புதன், 22 ஆகஸ்ட், 2018

கேரளாவுக்கு அமீரகம் கொடுக்கும் 700 கோடியை தடுக்கும் மத்திய அரசு .. பினராயி விஜயன் கோரிக்கை

கேரளாவுக்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதி வழங்க மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கைதிருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மாலைமலர்: கேரளாவில் முதல்வர் தலைமையில் கூடிய மந்திரி சபையில், வெள்ளச் சேதங்கள், மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2600 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை மாநிலத்தை நிர்மூலமாக்கியது.
 மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.
; இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

கேரளாவை மறு கட்டமைத்து சீரமைக்க மத்திய அரசு உடனடி உதவிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்தது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடி நிவாரண நிதி உடனே வழங்கப்படும் என கூறினார்.
அதன் பிறகு வந்த பிரதமர் மோடி கேரளாவின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்து கூடுதலாக ரூ.500 கோடி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த ரூ.600 கோடியும் நேற்று மத்திய அரசு வழங்கியது.
இதற்கிடையே கேரள மந்திரி சபை கூட்டம் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அவசரமாக கூடியது. இதில், கேரளாவின் வெள்ளச்சேதங்கள், மறு கட்டமைப்பு, சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி வழங்க கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதன்படி, முதல் கட்டமாக கேரளாவிற்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டது. இந்த பணம் கிடைத்தால் கேரளம் விரைவில் வெள்ளச்சேத பாதிப்பில் இருந்து மீண்டு வரும் எனவும், இந்த நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டவும், மந்திரி சபை முடிவு செய்தது. வருகிற 30-ந்தேதி இந்த கூட்டம் நடக்கிறது. அதில், மந்திரிசபையில் எடுத்த முடிவுகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

இதற்கிடையே கேரள வெள்ளப்பாதிப்பை மத்திய அரசு தீவிர இயற்கை பேரிடர் ஆக அறிவித்துள்ளதால் பல வெளிநாடுகளும் கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளன.

வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு வழியாகவே வாங்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே இந்திய ரெயில்வே துறையும் கேரள வெள்ள நிவாரணப்பணிகளுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ரூ.200 கோடி நிதி திரட்ட ரெயில்வே இலாகா இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரெயில்வேயில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களும் அவர்களின் ஒருநாள் ஊதியத்தை வெள்ள நிவாரணப்பணிக்கு வழங்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை: