Muruganantham Ramasamy : இந்த படத்தில் இருக்கும் ஓதவ் பட்டேலின் ஒரோவா நிறுவனம்தான் மோர்பியில் விபத்திற்குள்ளான பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்றது.
கொசு அடிக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் எப்படி பாலம் புனரமைக்கும் ஒப்பந்தம் பெற்றது என எந்த ஊடகம் நீதிமன்றம் ஒருவனும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டானுக..
எப்படி ஒரு ஸ்க்ரூ கூட தயாரிக்காத அனில் அம்பானிக்கு ரஃபேல் விமான ஒப்பந்தம் கிடைச்சதுனு ராகுல்காந்தி கரடியா கத்துனப்ப அது அப்படித்தான் அதுல என்ன தப்பு?
ஹெச். ஏ .எல் க்கு திறமை போதாதுனு சஙகிகளை விட அதிகமா ஆத்துனது ஊடகத்தானுகளும் இந்தக்கேள்வியெல்லாம் காதுலயே வாங்காத நீதிமான்களும் மோசமான அயோக்கியர்கள்.
இப்ப பாருங்க பாலத்த புனரமைக்கறன்னு கிளம்புன மாநில அரசாங்கத்தின் முதலமைச்சர்,
அமைச்சர், திறந்து வெச்சு தேர்தல் ஆதாயம் தேடப் பார்த்த பிரதமர் மாவட்ட நிர்வாகம், இதுக்காகவே தேர்தல் தேதிய அறிவிக்காம தள்ளிப்போட்ட தேர்தல் ஆணையம், இவனுக எவனும் பொறுப்பில்ல..
பாலத்துல போனவங்கதான் காரணம்னு ஊத ஆரம்பிச்சுட்டானுக.. கேஸ் யார்மேல போட்ருக்கானுக தெரியுமா?
டிக்கெட் கொடுக்கற க்ளர்க்குக மேல..
இவனுக பரிபாலனம் பன்ற நாடு வெளங்கும்ங்கறீங்க..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக