ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

எம்ஜியார் அடியாள்ன்னா சும்மாவா? ஒரு சாராய ரவுடிக்கு கஜானாவை திறந்து விட்ட பொன்மன பம்மல்


 ஆலஞ்சியார் 
:   கோவில் ஆக்ரமிப்புகள் அகற்றபட்டும், அத்துமீறி கையகபடுத்தியவை மீட்கபட்டும் வருகின்றன ..வக்ப் நிலங்கள் பெருமளவில் சிலரின் ஆதிக்கத்தில் இருப்பது கண்டறியபட்டிருக்கிறது விரைந்து மீட்கபடும்.. கல்விச்சாலைகள் ஆக்ரமிப்புகள்  மீட்கபடுவது மகிழ்ச்சி தருகிறது ..சரியான நபரிடம் ஆட்சியை தந்திருக்கிறார்கள் மக்கள்
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கொப்ப அறநெறிமாறாத அரசு அமைந்திருக்கிறது ..
.ஜேப்பியார் ..
எம்ஜிஆரின் அடியாள் என்று அறியபட்டவர் யாரையாவது மிரட்ட வேண்டுமெனில் ஜேப்பியாரை தான் எம்ஜிஆர் அனுப்புவார்..
ஜெயலலிதா குடும்பவாழ்க்கைக்கு ஆசைபட்டு சோபன்பாபுவோடு இருந்தபோது அவரை மீடக ஜேப்பியாரைதான் அனுப்பினார்  அதை ஜேப்பியாரே சொல்லியும் இருக்கிறார் ..
இடையில் அடைக்கலம் தந்த ஜெய்சங்கரிடமிருந்து மீட்டு ஒரிரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு எம்ஜிஆரிடம் சேர்த்ததாக அவர் எழுதியது ஞாபகம் வருகிறது ..எம்ஜிஆர் காலத்தில் கள்ளசாராயம் வழிந்தோட காரணமானவர்..
சார்பட்டாவில் கூட இவரின் நினைவு வந்தது .. எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவரிடமிருந்து பதவியை பிடுங்கி திருநாவுகரசுவிடம் எம்ஜிஆர் தந்தபோது  ஜேப்பியாரை சமாதானபடுத்த எம்ஜிஆர் அளித்த கொடை  இந்த புறம்போக்குநிலங்கள்
அதில் கல்லூரியை எழுப்பி இன்று கல்வியாளராக நம்பவைக்கபடுகிறார்.. சாராய வியாபாரிகள் விஸ்வநாதன் போன்றோரையும் கல்வியாளராக ஆக்கியதில் குடிகாரனாக கூட நடிக்காத பொன்மனசெம்மலுக்கு பெரும்பங்குண்டு ..
..
இன்று 91, ஏக்கர் நிலங்கள் மீட்கபட்டிருக்கின்றன சந்தை மதிப்பு ₹6010 கோடி என்கிறார்கள் இப்படி நிறைய கல்வி நிறுவனங்கள் நீர்நிலைகள் மீது கட்டிடங்கள் எழுப்பியிருக்கின்றன வடிகால்கள் மூடபட்டு தண்ணீர் தேங்குகிறநிலை .. சிறுமழையை கூட தாங்கமுடியாமல் வழிந்தோட வழிதடமில்லாமல் தத்தளிக்கிறது .. நிறைய கிராமங்களில் பள்ளிகள் கூட குளங்களை ஆக்ரமித்திருக்கின்றன ஒழுக்கத்தை நேர்மையை போதிக்கவேண்டிய கல்விசாலைகள் ஆக்ரமிப்பில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு கேட்டை விதைப்பதை போல..
..
சாஸ்திரா பல்கலைகழக ஆக்ரமிப்பு நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் காலதாமதபடுத்துவதை தவிர்க்கவேண்டும் பெரும் அழுத்தம் தரபடலாம் ஆனாலும் விரைந்து அகற்றபடவேண்டும்.   எங்கெல்லாம் நீர்நிலைகளில் கல்விநிலையங்கள் வணக்க, வழிபாட்டுதளங்கள், கோவில் மசூதி தேவாலயம் எம்மதமாகினும் அகற்றிடவேண்டும்.. திடீர் கோவில்கள் அடக்கத்தலங்கள் எதுவாகினும் அகற்றி தூய்மைபடுத்திடல் அவசியம்..
..
துணிவும் நேர்மையும் அறநெறி அரசியலும் கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இதை செய்து முடிப்பார் .. மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாக்களித்தது பொய்த்திடவில்லை இன்னமும் நிறைய ஆக்ரமிப்புகள் உண்டு கல்விநிலையங்கள் பெயரில் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் இல்லாத கடவுளின் பெயரில் வழிநெடுக உண்டு அரசியல் பின்புலத்தில் கொஞ்சமும் அச்சவுணர்வின்றி கயமைகள் அரங்கேறியிருக்கிறது

எல்லாகட்சியிலும் இப்படி சிலர்  ..
தொடர்ந்து ஆக்ரமிப்புகளும் அத்துமீறி விதிமுறைகளை மீறி கட்டபட்டவைகள் கடவுளின் பெயரின் இருந்தாலும் அகற்றபட்டு  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் ..
கொண்டுவருவார் நம் முதல்வர் தளபதியார்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: