சனி, 25 செப்டம்பர், 2021

முதல்வர் ஸ்டாலினுக்கு பிகார் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை! ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தாருங்கள்

Velayuthan Murali | Samayam Tamil  : ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அங்கு ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவும் இதே நிலைப்பாட்டில் இருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என, அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கக் கோரி, தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பா.ஜ.க., இல்லாத 33 கட்சித் தலைவர்களுக்கு, பீஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை ஒன்று திரண்டும் வகையில் அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய பா.ஜ.க., அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தும், பா.ஜ.க., அரசுக்கு எதிரான அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார்

கருத்துகள் இல்லை: