வியாழன், 23 ஆகஸ்ட், 2018

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன! மக்களுக்கு அபாய எச்சரிக்கை

7 shutters of Kollidam dam washed away tamil.oneindia.com -veerakumaran.: திருச்சி: கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
1836-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் திருச்சியையடுத்த முக்கொம்பில் கட்டப்பட்டது மேலணை. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன.
இந்த அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. நீர் வரத்தால், முக்கொம்பு மேலணை நிரம்பி வழிகிறது. எனவே, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியை கடந்து கொள்ளிடத்திற்கு நீர் திறக்கப்பட்டு வந்தது.


தண்ணீரின் அழுத்தம் அதிகரித்த நிலையில், 7 மதகுகள் இன்று இரவு உடைபட்டு சுமார் 90 ஆயிரம் கன அடி நீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

7 shutters of Kollidam dam washed away
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் யாரும், அந்த பக்கம் வரக் கூடாது என்பதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: