்காணிப்பு வார்ட் வாரியா செய்யுறோம்!
வடிகால் சிறப்பா வேலை செய்யுது!
என்று சென்னை வரைபடத்தை விரல் நுனியில் வைத்து பேசிக்கிட்டே இருக்காங்க மாண்புமிகு சென்னை மேயர்!
சென்ற வருடம் செப் 2021 நாம் பார்த்த சென்னை வெள்ளத்திற்கும் இன்று பார்க்கும் மழைக்கும் எவ்வளோ பெரிய மாற்றம் நிம்மதி!
எங்கும் மின்சார துண்டிப்பு இல்லை!
இடுப்பளவு தண்ணீரில் வீடுகள் இல்லை!
மூழுகிய கார் பைக் இல்லை!
மக்களுக்கு உணவு பொருட்கள் கொடுக்கும் நிலை இல்லை!
கடந்த வருடத்தைவிட 80% அளவு சாலையில் நீர்தேங்கி ஆடுகள் boat விளையாட்டு விளையாட முடியாத சூழலில் நமது தலைநகரம் சென்னை!
இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு வேலைகள்-ஆயிரம் மூத்தவர்கள் ஆலோசனை-வழிகாட்டுதல் இருந்தாலும்-ஒரு மனித ஆற்றலின் ஈடுபாடும் பங்களிப்பும் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்கும் கொடுத்திருக்கிறது என்றால் அதில் மாண்புமிகு மேயர் அவர்களின் சீரிய பங்களிப்பு மிக முக்கியமானது!
அந்த அளவு அவர் உழைத்திருக்கிறார்!
பொம்மை,குழந்தை ,மழலை என்று யாரெல்லாம் கிண்டல் செஞ்சானோ அவனெல்லாம் இன்னமும் போட்டோஷாப் பண்ணிகிட்டே இருக்கானுங்க-பார்த்து கத்துக்கொள்ளுங்கள்!
நாம் தான் நம் மேயரை பாராட்டணும் -வேறு யார் பாராட்டுவார்கள் !
இன்னும் உழையுங்கள்-இன்னும் உயரத்திற்கு வருவீர்கள்!
மனமார்ந்த வாழ்த்துகள்-பாராட்டுக்கள்!
உங்கள் சேவை தொடரட்டும் மாண்புமிகு சென்னை மேயர் அவர்களே!
உட்கட்டமைப்பு நிர்வாகத்தில் அசுரன் என்பதை மீண்டும் உங்களை வைத்து உறுதிபடுத்தி இருக்கிறார் நமது முதல்வர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள்!
வாழ்த்துகளும்-நன்றியும்!
Gudiyattam Kumaran Orator
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக